பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சவுதியில் சிரச்சேதம் செய்யப்பட்ட இலங்கையர்களிடம் பலவந்த ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதா?
Written by Sara   
Saturday, 07 November 2009 00:43
AddThis Social Bookmark Button
சவூதி அரேபியாவில் திருட்டு, கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த புதன்கிழமை சிரச்சேதம் செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூன்று பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது பலவந்தமாக பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்தே குற்றவாளிகளாக காணப்பட்டனர் என்று நம்பப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்த மூன்று வெளிநாட்டவர்கள் மீதும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை மன்னிப்பு சபை வன்மையாக கண்டித்துள்ளது. சவூதி நகரான ஜித்தாவில் வைத்து இரண்டு இலங்கைப் பெண்கள் உட்பட மூவரும் வாளால் வெட்டி சிரச்சேதம் செய்யப்பட்டனர். 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சவூதி பெண் ஒருத்தியின் வீட்டுக்குள் புகுந்து அப்பெண்ணை மூச்சு திணற வைத்து கொலை செய்துவிட்டு அவரது நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்ததாக குற்றம்சாட்டி 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இலங்கைப் பெண்ணான ஒரு குழந்தையின் தாயார் ஹலிமா நிஸா காதர், அவரது இந்திய கணவரான முஹமத் நௌஷாத் பர்மில் மற்றும் இலங்கைப் பெண்ணான கே.எம்.எஸ். பண்டாரநாயக்க ஆகிய மூவரும் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்ட போது பலவந்தமாக அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே குற்றவாளிகளாக காணப்பட்டடனர் என்று நம்பப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. தடுப்புக் காவலில் வைத்திருந்த போதே நீதிமன்ற விசாரணையின்போதோ இவர்களுக்கு சட்ட பிரதிநிதித்துவத்திற்கு இடமளிக்கப்படவில்லை. இவர்கள் சார்பில் சர்வதேச மன்னிப்புச் சபை திரும்பத் திரும்ப குரல்கொடுத்துள்ளது.

இதேவேளை, இரண்டு இலங்கையர்களும் சிரச்சேதத்திற்கு உட்படுத்தப்பட்டமை பற்றி இலங்கைக்கு அறிவிக்காமல் இரகசியமாக இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் கிங்ஸ்லி றணவக்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 07 November 2009 00:55
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது