விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சீமான்! சீறும் சிறுத்தையா? சிந்திக்கும் போராளியா? - 2
Written by editor   
Monday, 07 December 2009 00:03
AddThis Social Bookmark Button

ஈழத் தமிழனத்தின் இனப்படுகொலைக்குப் பின்னதாக, அந்தக் கொலைகளின் துரோகம் குறித்து, வெளிப்படையாகப் பேசும் ஒரு சில குரல்களில்,   ஓங்கி ஒலிக்கும்   ஒற்றைக் குரலாக தெரிவது  சீமானின் குரல்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சீமானின் உரத்த  குரலில் வெளிப்படும் உணர்ச்சிப் பேச்சுக் கேட்கத்   திரளும் மக்கள் மத்தியில், தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட  ஊடகங்களினால் மறைக்கப்பட்ட தமிழினத் துரோகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் துரோகங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துவதும்  அவர்தான்.

தமிழகத்தில் அரசியற்துரோகங்களால் அல்லற்பட்டும்,  தமிழனாக அவமானப்பட்டும் நிற்பதாகக் கருதும் எவனுக்கும் சீமானின் வார்த்தைகள் உயிர்ப்பூட்டுகிறது.

இயல்பாகவே எழும் கிராமத்துக் கோபம் மிக்கச் சீமான், சினிமாக்காரனாகச் சிரித்தபடிதான் திரிந்தார். ஆனால் அவரைச் சீண்டி, சினந்தெழுந்த கிராமத்தான் மாற்றியவர்கள், அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகள்தான். அவர்களது அராஜகங்களால் அடிபட்டு நொந்து போய்கிடந்த இளைய சமூகத்துக்கு, சீமானின் குரல் தன் குரலாய் தெரிகிறது. அதனால் அவர் பின்னே திரளுகின்றனர். திரளுகின்ற அந்த இளைய தலைமுறையை எப்படி பயனுள்ள போராட்ட சக்தியாக மாற்றப் போகின்றார் என்பதிலேயே சீமானின் எதிர்காலமும், அவரின் பின்னால் அணிதிரளும் இளைய சமூகத்தின் எதிர்காலமும் இருக்கிறது.  அந்த அவதானிப்பில் தான் பின் வரும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தனது முதற் சுட்டியாக எடுத்து தமிழகத்தில் தமிழர் பிரச்சனையை மையப்படுத்த முனையும் சீமான் கவனத்திற் கொள்ள வேண்டிய  பலவிடயங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக இந்தப் பத்தியில் தர முடியாது  போனாலும், முக்கியமான ஒரு சிலவற்றையாவது பதிவு செய்ய முனைவது நோக்கமாகின்றது.

தமிழக அரசியலில் தனித்துவமான சக்தியாக மாறவிழையும், சீமானும் , அவரது நாம் தமிழர் இயக்கமும் பயனிக்க வேண்டிய  தூரம் நெடுந்தொலைவு.  இந்த நெடுதூரப் பயணத்திற்கும் ,  தமிழக அரசியற் சக்தியாக அடையாளப்படுத்துவதற்கும்,  ஈழவிடுதலைப்போராட்ட எண்ணப்பாடு மட்டும் போதுமானதாக இருக்காது.  தமிழகமக்கள் பலருக்கும் ஈழத்தமிழ்மக்கள் மீது கரிசனமும்,  ஈழவிடுதலைப் போராட்டத்தில் அக்கறையும்,  நிறைந்த தமிழுணர்வும்  இருந்தாலும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த  அது மட்டும்  போதென்பதே தமிழகத் தேர்தற் களம் இதுவரையில் கற்றுத் தந்துள்ள பாடம்.  அதனாலேதான் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசிவரும் எவரும் தேர்தல் வரும்போது, பெரிய கட்சிகளுக்குள் சரண்புகுந்துகொள்கின்றனர். 

இதற்கு   தமிழக அரசியலில்  சிறப்பான  உதாரணமாகச் சொல்லக் கூடியவர்கள்  இருவர்.   முதலாமவர்  நீண்டகாலமாக  ஈழப்பிரச்சனையை  எடுத்துப்  பேசிவரும் மதிமுக செயலர் வை.கோபால்சாமி. மற்றையவர் விடுதலைச்சிறுத்தைகளி்ன்  தலைவர் தொல். திருமாவளவன்.  ஈழப்பிரச்சனை, தமிழுணனர்வு என்பன குறித்து எழுச்சிமிக்க கருத்துக்களை  எவ்வளவு தூரம் தமிழக மக்களிடம்  முன்வைத்து நின்றாலும்,  தேர்தற்களமொன்றைக் காணும் தருணத்தில் , இவர்கள் தடுமாறிப்போவது  தொடர்ச்சியாக நிகழ்ந்தே வருகிறது.  இதற்குக் காரணம் தேர்தற்களத்தில் வெற்றியைத் தரக் கூடிய வாக்குக்களைப் பெற்றுக் கொள்ளும் காரணியாக ஈழப்பிரச்சனையோ, தமிழுணர்வோ மட்டும்  அமைந்துவிடவில்லை என்பதே . 

இந்த அரசியல் நிலை அவர்களுக்கு மட்டுமல்ல, சீமானுக்கும் பொருந்தும்,  ஏன் வேறு யாருக்கும் கூட ஏற்படலாம்.  1983ல்  ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்த  அரசியற் போராட்டங்களில்  ஈடுபட்ட ஆர்வத்தில் அரசியலுக்குள் வந்து, தலித் மக்கள் பிரச்சனையையும்  இணைத்துக் கொண்ட தொல். திருமாவளவனால், ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கியமான தருணத்தில் எதுவும் செய்ய முடியாது  போய்விடுகிறது. இதற்காக அவரது ஈழ ஆதரவினைக் குறைத்து மதிப்பிட முடியாது.   இவரது  அரசியற் பிரவேச காலத்தையும்,  இப்போதுள்ள காலத்தையும், தமிழக அரசியலில் நிலைகொள்வதற்கான   வாக்கு வங்கியை உருவாக்குவது  குறித்தும் , சீமான்  அதிக கவனம் கொள்ள வேண்டியதும்  அவசியம்.  உன்மையில் இதனோடு தொடர்புடைய ஏனைய விடயங்கள் வேறு சிலவும் இருக்கின்றன. ஆயினும்  மேற்குறித்த இரண்டு விடயங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதாலும்,  அரசியற் பிரவேச நிலையில் நிற்பவர் சீமான் என்பதாலும் அவற்றை இங்கே குறிப்பிடுகின்றோம்.

அரசியலில் நிலை கொள்ள மிகஅவசியமானது  தேர்தலில் வெற்றியைத் தேடித் தரும் வாக்குகள். தமிழகத்திற்கென்றில்லாது உலகத்தக்கே பொதுவான விதியது. ஆனாலும்  தமிழகத்தில் இந்த வாக்கு வங்கிகளாக இருப்பவை சாதிய அமைப்புக்கள்.  இந்த விதியினை உடைத்து, தமிழர் எனும் பொதுமையைக் காணவிழையும் சீமானின் முயற்சி  புதுமையானதும் வரவேற்கத் தக்கதும்.  கட்சி கடந்த ஒரு பொதுமையை கண்டடைவது என்பது பேசுவது போல்  ஒன்றும் இலகுவானதல்ல. அதற்கு வேண்டிய களமும், காலமும் மிகப் பெரியது. 

'என் பின்னால்  மூன்று இலட்சம் தம்பிமார் இருக்கிறார்கள் ' என மேடைகளில் சொல்வது  புலம் பெயர்    தமிழர்களின் புருவங்களை உயர்த்தலாம். ஆனால் தமிழக அரசியலில்  மாற்றம் தருவதற்கு,இந்த தொகையின் பத்துமடங்கு திரண்டாற் கூட,  அது சொற்பமா கத்தான் இருக்கும்.  இப்படிச் சொல்வது சீமானால் அப்படியொரு நிலையை எய்துவிட முடியாது எனும் பொருளல்ல. மாறாக இன்னமும் செல்ல வேண்டிய தொலைவின் நீட்சியைச் சுட்டவே.

மேலும் திருமாவளவன் ஈழப்பிரச்சினையை முன்னெடுத்துப் பேசி கட்சி வளர்த்த காலத்தில், தமிழக, மத்திய அரசுகளின் ஈழநிலைப்பாட்டிற்கும் தற்போதுள்ள நிலைப்பாட்டிற்குமான களநிலை நேரெதிரானது. அதுபோலவே ஈழத்தில் அப்போதிருந்த போராட்ட முனைப்புச் சூழ்நிலை முற்றாக மாறி,  தேக்கநிலையே காணப்படுகிறது.  நீளப் பயனிக்க நினைக்கும் சீமான் நிச்சயம் இந்த நிலைகளைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகளின் போராட்டம் முடக்கப்பட்டதற்கே,  உலக வரைபுகளில் உரைக்கப்பட்ட நியாயம் 'தீவிரவாதம்' என்பதே.  அப்படி இருக்கையில், அரசியற' கட்சியாகப் பரிமளிக்கவிரும்பும் சீமான்,  தனது மேடைப்பேச்சுக்களில் குண்டுகளாய்  வெடிப்போம் என்பதும், மாற்று இனம் மீது வஞ்சம் தீர்ப்போம் எனச் சூளுரைப்பதும்,  அவரை அடக்க நினைப்பவர்களுக்கு  அரிய வாய்ப்பாக அமைந்துவிடும். அன்மையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சம்பவம் அதற்கு நல்ல உதாரணம்.  அதைவிடவும், வெடிப்போம் அழிப்போம் என்பதனை கட்சிக் கொள்கையாகக் காட்முடியுமா?  அல்லது அதையொரு போராட்ட நடைமுறையாகக் கொள்வதானல் கூட, ஈழத்தில் இது இனிச் சாத்தியமில்லை என்றுதானே விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மெளனித்தார்கள் என்றார்கள். அப்படியிருக்கும் போது  அந்த வடிவத்தை உயிர்பிப்பதாகக் கூறுவது நடைமுறைச் சாத்தியமானதா?.

இவ்வாறு சீமான் உரைக்கும் போதேல்லாம், சீமானும் சரி , அந்த உரைக்கு அக மகிழ்ந்து கைதட்டுவோரும் சரி சுலபமாக ஒன்றை மறந்து விடுகின்றார்கள்.   இத்தகைய உரைகளும், உணர்ச்சி வசப்படுதல்களும், சிங்களத்தால் சிறைப்பட்டுக் கிடக்கும் போராளிகளின் முன்  உள்ள சிறைக்கதவுகளில்  மேலும் கம்பியினை  பொருத்திவிட உதவுகின்றார்கள் என்பதனை.

மேலும் பிரபாகரன் என் தலைவன் எனக் கூறும் சீமான, புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விடயம், 83ல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பித்திருந்த போதும்,  83க்கு முன்னர் சில ஆண்டுகளும், பின்னர் 85 வரையிலும்   தங்கள் செயற்பாடுகளை மிக அமைதியாகவும், இரகசியமாகவும் வைத்திருந்தார்கள் என்பது. ஆக சரியான காலம் வரும் வரையில் பிரபாகரன் விடுதலைப்புலிகளின்  சக்தி என்ன என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியதில்லை.அது ஒரு இரகசிய இயக்கத்திற்குச் சரியான நடைமுறை. ஆனால் அரசியல் இயக்கமாக மலர நினைக்கும் சீமானின் 'நாம் தமிழர்' அப்படி அமைய முடியுமா எனக் கேட்டால், அது அரசியல் இயக்கமாக அங்கீகாரம் பெறும் வரையிலாவது அந்த நடைமுறை அவசியம் என்றே சொல்லலாம்.

தனது அரசியற் பிரவேசத்திற்கு உணர்ச்சிகரமான தனது பேச்சுத் திறனை அடித்தளமாக சீமான் இடுவதில் தவறில்லை. ஆனால் அந்தஅடித்தளத்திலிருந்து கோபுரமாக உயர உரைகள் மட்டும் போதுமானதாக இல்லை. அப்படி அது போதுமென்பது உண்மையானால், திமுகவிலிருந்த போதே தனது சொல்லாற்றலால் பெயர் பெற்ற வை.கோ, அங்கிருந்து விலக்கப்பட்ட பின் , தன்னை தனித்துவமான அரசியல் சக்தியாக  நிலைநிறுத்த முடியாது போனது ஏன் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். சீமான் தற்போது சொல்லும் பிரபாகரனின் நெருக்கமும், ஈழஆதரவு உரையும் அவரிடமும் அளவுக்கதிமாகவே இருந்தது.

ஈழத்தமிழ் மக்களின் இன்னல்களைத் தெரிவிப்பதோ,  அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களைக் கூறுவதோ தப்பென்றில்லை.  அதே சமயம்,  தமிழகத்தில் தமிழர்கள் எவ்வாறு அரசியல் ரீதியாக வஞ்சிகப்படுகின்றார்கள் என்பதை விளக்கிச் சொல்வதும்,  அந்த நிலைகளிலிருந்து மாற்றங்காண அவர்களை அணிதிரட்டுவதும்  அரசியல்படுத்துவதும்  அவசியமாகிறது.  கட்சி அரசியல்வாதிகளின் கயமைத் தனத்தை,  ஏழைமக்கள் ஏமாற்றப்படுவதை,  விலாவாரியாக விளக்கிச் சொல்லி, கிராமங்களை விழித்தெழச் செய்வது  விரைவாக இலக்கினை அடைய உதவும். அதுவே ஆழமான செயற்பாடாவும், அர்ப்பணிப்புடைய செயலாகவும் அமையும்.

வெள்ளந்தியான கிராம மக்கள் மத்தியில் வேசங்கட்டாத மக்கள் பிரதிநிதியாக மாறி,  புதிய மாற்றத்தினைக் காணவிழையும்  கருத்தியலாளனாக, சிந்தனையாளனாக திகழ்ந்தால் மட்டுமே,  தன் பின்னால் அணிதிரளும்  மக்கள் கூட்டத்தை, தமிழர்களுக்கான  இலக்குவரை அழைத்துச் செல்ல முடியும்.  அந்த நிலையை அடைய சீமான்,  சீறும் சிறுத்தையாக இருப்பதைவிட சிந்திக்கும் போராளியாக இருப்பதே சிறந்தது.  சிந்திப்பாரா சீமான் ?

முதற் பகுதியை வாசிக்க

சீமானின் 'நாம் தமிழர்'  அமைப்பின்  திருப்பூர்  சிகழ்வில்  சீமான் உரையின் கானொளி காண

உங்கள் கருத்துக்கள்

avatar Ezhilan
0
 
 
சிறந்த கருத்து.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar சேரன்
0
 
 
அப்புடிப் போடு
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar Nagai Tamizhan.
0
 
 
வாழ்க தமிழ் , வெல்க தமிழ்................
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar g varadharajan
0
 
 
ஆவெசப் பேச்சுடன் சிறிது சாணக்கியத்தனமும் இருந்தால் சிறந்த எதிர்காலம் அவருக்கு உண்டு உண்டு வாழ்த்துக்கள்

புதுக்கோட்டை ஜி வரதராஜன்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar paramesh
0
 
 
சீமான் சீரும் சிருத்தை புலி
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 07 December 2009 08:22
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது