விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

காலி சிவன் கோவிலில் பல கோடி பெறுமதியான சிலைகள் திருட்டில் காலி!
Written by editor   
Monday, 07 December 2009 01:22
AddThis Social Bookmark Button

காலி சிவன் கோவிலிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான 17 விக்கிரகங்களை இனந்தெரியாத நபர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கோவிலில் காவலில் இருந்த காவலாளியை தாக்கி, கட்டிவைத்து விட்டு மூலஸ்தான கதவை உடைத்தே சிலைகளை இவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

தாக்குதல்களுக்குள்ளான காவலாளி ஆபத்தான நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிலுக்கு பின்புறமாக இருக்கின்ற ஐயரின் வீட்டுக்கு செல்கின்ற கதவை நேற்று முன்தினமிரவு 12 மணிக்கும் 1 மணிக்கும் இடையிலான நேரத்தில் இனந்தெயாத நபர்கள் உடைத்துக்கொண்டு கோவிலுக்குள் புகுந்துள்ளனர்.

இனந்தெரியாத நபர்கள் கோவிலுக்குள் நுழைவதை கண்ட காவலாளி கூக்குரலிட்டு சத்தம் எழுப்பியுள்ளார். அதற்கிடையில் விரைந்து செயற்பட்ட இனந்தெயாத நபர்கள் அவரை கண்மூடித்தனமாக தாக்கியதுடன் வாயையும் கைகளையும் கட்டி அங்கிருந்த தூணொன்றில் கட்டிவைத்துவிட்டு சிலைகளை திருடிக்கொண்டு வந்தவழியிலேயே தப்பித்து சென்றுள்ளனர்.

மூலஸ்தானத்திலிருந்த பிள்ளையார், கிருஷ்ணர், முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட வெண்கலத்திலான 17 சிலைகளே திருடப்பட்டுள்ளன. மூலஸ்தானத்திலிருக்கும் சுவாமிக்கு சாத்தப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் உண்டியல், பெறுமதியான வெண்கல பொருட்கள் என்பவற்றை எடுக்காத கொள்ளையர்கள் விக்கிரகங்களை மட்டுமே எடுத்து சென்றுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கோவிலுக்கு சென்ற வேலையாட்கள் கோவிலின் முன்வாயிலை தட்டியுள்ளனர்.

நீண்டநேரமாக தட்டியும் வாயில் திறக்கப்படவில்லை. இதனையடுத்து சந்தேகம் கொண்ட வேலையாட்கள் ஐயரிடம் சாவியை வாங்கிகொண்டு கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

கோவிலுக்குள் சென்றபோது பின்கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன் காவலாளி சுயநினைவிழந்த நிலையில் கட்டிவைக்கப்பட்டிருந்தமையை கண்டுள்ளனர். இவ்விடயம் குறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட நிர்வாகத்தினர் காவலாளியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் காலி பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டை அடுத்து கோவிலுக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மோப்பநாய்கள் மூலம் கொள்ளையர்களை கண்டுப்பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலாளி சுயநினைவின்றி இருப்பதாகவும் கோவில் காவலாளி விடுறையில் சென்றமையினால் நேற்று முன்தினம் தற்காலிகமாகவே ஒருவர் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தார் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 07 December 2009 01:40
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது