பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

திமுக 5000, அதிமுக 1500, திருச்செந்தூர் - வந்தவாசி இடைத் தேர்தல் - ஒரு ரவுண்டப்!
Written by editor   
Thursday, 17 December 2009 08:37
AddThis Social Bookmark Button

திருச்செந்தூரில் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. வந்தவாசி தொகுதியில் தி.மு.க சார்பில் கமலக்கண்ணனும், அ.தி.மு.க.சார்பில் முனுசாமியும், மற்றும் 11 சுயேச்சைகள் உள்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.

அதே போன்று திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க சார்பில் அம்மன் டி நாராயணன் ஆகியோர் இடையே போட்டி கடுமையாக உள்ளது. தே.மு.தி.க., சார்பில் கோமதி கணேசன் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் 22 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.

இந்த இரு தொகுதிகளில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்தே திருச்செந்தூர் வந்தவாசி தொகுதியில் கடும் பிரசாரமும் துவங்கியது.
வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியான 5 ம் தேதி முதல், பிரசாரம் சூடு பிடித்தது. வந்தாசி தொகுதியில் வட மாவட்ட தி.மு.க முக்கிய நிர்வாகிகள், தமிழக அமைச்சர்கள், வந்தவாசி தொகுதி முழுவதும் பல பகுதிகளில் தங்கி பிரசாரம் மேற்கொண்டனர்.

அதே போன்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தம்பித்துரை, ஜெயக்குமார் , பொன்னையன் போன்றவர்களும், கட்சி நிர்வாகிகளும் கிராமம், கிராமமாக சென்று அதிமுகவுக்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்தனர்.

இந்த இரு தொகுதியில், திமுக சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சரும் தென்மண்டல திமுக அமைப்புச் செயாளர் மு.க. அழகிரி கனிமொழி எம்பி, மத்திய அமைச்சரும், நடிகருமான நொப்போலியன் போன்றவர்களும் , காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி. தங்கபாலுவும், அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலலிதாவும், மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனில்ட் கட்சி சார்பில் தா. பாண்டியனும் , கடும் பிரச்சாரம் மேற்கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தலைவர்கள் பிரசாரம் முடிவடைந்த நிலையில் தொகுதியில் திமுக சார்பில் தலா ஒருவருக்கு ரூ 1000 முதல் ரூ 5000 வரை வினியோகப்பட்டு வருகின்றது. மேலும் வீட்டிற்கு ஆண்களுக்கு ஒரு வேஷ்டி , சட்டையும், பெண்களுக்கு சேலை, ஜாக்கெட்-டும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வப்போது வாக்களார்களை குஷிப்படுத்த பிரபல கம்பெனியின் மது பாட்டில்கள் வழங்கப்பட்டது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று மீன் , ஆடு , கோழி போன்ற அசைவ விருந்து பரிமாறப்படுகின்றது. அதே போன்று அதிமுக சார்பில் வாக்களார்களுக்கு தலா ரூ 200 முதல் 1500 வரை வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் அவ்வாறு வழங்கும் போது அதை போலீசார் உதவியுடன் திமுகவினர் தடுத்து வருவதால் அதிமுகவினர் கடும் சோர்வில் உள்ளனர்.

தேமுதிக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தொகுதியை சுற்றித் சுற்றித் வந்து ஓட்டு கேட்ட வண்ணம் உள்ளனர்.

தி.மு.க- விற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் மக்கள், கிறிஸ்துவர்கள் , அரசு விழியர்கள் , மகளீர் சுயஉதவிக் குழுக்கள் போனறவர்களின் ஓட்டு வங்கி ஆதரவு பக்கபலமாக உள்ளது.

அதே போன்று அதிமுகவுக்கு , மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக மட்டுமே பலம் வாய்ந்ததாக உள்ளது.

தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக, தி.மு.க , அ.தி.மு.க , தே.மு.தி.க போன்ற கட்சிகள் மீது 100 -க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 196 பூத்களுக்கும், மின்னணு ஓட்டு இயந்திரங்களுடன், கூடுதலாக 20 இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. தேர்தலின் போது ரகசிய கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைவதால் அதன் பிறகு வெளியூர் கட்சி பிரமுகர்கள், மற்றும் வெளியூர் ஆட்கள் தொகுதிகளில் இருக்கக் கூடாது என, தேர்தல் ஆணையம் உத்தரவி்ட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் பாதுகாப்பு குறி்த்து தமிழக டி.ஜி.பி. கே.பி.ஜெயின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்த இரு தொகுதிகளிலும் தமிழக போலீசார், கர்நாடக ஆயுதப்படை போலீசாருடன், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, ஐயப்ப சீசன் காலம் என்பதை நினைவில் கொண்டு திமுக, அதிமுக , தேமுதிக போன்ற அரசியல் கட்சியினர் சிலர் சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிவித்தது போல் கறுப்பு, காவி வேட்டிகளில் வலம் வந்து கொண்டுள்ளனர்.

இந்த இரு தொகுதிகளிலும் தேர்தல் வன்முறை எப்போது வேண்டும் என்றாலும் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தல் - வாக்களர்கள் வாக்குரிமையை பாதுகாக்க 13 ஆவணங்கள்

திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதிகளில் வாக்காளர்கள் கீழ்கண்ட 13 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதிகளுக்கு வரும் 19 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஓட்டை பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்கண்ட 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை தேர்தல் அதிகாரியிடம் காண்பித்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

1.பாஸ்போர்ட்,

2.ஓய்வூதிய அடையாள அட்டை

3.மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையினரால் வழங்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் அடையாள அட்டை,

4.மத்திய-மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அல்லது பொது நிறுவனங்களால் வழங்கப்படும் பணியாளர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை,

5.பொதுத்துறை வங்கிகள், தபால் நிலையங்கள், விவசாயிகள் பாஸ்புக் (31.10.2009 முன்பு வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும்)

6.ஓட்டுநர் உரிமம்,

7.சுதந்திர போராட்ட வீரர் அடையாள அட்டை,

8. புகைப்படத்துடன் கூடிய சொத்துப் பட்டா மற்றும் பதிவு ஆவணங்கள்.

9.துப்பாக்கி உரிமர் வைத்திருப்பதற்கான அடையாள அடை,

10.ஊனமுற்றோர்களுக்கான அடையாள அட்டை, 11.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை,

12.பான் கார்டு

13.எஸ்.சி., எஸ்டி., ஓ.பி.சி., புகைப்படத்துடன் கூடிய சாதிச் சான்றிதழ்,


வாக்காளர்கள் ஓட்டுப்போட கொண்டுவரும் அடையாள அட்டை குறித்த விபரத்தை 17 (ஏ) என்ற படிவத்தில் கண்டிப்பாக பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

4தமிழ்மீடியாவுக்காக திருச்செந்தூரிலிருந்து: ரேவதிவேலு

படங்கள்: குலாம் பர்கத்

உங்கள் கருத்துக்கள்

avatar muthuvel
0
 
 
உஉவலநசவபள
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Thursday, 17 December 2009 12:55
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது