இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

வாக்கெடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை கட்சிகளின் பொது வேட்பாளராகத் தமிழர் யோசனை
 

சினிமா கேலரி

வாங்க பேசலாம்..

சிகிச்சைக்காக சென்ற மனைவியை காணவில்லை - HRW விடம் முறைப்பாடு
Written by Sara   
Friday, 06 November 2009 11:55
AddThis Social Bookmark Button
முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பகுதியில் இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற கடும் சண்டைகளின்போது, பதுங்குகுழியில் பாதுகாப்பிற்காக இருக்கையில் காயமடைந்த தனது மனைவி, இராணுவத்தினரால் சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்பு அவர் இருக்குமிடம் தெரியாததனால், அவரைக் கண்டு பிடிப்பதற்கு அவரது கணவன் சுந்தரலிங்கம் தயாபரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் உதவியை நாடியுள்ளார்.

இது தொடர்பாக சுந்தரலிங்கம் தயாபரன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். தற்போது அவர் வவுனியா  நெலுக்குளம் பிரதேசத்தில், அம்மன் கோவில் வீதி, சாம்பல் தோட்டத்தில் இருக்கின்றார்.

அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி டிப்போச் சந்தி ஐந்து வீட்டுத்திட்டத்தில் நான், எனது மனைவி வேணி என்றழைக்கப்படும் அருந்ததி, எனது மகன் அனுஷனுடன் வாழ்ந்து வந்தேன். ஷெல் தாக்குதல்கள், விமானத் தாக்குதல் நிலைமைகள் காரணமாக நாங்கள் இடம்பெயர்ந்து பல இடங்களுக்கும் சென்று இறுதியாக முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பிள்ளையார் கோவிலில் தஞ்சமடைந்திருந்தோம்.

அந்தப் பகுதியில் நடைபெற்ற கடும் சண்டை காரணமாக, பதுங்குகுழியில் நாங்கள் இருந்தபோது ஷெல் தாக்குதலில் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி எனது மனைவி தலையில் காயமடைந்ததார். அடுத்த நாள் காலை அவரை நாங்கள் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றோம். ஆயினும், அந்தப் பகுதியில் இடம்பெற்ற கடும் சண்டைகள் காரணமாக அவரை மாத்தளனில் இருந்த எனது மாமியார் வீட்டிற்குக் கொண்டு சென்று அங்கு தங்கியிருந்தோம்.

மறுநாள் எங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துசேர்ந்தோம்.

இராணுவத்தினர் எங்களை கைவேலி பாடசாலைக்கு அழைத்துச் சென்று, என்னையும் காயமடைந்த எனது மனைவியையும் வைத்துக் கொண்டு, எனது குழந்தையை எனது மாமியார் குடும்பத்தினருடன் ஓமந்தைக்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பின்னர், எனது மனைவியை சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு ஹெலிக்கொப்டரில் கொண்டு சென்றார்கள். பெயர் விபரங்கள் எதனையும் எடுக்கவில்லை.

என்னை ஓமந்தைக்கு அனுப்பி வைத்தார்கள். நான் எனது மாமியார் குடும்பத்துடன் இணைந்து கொண்டேன். அங்கிருந்து மெனிக்பாம்  வலயம் 4 முகாமுக்கு நாங்கள் கொண்டு செல்லப்பட்டு, கடந்த மாதம் 26ஆம் திகதி எங்களை முகாமில் இருந்து விடுதலை செய்தார்கள். அதன் பின்னர் எனது மனைவியை செட்டிக்குளம், வவுனியா வைத்தியசாலைகளிலும் பூந்தோட்டம் உட்பட பல முகாம்களிலும் புல்மோட்டை, கண்டி, அனுராதபுரம் என பல இடங்களிலும் தேடினோம். ஆனால், எனது மனைவியைக் காணவில்லை.

எனவே, எனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 06 November 2009 12:29
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு