விளம்பரம்
உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!
ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா டெலிவரி 1 பைசா
உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!
அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!
சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!
வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!
டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.
வந்தவங்க சொன்னாங்க
அனைத்தும் பொய் - நித்தியானந்தர் !!..நித்தியானந்தா புளு பிலிமில் நடிச்சே வாழலாம்...
பயில்வோம் பங்குச்சந்தை - 1!!..நன்றி! மிகவும் பயனுள்ள முயற்சி. அடுத்தடுத்த பதிவுகளுக்காக ஆவலுட
...
ஐ.பி.எல் போட்டிகள் நாளை ஆரம்பம் !!..thanks to youtube
bez it provide the facility for the workers also to watch the match during their work time also
...
இலவச நியூஸ்லெட்டர்..
| தமிழகத்திற்கு தொடர்ந்து இடம்பெயரும் இலங்கைத் தமிழ் அகதிகள்! |
| Written by Sara |
| Monday, 04 January 2010 12:50 |
போர் முடிந்து விட்ட பின்னரும், இடைத்தங்கல் முகாம்களில் அல்லலுறும் தமிழர்களின் வாழ்வும், வறுமையும், தாயகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கான இடப்பெயர்வுகளை அதிகரித்துக்கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் இப்போது வறுமைதான் பிரதானமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர் என்று தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்கள் கூறியுள்ளனர். போர் முடிந்து விட்டது, விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம், இனி வடக்கில் வசந்தம் என்று ராஜபக்ஷ அரசு கூறியது. ஆனால் தமிழர்கள் தொடர்ந்து அகதிகளாக பல் வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து வருவது நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.. இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கும் பிற நாடுகளுக்கும் உயிரைப் பணயம் வைத்து படகுகளில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர். அதேபோல தமிழகத்திற்கும் அகதிகள் வருகை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தலைமன்னார் பகுதியில் இருந்து ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவன், ஒரு சிறுமி ஆகிய 5 பேர் குந்தராயர் சத்திரம் அச்சனை கடற் கரைக்கு அகதிகளாக வந்திறங்கிருந்த போது தகவல் அறிந்ததும் கடலோர பொலிஸார் மற்றும் தனிப் பிரிவு பொலிஸார் அவர்களை தனுஷ்கோடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த ராஜ்குமார் (60), வினிதா (30), அவரது மகன்கள் சவசியான் (11), எமிசன் (5), மகள் நீராவினி (9) என்று தெரியவந்தது. அவர்களது பெயரை பதிவு செய்த பொலிஸார் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு வினிதா செய்தியாளர்களிடம் ஈழ நிலைவரம் குறித்துக் கூறுகையில், இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 7 மாதங்கள் ஆகியும் இன்னும் அமைதி திரும்பவில்லை. அங்கு வாழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வறுமையில் வாடுகிறார்கள். கிளிநொச்சியை சேர்ந்த நானும், எனது குழந்தைகளும் பல்வேறு போராட்டங்களை கடந்து இங்கு வந்துள்ளோன். 2 ஆண்டுகளுக்கு முன்பே எனது கணவர் தமிழகம் வந்து விட்டார். இலங்கையில் கடைசியாக நடந்த சண்டையின்போது கிளிநொச்சியில் இருந்து ஒக்கனை பகுதிக்கு நான் குழந்தையுடன் வந்து கொண்டி ருந்தேன். அப்போது இராணுவத்தினர் எங்களைப் பிடித்து அங்குள்ள முகாமில் 2 மாதங்களாக அடைத்து வைத்திருந்தனர். அங்கு எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்பட வில்லை. பின்னர் எங்களை வவுனியா மாவட்டத்தில் உள்ள இலுப்பை முகாக்கு மாற்றினர். 2 மாதத்திற்கு முன்பு நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். தலைமன்னாரில் இருந்து உறவினர் ராஜ்குமார் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை விற்று படகு கட்டணமாக கொடுத்து இங்கு வந்து சேர்ந்தோம். இலங்கையில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். இதேவேளை 2006 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2009 டிசம்பர் 31 வரை இந்த 5 பேரையும் சேர்த்து மொத்தம் 24 ஆயிரத்து 300 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளதாகவும் இதில் 3,500 பேர் மண்டபம் முகாமிலும் மற்றவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 130 முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| Last Updated on Monday, 04 January 2010 12:55 |


.jpg)
டுவிட்டர் 
போர் முடிந்து விட்ட பின்னரும், இடைத்தங்கல் முகாம்களில் அல்லலுறும் தமிழர்களின் வாழ்வும், வறுமையும், தாயகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கான இடப்பெயர்வுகளை அதிகரித்துக்கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கள்