பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஹெய்டிக்கு சென்று வந்த படையினருக்கே சம்பளமில்லை - பாலித்த ரங்கே பண்டா
Written by Sara   
Friday, 06 November 2009 12:22
AddThis Social Bookmark Button
கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்த விடயத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை பாதுகாத்துக் கொள்வதற்கே அரசாங்கம் முயற்சித்தது என்று ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. பாலித்த ரங்கே பண்டார நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கணக்கு வாக்கெடுப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாலித்த ரங்கே பண்டார எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தபோது அதனை கருத்திற்கொள்ளாது, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சிக்கவைக்கும் முயற்சியே இது என்று அரசாங்கத்தினால் கூறப்பட்டது.இந்த விவகாரத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பாதுகாப்பதற்கு பிரயத்தனப்படாத அரசாங்கம் கோத்தபாயவை பாதுகாக்கவே முயற்சித்தது.

இந்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வந்துவிட்டார் என்ற அச்சத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படையினரை சந்தித்து பாதுகாப்புத் தரப்பினருக்கான சம்பளம் அதிகரிக்கப்படுமென கூறியிருக்கிறார். இதன்மூலம் படையினரை ஏமாற்றி விடலாம் என்றே ஜனாதிபதி நினைக்கிறார்.

தேசநிர்மாண வரி பாதுகாப்பு வரி என பல்வேறு வரிகள் யுத்தத்தைக் காரணம் காட்டி அறவிடப்பட்டன. ஆனாலும், இவ்வாறு அறவிடப்பட்ட வரிகளின் மூலம் படையினருக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. படைநடவடிக்கைகளின்போது உயிரிழந்த படையினரின் குடும்பங்களுக்கு முன்னாள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா நட்டஈட்டுத் தொகையே இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலும் வழங்கப்படுகின்றது. யுத்தத்தின்போது 30 ஆயிரம் படையினர் உயிரிழந்துள்ளமையையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இதேவேளை, 2005 டிசம்பரில் ஹெய்ட்டியில் ஐ.நா. படையில் பணிபுரியச் சென்று நாடு திரும்பிய எமது படையினருக்கு ஐ.நா.வில் வழங்கப்பட்ட தொகை இன்னும் சம்பந்தப்பட்ட படையினருக்கு வழங்கப்படவில்லை.

அது மட்டுமல்லாது சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் ஒரே மண்டபத்தில் அமர்ந்து பரீட்சை எழுதும்போது நாமல் ராஜபக்ஷவுக்கு மாத்திரம் இந்த பரீட்சை எழுதுவதற்கு புத்தகங்களுடன் தனியறை வழங்கப்பட்டிருக்கின்றது. அப்படியானால் ஏனையவர்கள் மாணவர்கள் இல்லையா? இதுதான் மஹிந்த சிந்தனை என்றார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 06 November 2009 12:27
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது