பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

அமெரிக்காவின் விசாரனைகளுக்கு பதில் அளிக்காத நிலையில் நேற்று நாடு திரும்பினார் சரத் பொன்சேக!
Written by Sara   
Friday, 06 November 2009 09:35
AddThis Social Bookmark Button
போர்க் குற்றங்கள் தொடர்பில் அமெக்காவின் கேள்விகளுக்கு பதிலளிக்காத நிலையில் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று அதிகாலை அவசரமாக நாடு திரும்பினார். அமெரிக்காவிலிருந்து நேற்று முன்தினம் காலை புறப்பட்ட அவர் அங்கிருந்து குவைத் ஊடாக சிறிலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல். 218 விமானத்தின் மூலம் நாடு திரும்பினார்.
 பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் கட்டுநாயக்கா விமான நிலையத்தை நேற்று அதிகாலை 4.35 மணியளவில் வந்தடைந்த சரத் பொன்சேகாவை ஊடகவியலாளர்கள் எவரும் சந்திக்க இடமளிக்கப்படாத நிலையில் பாதுகாப்பு தரப்பினரால் அவசரமாக அவர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார்.

தனிப்பட்ட ரீதியிலான விஜயமொன்றினை மேற்கொண்டு கடந்த 31ஆம் திகதி தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றிருந்த சரத் பொன்சேகா, அந்நாட்டுப் பிரஜாவுரிமையைப் பெற்றவர் என்பதோடு அங்கு நிரந்தர வதிவிடத்தையும் கொண்டவராவார். இந்நிலையில் அங்கு தங்கியிருந்த சரத் பொன்சேகாவிடம், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் நேர்முக விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் ஜெனரல் பொன்சேகாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மேற்படி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மைக்கல் டெரன்டினோ, குறித்த நேர்முக விசாரணைக்காக ஹொக்ளஹோமா நகரில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு மற்றும் சுங்க அலுவலகத்துக்கு 4ஆம் திகதி மாலை வருகை தருமாறு அழைத்திருந்தார்.

இதனையடுத்து அமெரிக்காவின் இந்த விசாரணை தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை தொடர்பு கொண்டு அறிவித்தார். இது தொடர்பான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் உரிய விசாரணைகளை தடுத்து நிறுத்துவதற்கான இராஜதந்திர முனைப்புக்களும் தீவிரப்படுத்தப்பட்டன.

பாதுகாப்பு செயலாளருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவை தகவல் ஆதாரமாகப் பயன்படுத்தவே அமெரிக்கா இவ்வாறானதொரு நேர்முக விசாரணையை நடத்த ஏற்பாடு செய்தள்ளது என்று கருதிய அரசாங்கம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

அத்துடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ழூசியா புரூட்னஸ்ஸைத் தொடர்பு கொண்ட ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, இது தொடர்பில் அவரிடமும் விசாரித்தார். இருப்பினும் இந்த நேர்முக விசாரணை தொடர்பில் தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை என்று தூதுவர் அவரிடம் கூறினார்.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம மற்றும் அமெரிகாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய ஆகியோர் உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக்கை தொடர்பு கொண்டு இது தொடர்பில் விசாரித்தனர்.

அவரும் தனக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது என்று தெரிவித்து விட்டார்.

இந்நிலையிலேயே சரத் பொன்சேகாவை நாட்டுக்கு திருப்பி அழைக்கும் ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. அந்த ஏற்பாடுகளின் பிரகாரம் நேற்று அதிகாலை ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட அவரது குடும்பத்தினர் பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நாடு திரும்பினர்.

கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகள் சூடு பிடித்திருந்த நிலையில் அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட சிரேஷ்ட தலைவர்கள் அனைவரும் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர் எனவும்

அதன்மூலம் நாட்டிலிருந்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டது என்றும் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் காப்பாற்றப்பட்டனர் என்றும் அரசாங்கம் அறிவித்தது.

இந்நிலையில் இறுதிக்கட்டப் போர் நடவடிக்கைகளின் போது அரசாங்கமும் விடுதலைப் புலிகள் இயக்கமும் கடுமையான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தினால் கடந்த மாதம் 67 பக்க அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விடுக்கப்பட்ட அந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த அரசாங்கம், இது தொடர்பில் துரித விசாரணைகளை நடத்துவதாகவும் அந்த திணைக்களத்திடம் உறுதியளித்தது.

இவ்வாறானதொரு நிலைமையிலேயே அமெரிக்கா சென்றிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம் நேர்முக விசாரணை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 06 November 2009 09:42
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது