சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

இரு பிரதான கட்சிகளுடனும் தொடர்ந்து வரும் த.தே.கூ இன் பேச்சுவார்த்தை!
Written by Sara   
Saturday, 02 January 2010 07:34
AddThis Social Bookmark Button

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்  இரா. சம்பந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தொடர்ந்து பேசி வருகின்றார்.

ஜனாதிபதி உட்பட்ட அரசுத் தரப்புடன் நேற்று முன்தினம் இரவு அவர் நடத்திய பேச்சுகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என் றும், எனினும் அதே நேரம் நேற்றுக்காலையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அவர் நடத்திய பேச்சுகள் ஆக்கபூர்வமானவையாக அமைந்தன என்றும் தமிழ்க் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசுத் தரப்பு, எதிர்த்தரப்பு ஆகிய இரண்டு பக்கங்களுடனும் தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்து பேச்சுகளை நடத்தி வருகின்றது.நேற்று முன்தினம் இரவு அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுத் தரப்பினருடன் இரா. சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும் சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினர். அரசுத் தரப்பில் ஜனாதிபதியுடன் அவரது சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ எம்.பி.,அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் பங்குபற்றினர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை அரசுத் தரப்பினால் முறைப்படி முன்வைக்கப்பட்டது.

எனினும், இவ்வளவு காலமும்  கடந்த நான்கு வருடங்களும்  அரசுத் தரப்பினால் தமிழ்க் கூட்டமைப்பு எப்படி நடத்தப்பட்டது என்பதை ஆரம்பத்திலேயே சம்பந்தன் எம்.பி., அரசுத் தரப்புக்கு உறைக்கும் விதத்தில் உரைத்தார் எனக் கூறப்படுகின்றது.
இந்த நான்கு ஆண்டுகளாக ஜனாதிபதியைப் பல தடவைகள் சந்தித்துப் பேசினோம். ஆனால், எங்களை (கூட்டமைப்பை) தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக மதித்துச் செயற்படக் கூட அரசு தயாராக இருக்கவில்லை.

டக்ளஸ் தேவானந்தாவையும், கருணாவையும் வைத்துக்கொண்டு தமிழ்மக்களின் பிரச்சினையைக் கையாளலாம் என்று கருதித்தான் இதுவரை நீங்கள் செயற்பட்டுள்ளீர்கள்.

வடக்கு  கிழக்குப் பிரிப்பு விடயத்தை இந்த அரசே முழு அளவில் முன்னெடுத்தது. அதன் மூலம் அரசியல் தீர்வுக்கான அடிப்படைச் சூழலையே நீங்கள் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டீர்கள். இணைப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்தும் முயற்சிக்கு உதவ ஐ.தே.கட்சி தயாராக இருந்தது. ஆனால், அந்த வசதியான வாய்ப்பை நீங்கள்தான் வேண்டுமென்றே பயன்படுத்தாமல் முறியடித்தீர்கள்.  எங்கள் மக்கள் எங்கள் மீது அதிகம் நம்பிக்கை வைத்துப் பார்த்திருக்கின்றார்கள். அவர்களை  எந்த அழுத்தம் கருதியும்  நாம் கைவிட மாட்டோம்.

"நாங்கள் அடுத்த தடவை ஆட்சிக்கு வந்ததும் உங்களோடு பேசி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்  என்று நீங்கள் இன்று கூறும் உறுதியுரையை மட்டும் நம்பி நாம் திருப்திப்பட முடியாது. இத்தகைய பல உறுதியுரைகளைத் தென்னிலங்கையிடம் பெற்று ஏமாந்து போனமையே எமது வரலாறாக உள்ளது.''  இப்படி இரா. சம்பந்தன் அரசுத் தரப்பினரிடம் கூறினார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்தன.

"அரசியல் தீர்வு பற்றிய விடயத்தில் நாம் மீள ஆட்சிக்கு வந்து உங்களுடன்தான் பேசித் தீர்வு காண்போம் என்ற உறுதியுரையை மட்டுமே அரசு தந்தது. அதற்கு அப்பால் தீர்வுக்கான அடிப்படையைக் கூட அவர்கள் கோடி காட்டவில்லை.  அதனால் இந்தப் பேச்சுகளில் முன்னேற்றமோ, திருப்தியோ இல்லை'' என இரா. சம்பந்தர் சார்பில் பேசவல்ல கூட்டமைப்புப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். எனினும், தமிழ்மக்களின் உடனடிப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்புகளிலும் தாராளமாகக் கருத்துகள் பரிமாறப்பட்டன என்றும் அப்பிரதிநிதி கூறினார்.

"வலி வடக்கு மக்கள்,  முஸ்லிம் மக்கள் உட்பட இடம்பெயர்ந்த அனைத்து மக்கள் தொடர்பாகவும் மீள்குடியமர்வு நடவடிக்கை விரைந்து எடுக்கப்படவேண்டும் என்று வற்புறுத்தினோம். இதுவரை மீள்குடியமர்வு விடயம் தொடர்பாக அரசு எடுத்தவை என்று கூறப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் எமக்குத் திருப்தியில்லை என்பதைச் சுட்டிக்காட்டினோம். அந்த மக்களுக்கு உரிய வாழ்வாதாரங்கள், சமூகக் கட்டமைப்புகள், குடியிருப்பு வீடுகள், வேலைவாய்ப்புகள், வருமான ஆதாரங்கள் போன்றவை வழங்கப்படாமல் அவர்களை வெறுமனே முகாம்களுக்கு இடம் மாற்றியோ அல்லது உறவினர் வீடுகளுக்கு மாற்றியோ விடுவதில் அர்த்தமில்லை என்பதைக் கூறினோம்.

வடக்கு  கிழக்கு உயர் பாதுகாப்பு வலயங்களை விலக்கி மக்களைமீளக்குடியமர்த்தல், இராணுவ செயற்பாடுகளைக் குறைத்து மக்களின் சுதந்திர நடமாட்டத்துக்கு அனுமதித்தல், தடுப்புக்காவலில் உள்ள கனகரட்ணம் எம்.பி. மற்றும் கிளிநொச்சி அரச அதிபர் ஆகியோரை விடுவித்தல் ஆகியவை குறித்தெல்லாம் அரசுத் தரப்பினரிடம் வலியுறுத்திப் பேசினோம்.

உடனடிப் பிரச்சினைகள் குறித்து எமது தலைவர்கள் இருவருடனும் உரையாடிய அரசுத் தரப்பினர், இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய விடயத்தில் ஆக்கபூர்வமான  முன்னேற்றகரமான பதில் எதையுமே தரவேயில்லை.'' என்றார் அவர்.

இதேசமயம், நேற்றுக் காலை கொழும்பு, கேம்பிரிட்ஜ் டெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் அவரை இரா. சம்பந்தன் எம்.பி. தனியாகச் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடினார்.

"இந்தப் பேச்சு முன்னேற்றகரமாக இருந்தது. சாதகமான முறையில்   பாதகமற்ற வகையில்  அது அமைந்தது. பேச்சுக்களில் முற்போக்கான பல விடயங்கள் இடம்பெற்றன. தமிழர் தாயக ஐக்கியம் தொடக்கம் அரசியல் தீர்வு வரை பல விடயங்களில் ஆக்கபூர்வமான யோசனைகள் ஆராயப்பட்டுள்ளன.

"இந்தச் சந்திப்பை அடுத்து நான் இன்று (வெள்ளியன்று) திருகோணமலை செல்கிறேன். திரும்பி வந்து ஒருதடவை ஜெனரல் சரத் பொன்சேகாவை நான் சந்திக்க வேண்டியிருக்கும். அதன் பின்னரே  ஜனவரி 4 ஆம் திகதி   எமது நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் இவ்விடயங்கள்  குறித்து ஆராய்வோம்.''  என்று சம்பந்தர் நேற்றுத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள்

avatar vs samuel
0
 
 
ஆடுநனைகிரதென்று ஓநாய் அழுததாக கதை ஒன்றினைக்கேட்டு இருக்கின்றோம், அதனைஉருதிபடுததுவதுதான் "இனப்பிரட்சனைக்கு நாங்கள் ஆட்சிக்கு தீர்வுகாண்போம்" என ராஜபக்சே கூறுவது
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 02 January 2010 07:42
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது