விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மாமல்லபுரத்தில் செம்மொழிப் பூங்கா திறந்து வைத்தார் துணைமுதல்வர்.
Written by editor   
Saturday, 26 December 2009 10:56
AddThis Social Bookmark Button

மாமல்லபுரத்தில் செம்மொழி சிற்பப் பூங்கா, மரகதப் பூங்கா திறப்பு விழா மற்றும் இந்திய நாட்டிய திருவிழாவை நேற்று மாண்புமிகு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முரசொலியெழுப்பித் தொடங்கிவைத்தார்.

இங்கு உரையாற்றிய துணைமுதல்வர், ' தமிழ்நாட்டின் கலைகளை வெளிமாநிலத்தவருக்கும், அயல்நாட்டினருக்கும் உணர்த்தும் வகையில் இந்த நாட்டிய திருவிழாவினை 1992 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி தொடங்கி சனவரி மாதம் 2 ஆம் வாரம் முடிய, ஒவ்வொரு வார விடுமுறை நாட்களில் மட்டும் இந்த நாட்டிய திருவிழா நடைபெற்றுவந்தது.

இந்த நாட்டியத் திருவிழாவினை காண உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலை ரசிகர்களும், சுற்றுலாப்பயணிகளும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதையொட்டி, 2007 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டிய விழா ஒரு மாதகாலம் தொடந்து நடத்தப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு 25.12.2009 முதல் 25.1.2010 வரை 31 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகளோடு, தமிழகத்தின் பண்பாட்டு கலாச்சாரங்களையும் இணைத்து மாமல்லபுரம் நாட்டிய விழா, இந்திய நாட்டிய விழாவாக நடைபெறவுள்ளது. தமிழகத்தின் சார்பாக பண்பாட்டு சங்கமம் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த நாட்டிய திருவிழாவில் நடைபெற இருக்கின்றது.

இந்த நாட்டிய திருவிழாவில் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மணிப்பூர், மிசோரம், அஸ்ஸாம் போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். 

 2009-10 ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட  ரூ. 57 கோடி ஒதுக்கியுள்ளார். சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தலைவர் கலைஞர் தொடர்ந்து எடுத்துவருகின்றார். சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடைபெற்றுவருகின்ற இந்த இந்திய நாட்டிய திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்கள்.  

இவ்விழாவில்   சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.என்.சுரேஷ்ராஜன்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பெ.விஸ்வநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ்.ஆர்.ராஜா, திருமதி. சங்கரி நாராயணன், திருமதி காயத்ரிதேவி, சுற்றுலாத்துறை செயலாளர் திரு.வெ.இறையன்பு, இயக்குநர் திரு. ஆ.சி.மோகன்தாஸ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 26 December 2009 11:24
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது