இலவச நியூஸ்லெட்டர்..
இது புதிசு!
4தமிழ் மீடியாவின் அனைத்து ஆடியோ நிகழ்ச்சிகளையும் டவுண்லோட் செய்ய இங்கே.
தொலைபேசியில் கேட்டு மகிழ முகவரி. http://my.podcast.com/4tamilmedia/mobile/
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
இலங்கை இந்தியத் தூதரக தொலைபேசி உரையாடல்கள் இரகசியப் பதிவு ?!!..the dog srilanka is always dubt with tamil people . she never lay down with tamilan. one day the srilanka ruled by tamilan only .it may be very long but it is sure.she
...
தூங்காதே_துவளாதே_1!!..இதை நீங்கள் தொலைகாட்சியில் ஒலி பரப்ப வேண்டும்
...
புதிதாகத் தோன்றியுள்ள மக்கள் இராணுவமும், பலத்த சந்தேகங்களும்!!..குட்டையை கலக்கி மீன் பிடிக்கும் உபாயம்
...
| பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த பிறகும் ஏன் தொடரும் அவசரகாலச்சட்டம்! - ஜே.வி.பி |
| Written by Sara |
| Saturday, 07 November 2009 09:35 |
|
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராமலிங்கம் சந்திரசேகர் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த மே மாதம் 18ஆம் திகதியுடன் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டப்பட்டு விட்டது. அதுதல் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். அவர்களில் 5 ஆயிரம் சிறுவர்கள் தமது பெற்றோரை இழந்து அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் ஊனமுற்றுள்ளனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு யுத்தத்தினால் 40 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முதியவர்கள் யாரும் அற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அவலத்தை போக்குவதற்காகவே அரசாங்கம் வடக்கின் வசந்தம் எனும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்தது. மக்களும் இதில் அதிகமான நம்பிக்கை வைத்தனர். ஆனால் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டமானது இன்னும் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றது. முப்பது வருட கால பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நல்லதொரு தீர்வினை நடைறைப்படுத்தாவிட்டால் அது எதிர்காலத்தில் துரதிர்ஷ்டமான ஒரு நிலைமையையே உருவாக்கும். வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து அகதிகளாக வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை அறிவதற்கும் அவர்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கும் அத்துடன் அவர்களின் தேவைகளை ஓரளவேனும் நிறைவேற்றுவதற்கும் எமக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்ட போதிலும் அதற்கான சந்தர்ப்பம் எமக்கு இதுவரையில் வழங்கப்படவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திடம் மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கிறோம். தற்போது எமது நிலையத்திற்கு காம்களிலிருந்து ஆயிரக்கணக்கான றைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. அங்கு பெற்றோர், பிள்ளைகளை இழந்தும் உறவுகளை இழந்தும் அவலத்துடன் இருப்பது தொடர்பில் எமக்கு அவர்கள் கடிதம் லம் அறிவித்து வருகின்றனர். யுத்த காலப் பகுதியில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம் பிரபாகரனின் பிடியில் இருந்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் தப்பி வந்தவர்கள் காணாமல் போயிருப்பது வேதனையானது. எஞ்சியுள்ள மக்களினது நலம் தொடர்பில் ஒரு வெளிப்படைத் தன்மை வேண்டும். கிழக்கு மீட்கப்பட்டுள்ள போதிலும் அங்கு ஜனநாயகம் இருப்பதாக தெயவில்லை. ஆயுத கலாசாரமே ஓங்கியுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரே கிழக்கில் இந்த ஜனநாயக விரோதத்திற்கு உடந்தையாக இருக்கின்றனர். கடத்தல், கப்பம், துப்பாக்கிச் சூடு போன்ற குற்றச்செயல்களும் இடம்பெற்று வருகின்றன. இதேபோல் யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பாஸ் நடைறை அலில் இருக்கின்றது. அங்குள்ள மக்கள் தெற்கிற்கு விஜயம் செய்வதால் கப்பலில் வருபவர்கள் கப்பலிலேயே திரும்ப வேண்டும். விமானத்தில் வருபவர்கள் விமானத்திலேயே திரும்ப வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களுடைய நலனுக்கு உத்தானதல்ல. தற்போது யாழ்ப்பாணத்திற்கென சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களில் பயணிப்பதற்கு ஒரு பயணியிடமிருந்து 2500 ரூபாவுக்கும் அதிகமான பணம் அறவிடப்படுகிறது. அதேபோல், தாண்டிக்குளத்திற்கு அப்பால் பொருட்களை கொண்டு செல்வதற்காக லொறி ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபா அறவிடப்படுகிறது. இது நியாயமானதல்ல. இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து யாழ். மக்களுக்கு தேவையான போக்குவரத்துக்களை இலகுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
இதேவேளை அவசரகாலச்சட்டத்தை நீடிப்பது நியாயமானதல என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தலைவர் இரா.சம்பந்தனும் தெரிவித்திருக்கிறார். யுத்தம் முடிவுக்கு வந்து விட்ட பின்னரும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது நியாயமானதல்ல. இதனையாரும் நியாயப்படுத்தவும் முடியாது. யுத்தம் முடிந்து விட்டதால் அவசரகாலச் சட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். சர்வதேச சட்டங்களுக்கு முரணாகவே மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் நாட்டில் நல்லாட்சியோ, ஜனநாயக ஆட்சியோ, நாகரிகமான ஆட்சியோ நடைபெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.யுத்தம் முடிந்துள்ள நிலையில் பிரேரணையை நீடிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளூர், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு முரணாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்தவர்களுக்கு 5000 ரூபாவும் உணவுப் பண்டங்களும் பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஏனைய உதவிகள் வழங்கப்படுவதில்லை. கௌரவமாக வாழ்ந்தவர்கள் இன்று அகதிகளாக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அறிகின்றேன்.அவற்றை செய்யாவிட்டால் உதவிகளே கிடைக்காமல் போகும். |
| Last Updated on Saturday, 07 November 2009 09:59 |
- ரொபர்ட் ஓ பிளேக் சரத் பொன்சேகவை சந்திக்கிறார்
- சிறிலங்காவிற்கு எதிராக டென்மார்க்கில் போர்க்குற்ற வழக்கு பதிவு.
- இலங்கையின் புதிய போராட்ட குழுவுக்கும் எமக்கும் தொடர்பில்லை - பலஸ்த்தீனம் அறிவிப்பு!
- இலங்கையின் புதிய போராட்ட குழுவுக்கும் எமக்கும் தொடர்பில்லை - பலஸ்த்தீனம் அறிவிப்பு!
- இனிக்கும் இலக்கியம் - பகுதி 7
- உங்கள் கையில்...
- பக்தாத்தில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் - 118 பேர் பலி!


.jpg)





அவசரகால சட்டம் என்பது ஒரு அடக்குமுறைச் சட்டமாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே இது பயன்படுத்தப்பட்ட போதிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பின்னரும் அதனை நீடிப்பதற்கு முயற்சிப்பதானது வேறு வகையிலான ஒரு அடக்குமுறயை உருவாக்க அரசாங்கம் நினைக்கின்றதா என்ற கேள்வி ஜே.வி.பி.க்கு எழுவதாக அக்கட்சியின் எம்.பி.யும் குழுக்களின் பிரதித் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று சபையில் தெரிவித்தார்.
உங்கள் கருத்துக்கள்