பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

போரில் புலிகளைக் கொல்லவே அதிகம் அறிவுறுத்தப்பட்டோம் இராணுவ தரப்பால் கசிந்த தகவல்
Written by Amsha   
Sunday, 27 December 2009 20:47
AddThis Social Bookmark Button
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் எமது படையினருக்கு இடங்களை பிடிப்பதற்கு அறிவுறுத்தப்படவில்லை. பதிலாக நாளாந்தம் பத்து புலிகளை கொல்வதற்கு உத்தரவிடப்பட்டது. பின்னைய நாட்களில், அந்த எண்ணிக்கை   மேலும் அதிகரிப்பட்டது. இதனால் போரை  இலகுவாக முன்னெடுக்க முடிந்தது என சிறிலங்கா படையினரின் முக்கியஸ்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையாளர் ஒருவருக்கு அவர்  வழங்கியுள்ள தகவல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. இதன் வழி மேலும் அறிகையில்,   ஆனந்தபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை சுற்றிவளைத்து மேற்கொண்ட தாக்குதல் போரின்  போக்கினை மாற்றியமைத்ததாக  அமைந்தது எனவும், விடுதலைப்புலிகளின்  முக்கிய தளபதிகள் உட்பட சுமார் அறுநூறு விடுதலைப்புலிகள் இந்த முற்றுகை தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகளின் வடமுனை தளபதி தீபன் மற்றும், விதுஷா ஆகியோரும் இந்தத் தாக்குதலிலேயே கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக அந்த தகவல் கூறுகிறது.  இந்த சுற்றிவளைப்பு தாக்குதல்  சிறிலங்கா இராணுவம் இதுவரை காலமும் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தாக்குதல்களில் மிகப்பெரிய சுற்றி வளைப்புத் தாக்குதலும்,முக்கியமான தாக்குதலுமாகும் எனவும் அவரால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 58 ஆவது டிவிஷன் படையணியும்,   53 ஆவது டிவிஷன் படையணியும் இணைந்து மேற்கொண்ட இந்தச் சுற்றிவளைப்புதத்தாக்குதல் நிகழ்த்தப்படாவிட்டாலோ அல்லது தோல்வியில் முடிந்திருந்தாலோ,  போர் மேலும் சில காலம் தொடர்ந்திருக்கும் எனவும்,    புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும்  இத் தாக்குதலில்  கொல்லப்பட்டதினால், விடுதலைப்புலிகளின் தலைமையால்   போரைத் தொடர்ந்து  நடத்தமுடியாது  போனது எனவும் அவரால் கூறப்பட்டதாக அத்தகவல் தெரிவிக்கிறது.

அத்தகவலில் குறிப்பிட்டுள்ள ஆனந்தபுரம் சுற்றி வளைப்புத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இராசயணஆயுதங்களைப் பாவித்திருந்ததாகவும், அதன் காரணமாகவே  அத் தாக்குதலில் தமது போராளிகள் பலரை ஒரே நேரத்தில் இழக்க வேண்டி ஏற்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் ஏற்கனவே குற்றம்  சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது