இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
| நந்தன குணதிலக்க, கமல் தேசப்பிரிய - தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விலகினர் |
| Written by Sara |
| Friday, 06 November 2009 11:25 |
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் அமைச்சர் நந்தன குணதிலக மற்றும் கமல் தேசப்பிய ஆகியோர் நேற்று வியாழக்கிழமை இராஜினாமாச் செய்தனர்.இதற்கான எழுத்து மூலமான அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளரிடம் இவர்கள் கையளித்துள்ளனர். 2008ஆம் ஆண்டு ஜே.வி.பி.யிலிருந்து பதினொரு எம்.பி.க்களுடன் பிரிந்து சென்று விமல், வீரவன்ச எம்.பி.யின் தலைமையில் தேசிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்தனர்.இதன் ஆரம்ப விழா 2008 மே மாதம் 01ஆம் திகதி கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கற்கை நிலைய மண்டபத்தில் கோலாகலமாக நடத்தப்பட்டது. இம்முன்னணியின் செயலாளராக தற்போது அமைச்சர் பதவி வகிக்கும் நந்தன குணதிலகவும், தேசிய அமைப்பாளராக கமல் தேசப்பிரியவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையிலேயே தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி சுற்றுலாத்துறை மற்றும் கலாசார அமைச்சுப் பதவிகள் இரண்டை பெற்றுக் கொண்டனர். இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே முன்னணியின் தலைமையுடன் மேற்கண்ட இருவருக்கும் முரண்பாடான நிலைமைகள் தோன்றியதோடு அது வெளியே தெரியாது உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்ததோடு தேசிய அமைப்பாளரான கமல் தேசப்பிய கட்சி நடவடிக்கைகள் எதிலும் கலந்துகொள்வதை தவிர்த்துக் கொண்டார். தற்போது உத்தியோக பூர்வமாக முன்னனியில் வகித்து வந்த பதவிகளிலிருந்தும், அரசியல் சபையிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஒரு வருடத்திற்குள் பிளவுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
| Last Updated on Friday, 06 November 2009 11:42 |
- சரத்பொனசேகா சொந்தக் குரலில் பேசவில்லை - அமைச்சர் ஜி.எல். பீரிஸ்
- கர்நாடக அமைச்சர்களிடம் சிபிஐ அதிரடி விசாரணை !
- முல்லை பெரியாறு அணையை பார்வையிட்ட தமிழக அதிகாரிகள் - மத்திய குழுவிற்கு கேரளா கண்டனம் !
- பாரதிக்கு வயது 127!
- தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறுகிறார் கோத்தபாய - மங்கள சமரவீர
- ஜனாதிபதித் தேர்தல் முடிந்தததும் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு - இந்தியாவிடம் இலங்கை உறுதி
- ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' ஹாலிவுட் திரைப்பட முன்னோட்டம்


.jpg)




பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் அமைச்சர் நந்தன குணதிலக மற்றும் கமல் தேசப்பிய ஆகியோர் நேற்று வியாழக்கிழமை இராஜினாமாச் செய்தனர்.
உங்கள் கருத்துக்கள்