பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மெக்சிக்கோவில் போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவன் பிடிபட்டான் PDF Print E-mail
Written by navan   
Sunday, 03 January 2010 12:08
AddThis Social Bookmark Button

மெக்சிக்கோவில் தனது குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் இரண்டு தலைமுறையாக போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலின் தலைவனான கார்லொஸ் பெல்ட்ரான் லெய்வா பசுபிக் கடலோரப்பகுதியின் முக்கிய நகரமான குலியகானில் உள்ள அவனது வீட்டில் வைத்து சனிக்கிழமை இரவு மெக்சிக்கோ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

இக்கைது நடவடிக்கையின் போது அவன் தன்னுடன் இரு துப்பாக்கிகளையும், பல ரகசியக் குழுக்களுடன் தொடர்பு கொள்ள உதவும் மின்னணு அட்டைகளையும், வேறு ஒரு நபரின் பெயரில் போலி சாரதி அனுமதிப் பத்திரத்தினையும் வைத்திருந்தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

40 வயதாகும் லெய்வா மெக்சிக்கோவின் பல கடத்தல் கும்பல்களின் வழிகாட்டியாக செயற்பட்டவன் ஆவான். இவனின் இரு சகோதரர்களான அர்துரோ மற்றும் மரியோ ஆகியோர் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய கடத்தல் குற்றவாளிகள் என்பதுடன் மெக்சிக்கோ இராணுவத்திற்கே சவால் விடக் கூடிய மிகப்பெரிய ஆயுதக் குழுக்களுடன் இவர்கள் தொடர்பு வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களில் இரு கிழமைக்கு முன்பு கியோர்னவக்கா நகர மத்தியில் அரச படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மிகவும் அபாயகரமானவனாகக் கருதப்பட்ட அர்துரோ கொல்லப்பட்டான். மற்றைய சகோதரனான மரியோ மெக்சிக்கோ அரசாங்கத்தால் தேடப்பட்டு வரும் 24 முக்கிய போதைக் கடத்தல் குற்றவாளிகளில் ஒருவனாக பட்டியல் இடப்பட்டுள்ளதுடன் இவன்      இருக்கும் இடத்தைக் காட்டித் தருபவர்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 03 January 2010 12:17
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது