சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

'உலகத் தமிழ செம் மொழி மாநாடு' இணையத்தளம், முதல்வர் தொடங்கி வைத்தார்.
Written by editor   
Wednesday, 09 December 2009 09:34
AddThis Social Bookmark Button

வரும் ஆண்டில் தமிழகம் கோவையில் நடைபெறவுள்ள,  உலகத் தமிழ்ச்  செம்மொழி மாநாட்டுக்கான இணையத்தளத்தை முதல்வர் கருணாநிதி  இன்று தொடங்கி வைத்தார். நிதியமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் இணைந்திருக்க, அவர்கள் முன்னிலையில். செம்மொழி மாநாட்டிற்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

வளர்ந்து வரும் நவீன அறிவியல் தொழில்நுட்ப உலகிற்கேற்பத் தமிழ்ச் செம்மொழி வளம்பெறும் வகையிலும் தற்கால வாழ்க்கை முறைக்குத் தமிழ்ச் செம்மொழி இலக்கியங்கள் காட்டும் விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையிலும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கம் அமையவுள்ளது.

முதல்வரின் அறிவுரையின்படி, மாநாட்டின் ஆய்வரங்கத்தில் பன்னாட்டு ஆய்வாளர்களும் பங்கேற்கும் வகையில் இணையதளத்தில் ஆய்வரங்கத்திற்கென்று உருவாக்கப்பட்ட தனி வலைத்தளம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழர்களின் மரபு வழிப்பட்ட நாதசுரத்தில் மல்லாரி இசையுடன் வலைப் பக்கம் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் இலச்சினையும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு இலச்சினையும் இடம்பெற்றுள்ளன.

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வலைத்தளப் பக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடது பக்கம் சங்ககால நாணய முத்திரையும் வலதுபக்கம் சிலம்பும், தொன்மையான தமிழ் எழுத்து வடிவங்களும், சிந்துவெளிக் குறியீடுகளும், முத்திரைகளும் இடம் பெற்றுள்ளன.

இப்பக்கத்தில் மாநாடு தொடர்பான அறிவிப்புகள், கோவை மாநகர் பற்றிய செய்திகளோடு சங்ககால வரலாற்றில் கொங்கு மண்டலம் பெற்றிருந்த சிறப்புகள், உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ் பெற்றிருக்கும் தகுதிகளுக்கேற்ப அறிந்தேற்புப் பெற பரிதிமாற் கலைஞர் முதலாகத் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் மேற்கொண்ட முயற்சிகளும் பணிகளும் இடம்பெறுவதோடு இந்திய அரசின் ஏற்பினைப் பெற்றுத் தந்த முதல்வர் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவுகளும் இடம் பெறுகின்றன.

மேலும் இப்பக்கத்தில், நடைபெறவுள்ள மாநாட்டு ஆய்வரங்கத்தில் இடம்பெறக் கூடிய பொதுநிலைச் சிறப்பரங்கம், தனிப்பொழிவரங்கம்,. கலந்துரையரங்கம், கருத்தரங்கம் ஆகியவை பற்றியும் ஆய்வுக்கட்டுரைகளின் பொருண்மை விவரங்களும் தரப்பட்டுள்ளன.

பங்கேற்க எனும் பக்கத்தில், மாநாட்டு ஆய்வரங்கத்தில் கட்டுரையாளராக, நோக்காளராகப் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்து கொள்ளும் வகையில் படிவங்களும் கட்டுரையாளர் அனுப்ப வேண்டிய ஆய்வுச் சுருக்கத்திற்கான பகுதியும் இடம் பெற்றுள்ளன.

வலைத்தளப் பக்கத்திலிருந்தே பதிவு செய்து கொள்ளும் வகையிலும் தொடர்பு கொள்ளும் வகையிலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கடவுச் சொல் வழங்கப்படும் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு ஆய்வரங்கம் தொடர்பாக அவ்வப்போது வெளிவரும் ஊடகப் பதிவுகள் இடம்பெறும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இணையத் தளத்தை  www.ulakathamizhchemmozhi.org முகவரியில் காணலாம்.

 

உங்கள் கருத்துக்கள்

avatar Mahadeva
0
 
 
இந்த இணையத் தளம் இல்லை என பதிவிறக்க விபரம் வருகின்றதே ?
I tried to browse this website & unable to do so as I get results saying no such website ?
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Wednesday, 09 December 2009 09:52
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது