பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஜனாதிபதித் தேர்தல், வன்முறை மிகுந்ததாக அமையலாம் - "பவ்ரல்"
Written by editor   
Friday, 18 December 2009 08:01
AddThis Social Bookmark Button

யுத்த வெற்றிக்கு உரிமை கோரிப் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் கடும் சவாலை எதிர்கொள்வதாலும், அரச கட்டமைப்புகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், வன்முறை மிகுந்ததாகவும் அமைதியற்றதாகவும் அமையலாமென "சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான ஜனநாயக செயற்பாடு" ("பவ்ரல்") எனும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த பல வருடங்களாக இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிப்பதற்கான உரிமை வழங்கப்படாததையும் சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு, தேவையற்ற தலையீடுகள் இன்றி சுதந்திரமாக இந்த மக்கள் வாக் களிப்பதற்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறுகின்றதா என்பதை
சுயாதீனமாகக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தென்மாகாணம் குறித்து விசேட கவனத்தைச் செலுத்தவுள்ளோம்.
தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளினது வேட்பாளர்களும் நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கப் போகிறார்கள் எனக் குறிப்பிட்டு அதற்கான யோசனைகளை முன்வைத்துள்ளனர்.

இது, முன்னெடுக்கப்பட வேண்டிய  நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய  விடயம்தான்.
முப்பது வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த சரத் பொன்சேகாவும் யுத்த வெற்றிக்குத் தாமே காரணம் என்ற கோஷத்தை முன்வைத்துப் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக இந்தத் தேர்தல் இருவருக்குமே சவாலாக அமையப் போகின்றது.

இந்தக் காரணத்தினால் இத் தேர்தல் வன்முறை மிகுந்ததாகவும், அமைதியான முறையில் இடம்பெறாததாகவும் அமையப் போகின்றது. இதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படுகின்றன.
தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் வாக்களிப்பதற்குப் பலருக்கும் உள்ள உரிமை பறிபோகப் போகின்றது. சுயாதீன அமைப்பென்ற வகையில் தேர்தல் ஆணையாளரின் விசேட கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டுவரப் போகின்றோம்.

நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நல்லாட்சியை உறுதிசெய்யும் நோக்குடனேயே அரசமைப்பின் 17 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. எனினும், இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக அரச கட்டமைப்புகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.தேர்தலும், ஊடகங்களும் துஷ்பிரயோகத்திற்குள்ளாகலாம்.

இதனால் ஜனநாயகத் தேர்தல் குறித்த நம்பிக்கைகள் குறைவடைந்துள்ளன.இந்த நிலைமையைச் சரிசெய்வதற்காக மக்களின் விழிப்புணர்வைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்.இதுவரை நடைபெற்று முடிந்த சகல தேர்தல்களிலும் அரச ஊடகங்களும் பொதுச் சொத்துகளும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன.இதுபற்றிக் கவனம் செலுத்தவேண்டும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 18 December 2009 08:10
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது