பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சரத்பொனசேகா சொந்தக் குரலில் பேசவில்லை - அமைச்சர் ஜி.எல். பீரிஸ்
Written by editor   
Saturday, 12 December 2009 05:50
AddThis Social Bookmark Button

ஜனவரி 26ஆம் திகதி முக்கியமானதும் தீர்க்கமானதுமான நாளாகும் என்று தெரிவித்து, கட்சி அரசியலில் நேரடியாக குதிப்பதற்கு கட்சி அரசியலில் நேரடியாக சம்பந்தப்படாத  கல்விமான்கள் தீர்மானித்துள்ளனர். அரசியல் அனுபவம் இல்லாத ஒருவர் ஆட்சி பீடம் ஏறினால் அது நாட்டிற்கு பெரும் ஆபத்தானதாகவே அமையும் என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொது வேட்பாளரிடம் கொள்கையில்லை, தைரியம் இல்லை, மற்றவர்களின் குரலாகவே பொதுவேட்பாளர் செயற்படுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. கொள்கை ரீதியில் வேறுபட்டவை. இந்நிலையில், கட்சி இயந்திரத்தை செயற்படுத்தவே முடியாது என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எதிர்க்கட்சிகளின் பிரதான பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான தேர்தல் என்கிறார். அப்படியாயின் இது சர்வஜன வாக்கெடுப்பா?

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய அவர், 10 நாட்களுக்குப் பின்னர் அதிகாரமில்லாத ஜனாதிபதியாக இருக்க முடியாது என்கிறார். இது வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான வித்தியாசமாகும். அவரின் அபிலாஷை என்ன? எதனை தெளிவுப்படுத்த முயற்சிக்கிறார்? அவர் மனத் தைரியம் இல்லாத நபராவார்.

அவருக்கென ஓர் சிந்தனை நோக்கம் இருக்க வேண்டும். 72  78ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து வில்லியம் கோபல்லாவை போல பெயரளவில் மட்டும் ஜனாதிபதியாக இருக்க முடியாது. சவால்களை வென்றெடுப்பதற்காக முழுமையாக மக்கள் ஆணையை கோரி நிற்க வேண்டும்.
ஆனால், எதிர்க்கட்சியின் வேட்பாளர் தனது குரலில் மற்றவரின் கொள்கைகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றார்.

நாட்டை நிர்வகிக்கும் திறனை ஆட்சிப் பீடம் ஏறியதும் பெற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார். நிர்வாகம் செய்வதற்கு விசேட நிபுணத்துவம் பயிற்சி தேவை. தலைவராகிய பின்னர் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டிருந்தால் நாட்டிற்கு என்ன நடக்கும். நோபல் பரிசு பெற்ற பங்களாதேஷைச் சேர்ந்த மொகமட் யுனுஸ் ஏழ்மைக்காக செயற்பட்டார். அவரிடம் அரசியல் அபிலாஷை இல்லை எனக் கூறி ஒரு வருடத்திற்குள் விலகிச் சென்று விட்டார்.

கட்சி இல்லாத ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் முதன் முறையாக போட்டியிடுகின்றார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் வைட் டைசன் 1945ஆம் ஆண்டு யுத்தத்தை நிறைவு செய்துவிட்டு 1958ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொது மக்கள் கட்சியின் தலைவராக இருந்து போட்டியிட்டார். இடைப்பட்ட காலத்தில் அவர் பல்க லைக்கழக வேந்தராக கடமையாற்றியுள்ளார்.

பிரான்ஸில் கொன்ஸவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த சால்ஸ்சிதோர் மற்றும் நிக்கலஸ் சாவோயிஸ் ஆகியோரும் தேர்தலில் போட்டியிட்டனர். நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து எதிர்காலப் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். இல்லையேல் அது மிகவும் அபாயகரமான நிலையை ஏற்படுத்தும்.

நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும் பாராளுமன்ற அனுமதியின்றி சிலவற்றை செய்ய முடியாது. நிறைவேற்று அதிகாரத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் அரசியல் கட்சிகள் பாலமாக செயற்படுகின்றன. கட்சி இயந்திரத்தின் மூலமாகவே பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

000000

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 12 December 2009 06:02
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது