சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

பிராபகரனைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சி, இந்திய அறிவுறுத்தலில் இலங்கை முறியடிப்பு.
Written by editor   
Thursday, 24 December 2009 05:48
AddThis Social Bookmark Button

வன்னியில் போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது,  சிறிலங்கா இராணுவத்தின் முற்றுகைக்குள்  விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்கள் இருந்தபோது,  பிரபாகரன் உட்பட குறிப்பிட்ட சில முக்கியஸ்தர்களை,  அங்கிருந்து அகற்றுவதற்கு அமெரிக்கா முயற்சியினை மேற்கொண்டதாகவும்,

  இந்த முயற்சியினை இந்தியாவுடன் இனைந்து சிறிலங்கா இரகசியமாக முறியடித்ததாக,  சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களிலிருந்த செய்திகள் கசிந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் சில தெரிவிககின்றன.

வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது, வன்னிக்குள்ளும், வன்னிக்கு வெளியேயும்,அதிர்ச்சியளிக்கக் கூடிய பல விடயங்கள் நடைபெற்றுள்ளன. அவைகுறித்த செய்திகள், அரச தரப்பிலிருந்தும், புலிகள் தரப்பாலும் தற்போது மெல்ல மெல்லக் கசியத் தொடங்கியுள்ளன. இவ்வாறு கசியும் செய்திகள் எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை மிக்கன என்பதை உறுதி செய்ய முடியாதிருப்பினும்,  நடந்து முடிந்துள்ள சில விடயங்களின் தொடர்ச்சியை அவதானிக்கும் போது, கசிந்துள்ள செய்திகள் பலவும் பொய்யானவை அல்ல என்றே எண்ணத் தோன்றுகிறது. 

வன்னியில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இருபது நாடுகள் தமக்கு உதவியிருந்ததாகவும்,  இந்தப் போரில் இந்தியாவின் உதவி அளப்பரியது, நன்றிக்குரியது என்றும் சிறிலங்கா அரசு தரப்பில் ஏற்கனவே வெளிப்படையாகத் பல தடவைகள் அறிவிக்கபட்டுள்ளது. ஆயினும் தற்போது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கும் செய்தி, வன்னிப் போர்க்களத்தில் இந்தியாவின் ஆளுமை எவ்வளவுதூரம் இருந்துது என்பதையும், மேற்குலகமும் ஆசியநாடுகளும் நடத்திய நிழல்யுத்தத்தில் போராளிகளும், பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கும் அதிர்ச்சி தரும் உண்மையும் வெளிப்படுகிறது.
 
விடுதலைப்புலிகளின் இராணுவபலத்தை குறைத்துவிடுவதில்,  அனைத்துலகமும் ஒருமித்தே இருந்திருக்கின்றன. ஆனால் வி.புலிகளை அழித்து விடவே இந்தியா விரும்பியுள்ளது என்பது தற்போது வெளிவரும் செய்திகளில் தெரிகிறது. வன்னியில் யுத்தம் தொடங்குவதற்கு முன்னதாகவே, இந்தியாவின் அதி தீவிரமான இந்தப் பொக்கினை விடுதலைப்புலிகள் அறிந்திருந்தார்கள் என்றே தெரிகிறது. அதனாற்தான், இந்தியாவுடன் முறிந்து போன உறவினை பலப்படுத்த முனைந்தார்கள். பிரபாகரனின் சென்ற ஆண்டில் நிகழ்த்திய மாவீர்ர் உரையில், இறுதிக்கட்டங்களில், நடேசன் வெளியிட்ட அறிக்கைகள், என்பவற்றிலிருந்து இதை உணர முடியும். ஆனாலும் இந்தியா தான் கொண்டிருந்த கொள்கையில் எந்தவிதமாற்றத்தினையும்  செய்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

இறுதிநேரத்தில் அமெரிக்காவின்  முயற்சி குறித்துக் கசிந்துள்ள  இந்த அவசர நடவடிக்கைகள் தொடர்பாக கசிந்துள்ள அந்தத் தகவல்களின்படி மேலும் அறிகையில், கிளிநொச்சியை கைப்பற்றிய சிறிலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் இறுதிநிலைகளை நோக்கி முன்னகர்ந்த போது விடுதலைப்புலிகள் அமைப்பு பாரிய ஆபத்துக்குள் சிக்கியுள்ளதை பலரும் அறிந்திரந்தார்கள்.  இதுவிடயம் குறித்து, உடனடியாக  நார்வே  இணைத்தலைமை நாடுகளுக்கு  அறிவித்திருந்தது. மேலும், இந்த இக்கட்டான நிலையில்,  விடுதலைப்புலிகளின் தலைமையை அங்கிருந்து அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என நார்வே வலியுறுத்தியதாகவும் அறிய முடிகிறது.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அரசு உயர்மட்டத்தினருடன் நடைபெற்ற பேச்சுக்களில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை உட்பட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை, வெளியேற்றல் நடவடிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுரகத்தில் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும்,  இநத் மீட்பு  நடவடிக்கையை அமுல்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய வேலைகளை ஒருங்கமைப்பதற்கு ஹவாயிலிருந்து அமெரிக்க படைஅதிகாரிகள் மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைக்கு பொறுப்பான குழுவினர் விசேட விமானத்தில் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்து இறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானம் சிறிலங்காவிற்கு வருவது குறித்தோ இந்த விமானத்தில் வந்த விசேட குழுவினர் பற்றியோ,  சிறிலங்கா அரசிடம்  முன்னறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை. கட்டுநாயக்கவில் வந்து இறங்கிய பின்னர்தான் சிறிலங்கா அரசுக்கு அறிவிக்கப்பட்டது. இவ்வாறு வந்ததன் பின்னர், சிறிலங்கா அரசுக்கும் தமது திட்டம் குறித்து கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ ப்ளாக் எடுத்துக்கூறியதோடு,    தமது நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர், குறிப்பிட்ட இடங்களில் தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என்றும்  அமெரிக்க தரப்பினரால் சிறிலங்கா அரசுக்கு எடுத்துக்கூறப்பட்டதாம்.

இந்தத் திட்டத்தின் படி,  மீட்கப்படும் விடுதலைப்புலிகள் அனைவரும் முல்லைத்தீவு கடற்பரப்புக்கு கொண்டுவரப்படும் அமெரிக்க கப்பலுக்கு அழைத்துவரப்படவும்,   பின்னர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் வெளியேற்றவும்,  அமெரிக்காவின் திட்டமிட்டிருந்தது. இதற்கு  ஏதுவாக கடற்பரப்பை அண்டிய பகுதியில் தாக்குதல்களை முற்றாக  நிறுத்தும்படி கோரப்பட்டதாகவும் தெரியவருகிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பற்றி அறிந்து கொண்ட சிறிலங்கா தரப்பு, இது குறித்து புதுடில்லிக்கு தெரியுமா என்று கேட்ட போது,  அது குறித்த உயர்மட்டக்கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாக அமெரிக்க தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம்  குறித்து  இரகசியமாக சிறிலங்கா இந்தியாவுக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து,  போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு   இந்தியா விரும்பியதாகவும், அமெரிக்காவின் திட்டங்கள் செயல்களாக  மாற்றம் பெற முன்னரே படையினரை முல்லைத்தீவினுள்  ஊடறுப்பை மேற்கொள்ளவும்,    இழப்புக்கள் எவ்வளவு  ஏற்பட்டாலும் படைநடவடிக்கையை நிறுத்தவேண்டாம் எனவும்,  வழங்கப்பட்ட  இந்திய அறிவுறுத்தலின்படியே  யுத்தம் முனைப்புடன் தொடரப்பட்டதாகவும்,  தெரிவிக்கப்படுகிறது.

தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பல வன்னிச் சமரில் பாவிக்கப்ட்டதாகவும் ,  குறிப்பிட்ட ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றில் வி.புலிகளின்  முக்கிய தளபதிகள் பலர் இத்தகைய ஆயுதப்பிரயோகத்தில் பலியானதாகவும்,  போர்காலத்தில் விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

avatar vs samuel
+1
 
 
இந்தியா ஒரு மிகப்பெரிய மக்களாட்சி நாடு (?), துரோகச்செயலிலும் கூட, வேதனையாக உள்ளது.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar vannan
0
 
 
இந்தியா எங்கள் மக்களுக்கு பாரிய துரோகம் செய்துள்ளது. அதை நாங்கள் மறக்க மாட்டோம் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar sri
0
 
 
இந்தியா எங்கள் மக்களுக்கு பாரிய துரோகம் செய்துள்ளது. அதை நாங்கள் மறக்க மாட்டோம் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar bala
0
 
 
சோனியா மற்றும் குடும்பத்தார் பாவம் செய்துவிட்டார்கள்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar vimal
0
 
 
very very bad for indian goverment.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar anuman
+1
 
 
இலங்கை இந்தியாவின் பூலோக அரசியலுடன் சம்பந்தபட்டது அமெரிக்கவுடன் அல்ல
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar ukkirapandian
0
 
 
இது உன்மையாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவே தோன்றூகிறது . அதே சமயத்தில் இந்தியா இவ்விடயத்தில் இவ்வளஊ முனைப்பு காட்டவேண்டிய அவசியம் என்ன ?
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar vadivelu123
0
 
 
இந்தியா என இருக்கும் இடத்தில் சோனியா என வாசிக்கவும்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar iniyavan
0
 
 
இலங்கையில் நடக்ககும் அரசியல் கூத்துக்கள் ஒரு புறம் இருக்க , இந்தியாவின் நேரடி யுத்தமாக , நடாத்தப் பட்ட தமிழின அழிப்பு நடவடிக்கை எத்தகைய விளைவை தந்தது என்று நாம் நேரடியாகப் பார்க்கின்றோம். ஆனால் அமெரிக்க விமானமோ அல்லது தளபதிகளோ இலங்கை தலைநகர் கொளும்பில் வந்து இறங்கி , அரசாங்கத்திடம் நேரடியாக "நாங்கள் புலிகளை பாதுகாப்பாக வெளியேற்ற போகிறோம், குறித்த இடங்க‌ளில் போரை கட்டுப்படுத்துங்கள் என்று கேட்டிருந்தால்,
அந்த இடத்தில் நடந்திருக்க கூடியது என்னவாக இருந்திருக்கும்?
1.உடனடியாக அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கும்.
2. எங்கே எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக் கிடக்கும் "விமல் வீரவன்ச" போன்ற அடிவருடி அரசியல்வாதிகள், உடனடியாக ஊரெங்கும் பறைசாற்றியிருப்பார்கள்.
""அமெரிக்கப்புலி கொழும்பில் வந்து நிற்கின்றது.... அனைவரும் திரண்டு வருக,... இவர்களை அழித்திடுக.,...
என்று கவிதை பாடியிருப்பார்கள்.
இந்த கோணத்தில் நாம் நோக்கும் போது , புலிகளைக் காப்பாற்றவென அமெரிக்காவின் வருகையும், இலங்கை அரசிடம் அனுமதி கேட்டதும் பொய்யான தகவலாக இருக்க வாய்ப்புள்ள அதே வேளை, சரத் பொசேகாவை மெற்கோள் காட்டி, வெளியிடப் பட்ட, போர் ரகசியம் , தற்போது, சரத் பொன்சேகா வாயை மூடிக் கொண்டு இருக்கும் அதே வேளை, ஆளும் தரப்பினர் பலரும் தங்களுக்கு ஏற்றவாறு, "சரத் பொன்சேகா போர் பற்றிய ரகசியத்தைக் கூறி, நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார், என்றுஅறிக்கைகளும் கண்டனங்களும் தெரிவிப்பதன் மூலம், இறுதி யுத்தத்தின்போது அங்கு நடந்த நடந்த உண்மை என்ன என்பதனை தங்களது வாய் அறிக்கை மூலமாக பல அமைச்சர்களும், நாடாளுமண்ற உறுப்பினர்களும் உலகிற்கு வெளிப் படுத்தி வருகிறார்கள், இதன் மூலம் மக்கள் இந்த அரசின் கொடூரமான போக்கினை உணர்ந்து கொள்வார்கள் என் நம்புகின்றேன்.

Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar tdbasa pt rajah
0
 
 
YES ITS TRUTH INDIA FULLY INVOLDE TO KILL TAMILPEOPLE AND LTT LEADERS YOU KNOW WHAT YOU COULD BLEAVE STOMACH ACHE YOU CANNOT BLEAVE NOTHINDIAN AND KARUNAI NITHI RAJAH
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 24 December 2009 07:24
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது