விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

வடக்கில் இடம்பெற்ற படுகொலைக்கு காரணம் மஹிந்த, சரத் இருவருமே - விக்ரம பாகு கருணரட்ண
Written by Sara   
Thursday, 26 November 2009 00:53
AddThis Social Bookmark Button
யுத்த வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் ஜெனரல் சரத் பொன்சேகாவா? அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவா? என்ற ஒரு வாதம் தற்பொழுது முன்வைக்கப்படுகின்றது. ஆனால், வடக்கில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு யார் காரணம் என நாம் கேட்கவிரும்புகிறோம் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும், அக்கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

நிப்போன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இடதுசாரி முன்னணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சமத்துவம், சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும். அப்படியான ஒரு அரசு இருந்தால் மட்டுமே ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் நிலவ முடியும்.

நாட்டின் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படாமையினால், நாம் துன்ப துயரங்களை அனுபவித்து வருகின்றோம். ஆகையால், அப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது மட்டுமன்றி, சர்வதேச தலையீடுகளையும் நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியும். மாறாக, சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலின்படி செயற்படுவதால் புதிய புதிய பிரச்சினைகளே தோன்றும்.

இந்தியா மற்றும் உலக மேலாதிக்க நாடுகளின் உதவியுடன் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், தமிழர் எழுச்சியைக் கட்டுப்படுத்தியது. அது பெரிய வெற்றி எனவும் கொண்டாடப்படுகிறது. ஆனால், உண்மையில் எமது நாடு சின்னாபின்னமாக்கப்பட்டு, தமிழர்கள் கையேந்தும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களின் கடும் போக்கினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும், ஊனமுற்றும் போயுள்ளனர். வடக்கு  கிழக்கிலும் சரி, தென்னிலங்கையிலும் சரி, அதே நிலைதான்.

இது ஒருபுறம் இருக்க, நாட்டின் சகல பாகங்களிலும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பின்றித் தவிக்கின்றனர். வாழ்க்கைச் செலவும் தாங்கமுடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதுடன், உழைக்கும் மக்கள் யுத்தச் செலவினங்களை சுமப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தமது உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர் வர்க்கத்தினரை அடக்கி ஒடுக்கும் நடைமுறையையும் இந்த அரசாங்கம் கையாண்டு வருகிறது. அத்தோடு, இந்தியாவினதும் உலகளாவிய கம்பனிகளினதும் அசுரப்பிடிக்குள் நாட்டின் பொருளாதாரம் சிக்கியுள்ளது. நாம் இந்திய ஆட்சியாளர்களின் ஏவலாளிகளாகி உள்ளோம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளுக்காக ஜே.வி.பி.யும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு விருப்பம் தெவித்துள்ளன. ஆனால், தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு விடயத்தில் இந்தக் கட்சிகள் அக்கறை செலுத்தாது உள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்பதில் எமக்கும் உடன்பாடு உண்டு. அதற்காகப் போராட்டங்களை நடத்தி, கறுப்புக்கொடி காட்டி சிறைவாசம் அனுபவித்து இருக்கின்றேன்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் மாத்திரம் போதாது. அரசியலமைப்பை மாற்றியமைத்து, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான ஒரு யாப்பை உருவாக்க வேண்டும்.

அதாவது, 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும். மாறாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக மட்டும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதில் எதுவித அர்த்தம் இல்லை.

தேர்தல் நெருங்குவதால், முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு உள்ள மக்களை அரசாங்கம் அவசர அவசரமாக மீள்குடியமர்த்துகிறது. முகாம்களில் விடுதலைப் புலிகள் இருப்பதால் அவர்களை இனங்காண வேண்டியுள்ளது. கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளது. இவ்வாறான பாரிய வேலைகள் இருப்பதால், பொது மக்களை உடனடியாக மீள்குடியமர்த்த முடியாது என அரசாங்கத் தரப்பில் முன்னர் கூறப்பட்டது. ஆனால், தற்பொழுது இம் மக்களின் மனித உரிமையும், ஜனநாயகம் பற்றி ஜனாதிபதியின் ஞாபகத்திற்கு வந்துள்ளது என்றார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 26 November 2009 01:28
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது