பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஜனாதிபதித் தேர்தல் முடிந்தததும் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு - இந்தியாவிடம் இலங்கை உறுதி
Written by editor   
Friday, 11 December 2009 12:17
AddThis Social Bookmark Button

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் தமிழர் பிரச்சினை குறித்து அரசியல் ரீதியான தீர்வுகாண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் எனவும் இந்தியாவிடம் இலங்கை உறுதியளித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகரான பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய குழு வியாழனன்று புதுடில்லிக்கு விஜயமொன்றை மேற்கொண்டு வந்ததுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேச்சு நடத்தியது.

இச்சந்திப்பில் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விவகாரம், அகதிகளான மக்கள் மீள் குடியேற்றம் மற்றும் அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் பரவலாக ஆராயப்பட்டது.

இதன்போது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டுமென இந்தியத் தரப்பில் வலியுறுத்தியபோது தேர்தல் முடிந்த கையோடு பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, இலங்கை தமிழ் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு இந்திய அரசு மேலும் 500 கோடி ரூபாவை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இடம்பெற்ற சந்திப்புக் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையில், இந்திய அதிகாரிகள் குழுவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் திருப்திகரமாக அமைந்தன. முகாமிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளும் வழங்கப்படும். அவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவும் முடியும்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வைக் காண்பது குறித்து ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் முயற்சிகளை மேற்கொள்வோம். அத்துடன், தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாராகவுள்ளோம். இது குறித்து நாம் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளோம்.

மேலும் தற்பொழுது ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேரே அகதி முகாமில் உள்ளனர்.
இவர்களுக்கு தேவையான உதவிகளை நாம் வழங்கி வருகிறோம். முகாம்களிலுள்ள தமிழர் மறுவாழ்வுத் திட்டங்களுக்கு இந்தியா உதவி வழங்கி வருகின்றது. இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதிலேயே இலங்கை கரிசனையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்பட்டு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அண்மையில் இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்திய பாராளுமன்றத்தின் மேற்சபையான மாநிலங்கள் அவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு பக்க அறிக்கையொன்றை விடுத்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உரையாற்றினார்.

இச்சந்தர்ப்பத்தில் இடம்பெயர்ந்த இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்ததுடன் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை விவகாரம் குறித்து மேலும் இராஜ்ய சபையில் உரையாற்றிய மத்திய அமைச்சர் கிருஷ்ணா, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்படுவதைப் பார்க்க இந்தியா ஆர்வமாக உள்ளது.
அந்த நடவடிக்கைகள் தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட சகல சமூகங்களினதும் நியாயபூர்வமான உரிமைகள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் இவை இடம்பெறுவதையே இந்தியா விரும்புகின்றது.
13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லக்கூடிய அர்த்தபுஷ்டியான அதிகார பகிர்வுத் திட்டத்தை இலங்கை முன்வைக்க வேண்டும் என்பதும் இந்தியாவின் விருப்பம்.

சகலரும் மீள்குடியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் இலங்கை அரசுடன் தொடர்ந்தும் பணியாற்றுவோம் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே இலங்கை நிலைவரம் குறித்து இந்திய உயர் மட்ட அதிகாகளிடம் பேச்சு நடத்தும் வகையில் மூவர் அடங்கிய தூதுக்குழு புதுடில்லி வந்ததுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவையும் சந்தித்து உரையாடியது.

இச்சந்திப்பில் இந்திய பாதுகாப்புத்துறை செயலர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலர் நிருபமா ராவ் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முக்கிய ஆலோசனைகளைப் பெறும் வகையில் இலங்கைக்குழுவின் இந்திய விஜயம் அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருந்தன.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 11 December 2009 13:52
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது