பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

என்ன செய்யப் போகின்றார்கள் ?
Written by editor   
Wednesday, 25 November 2009 22:22
AddThis Social Bookmark Button

 என்ன செய்யப் போகின்றார்கள் ? இந்தக் கேள்வி எப்போதும் எல்லாத் தளங்களுக்கும் பொருந்தி வரும் கேள்விதான், ஆனாலும் இப்போது ஈழத் தமிழர்களுக்கு அதிகம் பொருந்தி வருகிறது.  ஆனால்  இதே தளத்திலேயே இன்னும் சிலருக்கும் இக் கேள்வி பொருந்தி வருகிறது.

ஆதலால் அவற்றையும் இணைத்து,   ஒரு முன்னோட்டமாகவும் பார்க்கலாம்.

 ஈழத்தமிழர்களின் இன்றைய  அரசியல் வெற்றிடத்திற்கான முக்கிய காரணியானவர்கள்  விடுதலைப்புலிகள். ஈழத் தமிழர்களின் அரசியற் பிரதிநிதிகளாக அல்லது அரசியற் தலைமையாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இவர்களின், பிளவு, சரிவு, என்பனவற்றின் தொடர்ச்சி, இன்று ஈழத்தமிழ் மக்களை வாழ்விலும், அரசியலிலும், ஒருசேர நிர்க்கதியாக்கி வைத்திருக்கிறது.

ஈழத் தமிழர்களின் அரசியற் தலைமை தாமாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி நின்றதனால், போராட்டத்தின் பின்னடைவு அல்லது தோல்வி நிலையை முழுமையாக அவர்களுடன் பொருந்திப் பார்க்க வேண்டியுள்ளதாயினும், இன்றைய இந்த நிலைக்குப் பங்காளர்களாகப் பலரும் உள்ளார்கள் என்பதை விட, ஈழத்தமிழர்கள் எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் காரணமாகின்றார்கள் என்பதுதான் பொருத்தமாகவிருக்கும். அது பொது மக்கள் என்பதிலிருந்து தொடங்கி, போராளிகள் என்பதையும் உள்ளடக்கி ,  தமிழ் அரசியற் கட்சிகள் , களத்துக்கு அப்பால், புலம்பெயர் தமிழர்கள், ஈழத்தமிழர் ஊடகங்கள்  வரைக்கும் ஒவ்வொரு விகிதத்தில் பங்குண்டு என்பது மறுப்பதற்கில்லை.

ஈழத்தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தில், பொது எதிரியாக இருந்த  சக்தி, தன்னுடைய எல்லா வளங்களையும், ஒன்றினைத்துக் கொண்டது மட்டுமல்லாது, தன் சக்திக்கு அப்பாலும் கிடைக்கக் கூடிய அனைத்து வளங்களையும், வசப்படுத்தி வைத்து, பெரும் திரட்சியாக போர் நடத்தியிருக்கிறது. விடுதலைப்புலிகள் மீது நடத்தப்படுவதாகச் சொல்லி, தமிழ்மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர், அனைத்துத் தரப்பாலும், போருக்கான  அனைத்து நியாயங்களையும் தொலைக்கப்பட்டு, பெரும் இனப்படுகொலையாக நடந்து முடிந்திருக்கிறது என்பதில்  மாற்றுக் கருத்து இல்லை. அதிகாரங்கள்  மட்டும் பொது மக்கள் கைகளில்   இருக்குமானால், அனைத்துலக அரசியலாளர்களில் இருந்து போராளிகள்வரைக்கும், குற்றவாளிகளாகக் கண்டு தண்டித்துவிடும் பெருங் கோபம் இருக்கிறது மக்களிடம். ஆனால் அவர்களால் அது முடியாது என்பதால் மெளனித்திருக்கின்றார்கள்.

 

போரில் வெற்றியென மூர்க்கம் கொண்டிருந்த  சிங்கள அதிகார பீடம், இப்போது சிறிது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது என்பது உண்மையே. இனஅழிப்பில் இணைந்திருந்த கைகளுக்கிடையில் இடைவெளி தோன்றியுள்து. ஆட்சியதிகாரத்தைக் குறிவைத்து போட்டிக்களத்தில் குதிக்கவிருப்பவர்கள், ஆளாளுக்கு போட்டுத் தாக்கத் தயாராகிவிட்டார்கள். இப்போதைக்கு ஆரம்பம் லசந்த என்ற ஊடகவியலாளரின் கொலைக்குற்றச் சாட்டு. 

பிரிந்து நிற்கும் ஆதிக்க சக்திகள், பாராளுமன்றப் பெரும்பான்மைக்காக, சிறுபான்மைக் கட்சிகளுடன் பேரம் பேசும், அரசியல் ஆடுகளம் எப்போதும வருவதல்ல. இப்போது வந்திருக்கிறது. ஈழச் சிறுபான்மைத் தமிழர்களிடம் இரந்து வருவார்கள் வாக்குக் கேட்டு. பேரம் பேசலாம், அல்லது பேசாது எதிர்க்கலாம்.  எதுவென்றாலும், உதிரிக் கட்சிகளாக நின்று ஒன்றுமே நடக்கப்போதில்லை. ஒருவருக்கும் இது ஒன்றும் புரியாத விடயமல்ல. ஆனால் எதுவரையில் இந்த இணைவிற்கான  தூரம் என்பதுதான் எவருக்கும் புரியவில்லை. எல்லோரும் பேசுகின்றார்கள் மக்கள் நலன். ஆனால் எல்லாப் பேச்சுக்களிலும் முன்னிற்பது என்னவோ சொந்த நலன்தான். இல்லையென்பார் சொல்லட்டும்  இணைய முடியாமையின் காரணத்தை.

இருந்த இடத்தில் நடந்த போரில், இறந்தவர் யார்? பிரிந்தவர் யார்? தொலைந்தவர் யார்? என  அறிந்து கொள்ள முடியாத அவலத்தில் இன்னமும் மக்கள். இந்த நேரத்தில் வரும் தேர்தலில் வெல்பவன் யார் ? தோற்பவன் யார்? என்பதில் அவர்களுக்கு என்ன அக்கறை. அதைவிடவும், அவலப்பட்டு நிற்கும் மக்களிடம், அரசியலின் தேவையினைப் பேசிச் செல்ல யாருக்கும் தெளிவான மனமுமில்லை,  திடமான உறுதியுமில்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரைக்கும் எல்லோரும் ஏமாற்றியவர்கள். இன்னமும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள். இந்த நிலையில் அந்த மக்கள்  என்ன செய்யப் போகின்றார்கள்..?

இந்த மக்களின் பிரதிநிதிகளாக சொல்லியிருந்த விடுதலைப்புலிகள், புலத்தில் மட்டுமல்ல, புலத்திற்கு அப்பாலும், செயல்முடங்கிப் போயிருப்பதுவே உண்மைநிலை. களங்கடந்து, புலம்பெயர் சூழலிலும் வலுவான கட்டமைப்பைக் கொண்டிருந்த விடுதலை அமைப்பு, புலம் பெயர் தேசங்களிலும் குறிவைக்கபட்டுள்ள நிலை ஒரு புறும் என்றால், மறுபுறத்தில் அமைப்பின் உள்ளக உடைவுகளாலும் பலமற்று நிற்கிறது. இந்த நிலை மாறி, இந்த அமைப்பு  மீளெழும்ப வேண்டுமாயின் செய்ய வேண்டிய முக்கிய பணி, நம்பிக்கையற்று நிற்கும் மக்களிடத்தில் நம்பிக்கைகளைத் தோற்றுவிப்பது. ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. பொய்மைகளை கட்டமைத்து போலியாகத் தோற்றுவிக்க முடியாது. ஆதலால் உண்மை எதுவோ அதை உள்ளபடி சொல்லி, நல்லபடி நடப்பதே நம்பிக்கைத் தோற்றுவிக்கும். இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்..?

பொருளாதார மந்தத்தில் பொறி கலங்கிப் போயிருக்கும் மேற்குலகம், இதற்காக ஏதும் பெரிதாகச் செய்துவிடப் போவதில்லை  என்றாலும்,  நாகரீக உலகத்தின் நாயகர்கள்  தாம் என்பதை தரணியில் காட்டுவதற்கேனும் ஏதாவது செய்வார்கள். என்ன செய்யப் போகின்றார்கள்..?

இந்த யுத்தத்தின் இன்னொரு பங்காளர் இந்தியா என்பதை, இலங்கை அரசு அப்போதைக்கப்போது அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வைத்திருக்கிறது. அந்த வகையில், ஈழ மக்களின் இன்றைய நிலைக்கும் , இழக்கப்பட்ட உயிர்களுக்கும், பொறுப்பாக வேண்டியவர்கள். இப்பொதைக்கு இலங்கைத் தீவில், இந்திய முதலாளிகளுக்கு காணி நிலம் வாங்கும் காரியம் பார்ப்பது போல், கருமம் ஆற்றுகின்றார்கள். ஆற்றுவார்களா இவர்கள் ஈழத் தமிழர் துயரை..?

தொப்புள் கொடி உறவென்றும், தொடர்ந்த பல உறவென்றும்,  நம்பிக்கையோடு ஈழமக்கள் நாடிக் கொண்டாடிய தமிழகத்தின் தலைவர்கள், அடுத்த போருக்குத் தலைவர் வருவார் என அறிக்கைவிட்டே தொடர்கின்றார். போஸ்டர்களினாலும், புதுப்புது மறியல்களினாலும், போட்டோ பிடித்து மகிழலாமே தவிர,  புரட்சி பண்ணமுடியாது என்பது இவ்வளவு மக்கள் இற்ந்த பின்னும், அயராமல்அவ்வழி  தொடர்கின்றார்கள்.  அவர்களின் அந்த  அசாத்திய முயற்சியை அப்படியே தொடரப் போகின்றார்களா அல்லது  அதிலிருந்து மாறி, ஏதும் பயனாகச் செய்துவிட எத்தணிக்கப் போகின்றார்களா? எவருக்குத் தெரியும். என்ன செய்யப் போகின்றார்கள்..?

இப்போதைக்கு கேள்விகளாக மட்டுமே  நிரம்பிக்கிடக்கிறது.

உங்கள் கருத்துக்கள்

avatar eelavan
+1
 
 
இனித்தான் செய்யப்போகிறோம்.........! பொறுத்திருந்து பாருங்கள்.....
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar arun
0
 
 
மக்களை குழப்பும் கருத்துக்களை பரப்பாதீர்கள்.பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்....நன்றி
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar abdul.com - dubai
0
 
 
தோல்வில் துவலவோ வெற்றியில் மமதை கொள்ளவோ தேவையில்லை.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 26 November 2009 01:47
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது