பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த பிறகும் ஏன் தொடரும் அவசரகாலச்சட்டம்! - ஜே.வி.பி
Written by Sara   
Saturday, 07 November 2009 09:35
AddThis Social Bookmark Button

அவசரகால சட்டம் என்பது ஒரு அடக்குமுறைச் சட்டமாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே இது பயன்படுத்தப்பட்ட போதிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பின்னரும் அதனை நீடிப்பதற்கு முயற்சிப்பதானது வேறு வகையிலான ஒரு அடக்குமுறயை உருவாக்க அரசாங்கம் நினைக்கின்றதா என்ற கேள்வி ஜே.வி.பி.க்கு எழுவதாக அக்கட்சியின் எம்.பி.யும் குழுக்களின் பிரதித் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று சபையில் தெரிவித்தார்.

இதேவேளை, தமது கட்சியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் நிலைமையை கண்டறிவதற்கான மத்திய நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களையும் கடிதங்களையும் சுட்டிக்காட்டி முகாம்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அனுபவிக்கும் துன்பங்களையும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராமலிங்கம் சந்திரசேகர் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த மே மாதம் 18ஆம் திகதியுடன் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டப்பட்டு விட்டது. அதுதல் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். அவர்களில் 5 ஆயிரம் சிறுவர்கள் தமது பெற்றோரை இழந்து அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் ஊனமுற்றுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு யுத்தத்தினால் 40 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முதியவர்கள் யாரும் அற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அவலத்தை போக்குவதற்காகவே அரசாங்கம் வடக்கின் வசந்தம் எனும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்தது. மக்களும் இதில் அதிகமான நம்பிக்கை வைத்தனர். ஆனால் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டமானது இன்னும் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றது.

முப்பது வருட கால பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நல்லதொரு தீர்வினை நடைறைப்படுத்தாவிட்டால் அது எதிர்காலத்தில் துரதிர்ஷ்டமான ஒரு நிலைமையையே உருவாக்கும்.

வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து அகதிகளாக வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை அறிவதற்கும் அவர்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கும் அத்துடன் அவர்களின் தேவைகளை ஓரளவேனும் நிறைவேற்றுவதற்கும் எமக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்ட போதிலும் அதற்கான சந்தர்ப்பம் எமக்கு இதுவரையில் வழங்கப்படவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கிறோம். தற்போது எமது நிலையத்திற்கு காம்களிலிருந்து ஆயிரக்கணக்கான றைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. அங்கு பெற்றோர், பிள்ளைகளை இழந்தும் உறவுகளை இழந்தும் அவலத்துடன் இருப்பது தொடர்பில் எமக்கு அவர்கள் கடிதம் லம் அறிவித்து வருகின்றனர்.

யுத்த காலப் பகுதியில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம் பிரபாகரனின் பிடியில் இருந்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் தப்பி வந்தவர்கள் காணாமல் போயிருப்பது வேதனையானது. எஞ்சியுள்ள மக்களினது நலம் தொடர்பில் ஒரு வெளிப்படைத் தன்மை வேண்டும்.

கிழக்கு மீட்கப்பட்டுள்ள போதிலும் அங்கு ஜனநாயகம் இருப்பதாக தெயவில்லை. ஆயுத கலாசாரமே ஓங்கியுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரே கிழக்கில் இந்த ஜனநாயக விரோதத்திற்கு உடந்தையாக இருக்கின்றனர். கடத்தல், கப்பம், துப்பாக்கிச் சூடு போன்ற குற்றச்செயல்களும் இடம்பெற்று வருகின்றன. இதேபோல் யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பாஸ் நடைறை அலில் இருக்கின்றது. அங்குள்ள மக்கள் தெற்கிற்கு விஜயம் செய்வதால் கப்பலில் வருபவர்கள் கப்பலிலேயே திரும்ப வேண்டும். விமானத்தில் வருபவர்கள் விமானத்திலேயே திரும்ப வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களுடைய நலனுக்கு உத்தானதல்ல.

தற்போது யாழ்ப்பாணத்திற்கென சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களில் பயணிப்பதற்கு ஒரு பயணியிடமிருந்து 2500 ரூபாவுக்கும் அதிகமான பணம் அறவிடப்படுகிறது. அதேபோல், தாண்டிக்குளத்திற்கு அப்பால் பொருட்களை கொண்டு செல்வதற்காக லொறி ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபா அறவிடப்படுகிறது. இது நியாயமானதல்ல. இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து யாழ். மக்களுக்கு தேவையான போக்குவரத்துக்களை இலகுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

 

இதேவேளை அவசரகாலச்சட்டத்தை நீடிப்பது நியாயமானதல என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தலைவர் இரா.சம்பந்தனும் தெரிவித்திருக்கிறார்.

யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட பின்னரும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது நியாயமானதல்ல. இதனையாரும் நியாயப்படுத்தவும் முடியாது. யுத்தம் முடிந்து விட்டதால் அவசரகாலச் சட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சர்வதேச சட்டங்களுக்கு முரணாகவே மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் நாட்டில் நல்லாட்சியோ, ஜனநாயக ஆட்சியோ, நாகரிகமான ஆட்சியோ நடைபெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு .உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.யுத்தம் முடிந்துள்ள நிலையில் பிரேரணையை நீடிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளூர், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு முரணாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்களோ, ஊடகவியலாளர்களோ, அன்றேல் மக்கள் பிரதிநிதிகளோ பார்க்க இயலாது. அவர்களை பார்வையிடுவதற்கான அனுமதியும் வழங்கப்படுவதில்லை. இடம்பெயர்ந்து வாழ்பவர்களுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்த முடியாத நிலைமையே இருக்கின்றது. இவை உள்நாட்டு, வெளிநாட்டு சட்ட திட்டங்களுக்கு முரணாகவே இருக்கின்றன. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச சமூகம் கோரி நிற்கின்றது. அத்துடன், ஐ.நா.வும் ஏகமனதாக கேட்டுக்கொண்டுள்ளது.

முகாமில் இருக்கின்ற மக்கள் தங்களுடைய சொந்த தீ“ர்மானங்களை தாங்களே எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். உறவினர்களுடன் சேர வேண்டுமா? நண்பர்களுடன் சேர வேண்டுமா? என்பதை அவர்களே முடிவு எடுக்க வேண்டும். இடைத்தங்கல் முகாம்களில் இருந்து கொண்டே உடைந்த தமது வீடுகளை திருத்திக்கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கலாம்.

அவர்கள் அங்கு மீண்டும் தொழில் வாய்ப்புகளை ஆரம்பிக்கக்கூடும். அந்த உரிமை மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் அனுபவிக்கும் உரிமை அந்த மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களுக்குள் அந்த மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. வாக்குரிமையானது இறைமையின் ஓர் அங்கமாகும்.

வவுனியாவிலுள்ள முகாம்களை விடவும் இடைத்தங்கல் முகாம்களின் நிலையானது மிகமோசமானது என்பதனால் மக்களை தடுத்து வைத்திருப்பது உகந்தது அல்ல. சாதாரண மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அந்த மக்களும் அனுபவிக்க வேண்டும்.
மிருகங்களை போல தடுத்து வைக்கப்பட்டிருப்பதனை ஏற்கமுடியாது. இதுவே சர்வதேசத்தின் முறைப்பாடாக இருக்கின்றது.

இடம்பெயர்ந்தவர்களுக்கு 5000 ரூபாவும் உணவுப் பண்டங்களும் பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஏனைய உதவிகள் வழங்கப்படுவதில்லை. கௌரவமாக வாழ்ந்தவர்கள் இன்று அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

உழைக்கும் மார்க்கத்தை இழந்துவிட்டனர் என்பதானல் மார்க்கங்களை ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சர்வதேச தொண்டு நிறுவனங்களை சுதந்திரமாக அப்பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டும். அவர்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் செல்வதை தடுக்க வேண்டாம்.

இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்கியுள்ளன. பல நாடுகள் வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இவர்கள் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்வரவில்லை, மக்களுக்கே வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அறிகின்றேன்.அவற்றை செய்யாவிட்டால் உதவிகளே கிடைக்காமல் போகும்.

ஜனாதிபதி 50 வீதம் வாக்குகளைப்பெற்று ஆட்சியிலிருக்கின்றார். கூட்டமைப்பில் 22 உறுப்பினர்கள் இருக்கின்றோம். நாம் கூறுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில்லை.இங்கு நாகரிகமான ஆட்சியோ, நல்லாட்சியோ, ஜனநாயக ஆட்சியோ இடம்பெறவில்லை என்பதனாலும் யுத்தம் நிறைவடைந்து விட்டமையினாலும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதனை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

இதேவேளை, 10 ஆயிரம் பேர் முதல் 15ஆயிரம் பேர்வரை விசேட தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாமல் உறவினர்கள் தவிக்கின்றனர். எனவே, விசேட தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் தொடர்பான விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 07 November 2009 09:59
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது