பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு இராணுவ தளபதிகளே காரணம் - கோத்தபாய மறைமுக தகவல்!
Written by Sara   
Sunday, 06 December 2009 12:09
AddThis Social Bookmark Button
சிறிலங்காவின் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு, இராணுவத்தளபதிகளே காரணம் என, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கோத்தபாய ராஜபக்ச மறைமுகமாக தெரிவித்திருக்கிறார்.
வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகவினை குறிவைத்தே இக்கருத்துக்கள் வெளியிட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கோத்தபாய மேலும் தெரிவிக்கையில்,

சிறிலங்காவில் தொடர்ச்சியாக பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனனர். குறிப்பாக சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவும் அடங்குவார். இவரின் கொலை தொடர்பில் பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் என்பது எனக்க்கு தெரியும். ஆனால் அதை தற்போது வெளியிட முடியாது.

சரத் பொன்சேக, ஊடக சுதந்திரம் தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறார். அதனால் நானும் இது பற்றி பேசுவது கட்டாயமாகி விட்டது. குறித்த குற்றச்சாட்டுக்கள் என் மீது மட்டும் தொடர்ச்சியாக சுமத்தப்படுவதை அனுமதிக்க முடியாது'
என எச்சரிக்கை தொணியில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
2006 ம் ஆண்டில் இருந்து இதுவரை இலங்கையில் அனுபவமிக்க ஊடகவியலாளர்கள் 16 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதுடன், 39 பேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

'லசந்த விக்ரமதுங்க' தான் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் இறுதியாக சண்டே லீடருக்கு எழுதிய கட்டுரையில் 'ஒருவேளை நான் கொல்லப்பட்டால் அதற்கு மஹிந்த தலைமையிலான ஆளும் அரசே பொறுப்பு' என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிங்கள ஊடகவியலாளரான போத்தல ஜெயந்த தமக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக கூறி, சில தினங்களுக்கு முன்னர், நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 06 December 2009 13:04
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது