விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

திருச்செந்தூர், வந்தவாசித் தொகுதிகளில், திமுக அமோக வெற்றி!
Written by editor   
Wednesday, 23 December 2009 10:09
AddThis Social Bookmark Button

நடந்து முடிந்த திருச்செந்தூர், வந்தவாசி, தொகுதிகளில், தமிழக ஆளும் கட்சியான திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 46,861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திருச்செந்தூர் தொகுதிக்கு கடந்த 19 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் அம்மன் நாராயணன், தேமுதிக சார்பில் கோமதி கணேசன் உள்பட 25 பேர் போட்டியிட்டனர்.

மொத்தம் வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரத்து 150. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 951 பேர் வாக்களித்தனர். இது 79.17 சதவீதமாகும்.

இந்த தொகுதியில் வாக்கு பதிவு முடிந்து 434 மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு திருசெந்தூர் ஆதித்தனர் கல்லூரியில் வைக்கப்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. 14 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில், இதில் திமுக வேட்பாளர் அனிதா ராதா கிருஷ்ணன், தமக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் அம்மன் நாராயணனை விட 46,861 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அனிதா 75,223 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் நாராயணன் 28,362 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் கணேசன் வெறும் 4,186 வாக்குகளும் பெற்றனர்.

அதிமுகவிடமிருந்த திருச்செந்தூர் தொகுதியை திமுக தடட்டிப் பறித்துள்ளது. தேமுதிக வேட்பாளர் கோமதி கணேசன் டெபாசிட் இழந்தார்.

திருச்செந்தூர் தொகுதியில் கடந்த 2001, 2006 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன், இம்முறை திமுக சார்பில் போட்டியிட்டு 3 வது முறையாக வெற்றிக் கனியை பறித்துள்ளார்

அதே போல் வந்தவாசி தொகுதியிலும்,  திமுக சார்பில் போட்டியிட்ட கமலக்கண்ணன், 38,017 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிகளுக்கு கடந்த 19 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் செய்யாறு அரசுக் கலைக் கல்லூரியில் நடைபெற்றது .

இதில் திமுக வேட்பாளர் கமலக்கண்ணன் 78,827 வாக்குள் பெற்றார். இவரையடுத்து வந்த அதிமுக வேட்பாளர் முனுசாமி 40,810 வாக்குகள் பெற்றார். தேமுதிகவின் வேட்பாளர் ஜனார்த்தனம் 7,063 வாக்குள் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் வந்தவாசி தொகுதியை திமுக மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஜனார்தனன் டெபாசிட் இழந்தார்.

தற்போது நடைபெற்ற திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய இரு தொகுதிகளையும் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது. அதிமுக தோல்வி முகம் கண்டுள்ளது. தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடதக்கது.
 

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Wednesday, 23 December 2009 11:16
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது