விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தினகரன் ஊழியர்கள் எரிப்பு வழக்கு திமுக -வினர் விடுதலை !
Written by editor   
Thursday, 10 December 2009 08:40
AddThis Social Bookmark Button

மதுரை-யில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு திமுகவில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று திமுக ஆதரவு நாளேடான தினகரன் நாளிதழ் கருத்துக் கணிப்பு வெளியிட்டது.

இந்த கருத்து கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகம் என்றும், மு.க. அழகிரிக்கு செல்வாக்கு குறைவு என்று மதிப்பிட்டு மதுரை தினகரன் பதிப்பு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 9.5.2007 அன்று , திமுக -வின் முக்கிய நிர்வாகிகளும் , மு.க.அழகிரி ஆதரவாளர்களும், மதுரை உத்தங்குடியில் உள்ள தினகன் நாளிதழ் அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீவைத்தனர்.

இந்த தாக்குதலில் தினகரன் ஊழியர்களான பொறியாளர்கள் கோபிநாதன், வினோத் குமார், காவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை விட மாட்டேன் என கலாநிதி மாறன் சபதம் செய்தார். இதனால் திமுக -வுக்கும், மாறன் சகோதரர்களுக்கும் மோதல் வெடித்தது

இந்த நிலையில் மாறன் சகோதரர்களுக்குப் போட்டியாக மு.க.அழகிரி, ராயல் கேபிள் டி.வியைத் துவக்கினார். இதனால் அறிவாலயத்தில் செயல்பட்ட சன் டி.வி. அலுவலகத்தை காலி செய்ய நிர்பந்தம் செய்யப்பட்டது. மேலும், சன் டி.வி. சார்பாக தயாரிக்கப் பட்ட படம் மதுரையில் ஓடவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக் கப்பட்டதில் 3 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் , பத்திரிக்கையாளர்கள் சங்கங்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
இதனையடுத்து, தமிழக சட்ட மன்றத்தில் முதலமைச்சர் 19.5.2007 அன்று அறிவித்தார்.

இந்த ்சம்பவம் தொடர்பாக திமுகவைச் அட்டாக் பாண்டி, திருச்செல்வம், பிரபு, சரவண முத்து, முருகன், விஜயபாண்டி, கந்தசாமி, ரமேஷ்பாண்டி, ராமையாபாண்டி, வழி விட்டான், சாலைமுத்து, சுதாகர்,ரமேஷ்குமார், திருமுருகன் (எ) காட்டுவாசி, ரூபன், மாலிக்பாட்சா மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ராஜாராம் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதி மன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நடை பெற்று வந்த தினகரன் நாளி தழ் தாக்கப்பட்ட வழக்கில் 85 சாட்சிகள் விசாரிக் கப்பட்டனர். நீதிமன்றத்தில் சிலர் பிறழ்சாட்சியளித்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ரத்தினராஜ் உத்தரவிட்டார்.

தற்போது திமுக - சார்பில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்கள்

avatar JEYARAJ
+1
 
 
எதிரிகள் எதிரிகளாகவே தொடர வேண்டுமெனெ எதிர்பார்த்த எதிரிகளுக்கு எதிரான தீர்ப்பு. ஓடம் ஜெயராஜ்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar ck
0
 
 
jayaraj erandhu ponavargaluku yenna sollapogureerga l.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar a
0
 
 
சத்தியமா நாடு உருபடவே உருபடாது....
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 10 December 2009 08:48
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது