பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரை பாதுகாக்கத் தவறிவிட்டார் சரத் - அரசு தரப்பு
Written by editor   
Wednesday, 23 December 2009 08:36
AddThis Social Bookmark Button

எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, இராணுவம் தொடர்பில் தெரிவித்த கூற்றை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை இலங்கையிடம் விளக்கம் கோரியுள்ளது. இதனால், நாட்டின் முப்படையினர் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளனர். அவர்களால் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐ.நா.வின் அமைதிப்படைக்குக் கூட செல்வதில் இனிவரும் காலங்களில் எமது படையினர் சிக்கல்களை எதிர்நோக்கப் போகின்றனர் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சற்று மறந்துவிட்டு, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த நாட்டின் முப்படையினரை பாதுகாக்க அனைவரும் அணிதிரளவேண்டும் என்றும் அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அரசாங்கத்தின் அமைச்சர்கள் இந்த விடயங்களை குறிப்பிட்டனர்.

செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறுகையில், முன்னாள் இராணுவ தளபதியும் மற்றும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால் நாட்டின் முப்படையினர் பாரியளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். முக்கியமாக முப்படையினர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

காரணம் இராணுவம் தொடர்பான குற்றச்சாட்டை முன்னாள் இராணுவ தளபதியே முன்வைத்துள்ளார். இதனால் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் 58 ஆம் படைப்பி,வின் அதிகாரிகள் என அனைவருக்கும் அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களால் இனி இங்கிலாந்துக்கோ சிங்கப்பூருக்கோ தனிப்பட்ட விஜயமாகவோ மருத்துவ தேவைக்காகவோ செல்ல முடியாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.

காரணம் நான் 58 ஆம் படைப் பி,வை சேர்ந்தவன் அல்ல என்று அவர்களால் சத்தியகடதாசி கொண்டு செல்ல முடியாது. இராணுவ அதிகாரிகள் தமது பிள்ளைகளுக்கு வைத்தியம் செய்வதற்கும் வெளிநாடு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை இந்த விவகாரத்தை பரிசீலித்து யுத்தக் குற்ற நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் என்று பணிப்புரை விடுக்கலாம்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஹிட்லரின் இராணுவ அதிகா,களுக்கு எதிராக நியூரன் பேர்க் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அதன்போது உயர்மட்டம் தமக்கு அளித்த கட்டளையை தாம் நிறைவேற்றியதாக குறித்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் தனிப்பட்ட பொறுப்பு உள்ளது என்று கூறி 11 இராணுவ அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறான வரலாறுகள் உள்ளன.

இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும் அவர்களின் சர்வதேச வலையமைப்பும் இயந்திரம் இன்னும் வலுவாகவே உள்ளன. அவர்கள் இலங்கையின் பொருளாதார கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். இலங்கைக்கான உதவிகளை தடுத்தல், ஜீ. எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தல் போன்ற விடயங்களை செய்ய பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் ஐரோப்பிய சந்தையில் எமது பிரவேசத்தை தடுப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

ஏற்கனவே எமக்கு எதிராக ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பல நடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டன.

ஆனால் அதன்போது நாங்கள் வெற்றிபெற்றோம். ஆனால் அந்த விடயங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம். காரணம் பாரிய சாட்சியாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்று அமைந்துள்ளது. இதனைவிட பலமான சாட்சி இருக்க முடியாது. எனவே இது வரலாற்றில் பா,ய காட்டிக்கொடுப்பு என்று கூறவேண்டும் என்றார்.

உங்கள் கருத்துக்கள்

avatar jasmin
+1
 
 
முன்னள் பாதுகாப்பு அமைசசர் சரத் பொன்சேகா பதவி பொனதும் பல்ட்டி அடித்துள்ளார்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Wednesday, 23 December 2009 09:02
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது