சினிமா கேலரி

விளம்பரம்

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஊடகங்களின் எதிரி சரத் என்கிறார் கோத்தபாய, இல்லை நான் நண்பர் என்கிறார் சரத் பொன்சேகா
Written by editor   
Monday, 07 December 2009 00:56
AddThis Social Bookmark Button

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தற் களத்தில் பிரச்சாரத் தேவைகளுக்காக, ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும்,  திடீர் பாசம் அதிகரித்திருக்கிறது. ஊடகவியலாளர்களுக்கும், ஊடக சுதந்திரத்துக்கும்  எதிரானவர் முன்னாள் இராணுவத் தளபதி  பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய  கூறியிருந்தார்.  ஆனால்  அதனை மறுத்து இல்லை நான் ஊடகங்களின் நண்பன் என்று சொல்லியுள்ளார் சரத் பொன்சேகா.

'எனக்கு எதிராக நிற்கின்ற அரசியல் பிரமுகரும் அவரது குடும்ப உறவினர்களும் இணைந்து என் மீது சேறு பூசுவதற்காக மட்டுமே அரச ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் நாட்டு மக்களை மடையர்களாக்க முற்படுகின்றனர். மக்கள் மடையர்கள் அல்லர். அவர்கள் தெளிவானவர்கள். எனவே சேறு பூசுவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிகள் பிரயோசனமற்றவை' என்று எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென அவரது உத்தியோகபூர்வ அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சுபவேளையான 11.35க்கு திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர எம்.பி., ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகிய எம்.பி.க்களும் கட்சிகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அலுவலகத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான எமது முதற்கட்ட நடவடிக்கையே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கும் அதனை மையமாகக் கொண்டு ஊடக தொடர்புகளைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும் இவ்வலுவலகத்தில் ஊடகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக அலுவலகம் மிகவும் சுதந்திரமானது. இங்கு சவரக் கத்திக்கும் சைக்கிள் செயினுக்கும் இடமில்லை. ஊடக சுதந்திரத்துடனான எதிர்காலம் நோக்கிய பயணமே எமது குறிக்கோள்.

நாம் ஊடகங்களை தவறானமுறையில் இட்டுச் செல்வதற்கோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதற்கோ இடமளிக்க மாட்டோம். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒருபோதும் கண்டிராத வகையில், உதாரணத்தைக் காட்டக்கூடிய வகையில் நாம் ஊடகத் தொடர்பை வளர்த்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

தற்போதைய நிலைவரங்களைக் காணக் கூடியதாக இருக்கின்றது. அதில் எனக்கெதிரான அரசியல் சக்திகள் ஊடகங்களை திருப்பி விட்டு என் மீது சேறு பூசும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

அரச ஊடகங்களை அரசு ஊடகங்கள்தான் என்று கூற முடியாத அளவுக்கு அதனைப் பாவித்து அதில் சேறு பூசும் நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுக்கின்றனர்.

இது கீழ்த்தரமானதும் வெட்கப்பட வேண்டியதுமான நடவடிக்கைகளாகும்.

குடும்ப உறுப்பினர்கள் அரசு ஊடகங்களை அரசியல் களமாகப் பாவித்து அதனூடாக அதன் மூலம் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர்கள் காட்டிக் கொள்வதிலிருந்து இந்நாட்டு மக்களை மடையர்களாக்கவே முயற்சிக்கின்றனர்.

ஆனால் இந்நாட்டு மக்களின் தெளிவையும் அவர்களது அவதானத்தையும் நாம் உயர் மட்டத்தில் நோக்குவதால் இந்த ஊடக வாயிலான முன்னெடுப்புகள் பிரயோசனமற்றவை என்பதை விளங்கிக் கொண்டுள்ளோம். எனவேதான் நாட்டில் நடப்பது என்ன என்பதையும் அதன் உண்மைத் தன்மையையும் வெளிப்படுத்துமாறு நாம் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறோம்.

ஊடக சுதந்திரம் குறித்து பேசப்படுகின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகங்களுக்கு எதிரான சம்பவங்களுடன் எனக்கும் தொடர்பிருப்பதாக மிகைப்படுத்துகின்றனர். இன்றைய நிலைமைகளை வைத்து நோக்கும்போது யார் ஊடக சுதந்திரத்துக்கு பங்கம் ஏற்படுத்தியது, யார் அச்சுறுத்தல் விடுத்தது என்பதெல்லாம் உங்களுக்கே தெயும்.

எம்மைப் பொறுத்தவரையில் நாம் ஊடகங்களுடன் மிகவும் சுதந்திரமாக, நெருக்கமாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகவே இருக்கின்றோம்.

ஊடக கௌரவத்தையும் அதேபோல் எமது கௌரவத்தையும் பாதுகாப்பதற்கும் தயாராக இருக்கிறோம். இந்த அலுவலகத்தை ஊடகவியலாளர்களின் இல்லமாக நினைத்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 07 December 2009 01:42
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது