விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
நாமக்கல்லில் நல்லதொரு கலெக்டர் !!!..பாராட்டுகள்.......கார்த்திக் & பாலா துபாய்....
அழகுறு மெரீனாவை பொதுமக்கள் பாவனைக்குத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர்.!!..காண்போர் கண்களுக்கு மெரினா ஒர் அழகிய கடற்கரை
அதை திறம்பட
...
நாமக்கல்லில் நல்லதொரு கலெக்டர் !!!..தன் மகன் சான்றோன்ன் என கேட்ட தாயின் உள்ளம்ச சந்தோசம் அடைவது போல்.
...
| சவுதியில் சிரச்சேதம் செய்யப்பட்ட இலங்கையர்களிடம் பலவந்த ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதா? |
| Written by Sara |
| Saturday, 07 November 2009 00:43 |
சவூதி அரேபியாவில் திருட்டு, கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த புதன்கிழமை சிரச்சேதம் செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூன்று பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது பலவந்தமாக பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்தே குற்றவாளிகளாக காணப்பட்டனர் என்று நம்பப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.இந்த மூன்று வெளிநாட்டவர்கள் மீதும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை மன்னிப்பு சபை வன்மையாக கண்டித்துள்ளது. சவூதி நகரான ஜித்தாவில் வைத்து இரண்டு இலங்கைப் பெண்கள் உட்பட மூவரும் வாளால் வெட்டி சிரச்சேதம் செய்யப்பட்டனர். 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சவூதி பெண் ஒருத்தியின் வீட்டுக்குள் புகுந்து அப்பெண்ணை மூச்சு திணற வைத்து கொலை செய்துவிட்டு அவரது நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்ததாக குற்றம்சாட்டி 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இலங்கைப் பெண்ணான ஒரு குழந்தையின் தாயார் ஹலிமா நிஸா காதர், அவரது இந்திய கணவரான முஹமத் நௌஷாத் பர்மில் மற்றும் இலங்கைப் பெண்ணான கே.எம்.எஸ். பண்டாரநாயக்க ஆகிய மூவரும் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்ட போது பலவந்தமாக அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே குற்றவாளிகளாக காணப்பட்டடனர் என்று நம்பப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. தடுப்புக் காவலில் வைத்திருந்த போதே நீதிமன்ற விசாரணையின்போதோ இவர்களுக்கு சட்ட பிரதிநிதித்துவத்திற்கு இடமளிக்கப்படவில்லை. இவர்கள் சார்பில் சர்வதேச மன்னிப்புச் சபை திரும்பத் திரும்ப குரல்கொடுத்துள்ளது. இதேவேளை, இரண்டு இலங்கையர்களும் சிரச்சேதத்திற்கு உட்படுத்தப்பட்டமை பற்றி இலங்கைக்கு அறிவிக்காமல் இரகசியமாக இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் கிங்ஸ்லி றணவக்க தெரிவித்துள்ளார். |
| Last Updated on Saturday, 07 November 2009 00:55 |
- காஷ்மீர் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடு - பொதுமக்கள் பதற்றம்
- இணையத்தளம் மூலம் தமிழகத்தில் பெண்களை ஏமாற்றிய இரு இளைஞர்கள் கைது!
- மேன்மைக் கல்வி
- பணம் காய்க்கும் மரம்!
- சிறந்த முதலீடு குழந்தையின் கல்வி - ஏ.ஆர்.ரஹ்மான்
- ராஜபக்ஷ அரசில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுகின்றது - பிரதி அமைச்சர்
- பிரபாகரன் தப்பிச் செல்லவிருந்த கப்பலே கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாம்.


.jpg)




சவூதி அரேபியாவில் திருட்டு, கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில் கடந்த புதன்கிழமை சிரச்சேதம் செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூன்று பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது பலவந்தமாக பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்தே குற்றவாளிகளாக காணப்பட்டனர் என்று நம்பப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்துக்கள்