விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

நாமக்கல்லில் நல்லதொரு கலெக்டர் !
Written by editor   
Monday, 21 December 2009 17:26
AddThis Social Bookmark Button

 

நல்லது செய்ய நினைக்கும் ஒரு அதிகாரிக்கு,  தமிழகத்தில் என்னென்ன இடையூறுகள் ஏற்படும் என்பதை, அடிதடிப்படங்களில் அதிகமானவை வகுப்பெடுத்தாற் போல் பாடம் நடத்தியிருக்கின்றன நமக்கு. அவையனைத்தையும் சினிமாக்கதையென்று சிலாகித்து ஒதுக்கி விடவும் முடியாதவாறுதான் உண்மை நிலை உள்ளது. அப்படியான இடையூறுகள் அனைத்தையும் தாண்டி, தமிழகத்தில் 'சபாஷ் கலெக்டர்' எனச் சொல்லவைத்திருப்பவர், நாமக்கல் கலெக்டர் அவர்கள்.

கடந்த 12 - 10 -2009 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு முகாமில் , இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இது வரை செய்ய முடியாத ஒரு காரியத்தை மிக அமைதியாக செய்து முடித்துள்ள அவர் ஒரு தமிழன்.

"மகா ஜனங்களே ! நான் சொல்வதை ஒரு நிமிடம் கேளுங்கள். என்னிடம்  உள்ள சொத்தின்  மதிப்பு இவ்வாளவு தான். இந்தத் தொகையிலிருந்து,  எனது சொத்து மதிப்பு உயரவும் வாய்ப்பில்லை. குறையவும் வாய்ப்பில்லை என சூசகமாக சொல்லியுள்ளார்.  இப்படிச் சொன்ன நாமக்கல் மாவட்ட கலெக்டர்   வங்கிக் கணக்கில் இருந்த இருப்புத் தொகை ரூ. 7172 .

 

அவருக்குள்ள  அசையாச் சொத்து என்னவென்று  பார்த்தால் பெரிய மாட மாளிகையோ அல்லது பங்களாவோ இல்லை. மதுரை அருகே பாஸ்டின் நகரில் இரண்டு சென்ட்டில் வீடு மட்டுமே உள்ளது. இதன் இன்றைய மதிப்பீடு சுமார் 9 லட்சம் மட்டுமே.  இப்படி , தனது சொத்து கணக்கை பகிரங்கமாக வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரும் பாராட்டையும், அரசியல்வாதிகளுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்துள்ள நாமக்கல் கலெக்டரின் பெயர் சகாயம். அவரது தந்தையார் பெயர்  உபகாரம் பிள்ளை.

தமிழகத்தில்   இப்படி ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியா உண்டா என பலருக்கும் ஆச்சர்யம். பிளஸ் அதிர்ச்சி. ஆம், உண்மைதான்.  இந்தியாவிலேய   தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வண்ணமும், வருங்கால சந்ததியினர் எவ்வளவு நேர்மையாக வாழ வேண்டும் என்பதனை,  சுட்டிக் காட்டத் தக்க வகையில், உதாரபுருஷனகா திகழ்கின்றார் கலெக்டர் சகாயம் அவர்கள்.

அட! பெயர்களே சற்று வித்தியாசமாக இருக்கின்றதே. அதற்கேற்றாற் போல் செயலிலும் வித்தியாசம் தெரிகிறதே, என எழுந்த ஆர்வத்தில், இந்த மக்கள் காவலனின் பின்னணி குறித்து அறிந்துகொள்ள ஆர்வமானோம்.

சகாயத்தின் சொந்த ஊர் புதுக்கோட்டை. இவர் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் . கலெக்டர் சகாயத்தின் தந்தை பெயர் உபகாரம் பிள்ளை. தாயார் சவேரியம்மாள்.

கலெக்டர் சகாயத்தின் மனைவி நிர்மலா மதுரையைத் சேர்ந்தவர். பிஎஸ்சி, பிஎட் படித்தவர். இவர்களுக்கு ( 7 ம் வகுப்பு படிக்கும் ) திலிபன் என்ற அழகான ஒரு மகனும், ( 3 ம் வகுப்பு பயலும் ) யாழினி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

வறுமை வாட்டிய போதும், தன்னம்பிக்கை காரணாக விடாமல் கல்வி பயின்று சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து எம்.ஏ. சமூகப் பணி பட்டம் பெற்ற முதல் பேட்ச்சைச் சேர்ந்தவர். அது மட்டும் இன்றி முறையாக சட்டமும் பயின்று வெற்றி பாதை நோக்கி வீறுநடை போடுகின்றார்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்த சகாயத்திற்கு , கடந்த 2001 -ம் ஆண்டு ஐஏஎஸ் அந்தஸ்து தேடி வந்தது.

இவர் பெயரில் தான் சகாயம் உள்ளதே தவிர எந்த ஒரு அரசியல்வாதி-க்கும் சரி, அதிகாரிகளுக்கும் சரி இது வரை இவர் சகாயம் காட்டியதே இல்லை என்று சொல்லலாம்.

ஊழல் பேர்வழிகளை அடையாளம் கண்டு அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்பதில் சகாயம் கில்லாடி. மேலும் முறைகேடுகளுக்கு எதிராக மிகத் துணிச்சாக போராடும் இளம் வாலிபர்.

இவர் தமிழக அரசு பதவியில் பணியாற்றிய போது மணல் கொள்ளையர்கள், குளிர்பானக் கம்பெனியின் மோசடிகள், ஹோட்டல்களில் நடைபெறும் முறைகேடுகள், காஸ் டீலர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கடுமையாகவும், துணிச்சலாகவும், இடைவிடாமலும் போராடி வெற்றிகளை குவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் இவர் பணியில் இருந்த போது, பாலாற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை நடந்தது. இதனால் வெகுண்டு எழுந்த சகாயம் மணல் கொள்ளையர்களை எதிர்த்து கடுமையாக சாட்டை சுழற்றினார். அதற்காக இவருக்கு கிடைத்த பரிசு தாக்குதல் மட்டுமே . அதையும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு தனது கடமையில் இருந்து சற்றும் ஓடிவிடவில்லை. ஓய்ந்துவில்லை.

1999 ம் ஆண்டு, மிகப் பெரிய பன்னாட்டு குளிர்பான நிறுவனமான பெப்ஸி தனது குளிர்பானங்களை மிக மோசமான தரத்துடன் தனது தயாரிப்பை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து வந்தது. அதை கண்டறித சகாயம் துடிதுடித்து போய் அந்த குளிர்பானத் தயாரிப்பு நிறுவன பிரிவை மூட அதிரடியாக உத்தரவிட்டார். இதற்காக இவருக்கு கிடைத்த பரிசுகள் கொலை மிரட்டல்கள்.
ஆனாலும் அசராமல் தனது முடிவில் இருந்து இவர் மாறவே இல்லை. இனால் தமிழகத்தின் கவனம் இவரது பக்கம் திரும்பியது.

இதனால், எரிச்சல் அடைந்த அந்த நிறுவனம் சகாயத்தின் இந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மூலம் இடைக்காலத் தடை பெற்று தனது பண பலத்தை நீருபித்தது.

கோவையில், சிவில் சப்ளைஸ் துறையி்ன் துணை ஆணையராக சகாயம் இருந்த போது, வீட்டு பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களை ஹோட்டல்களில் பயன்படுத்துவதை கண்டுபிடித்து ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். பெரிய பெரிய பல்வேறு ஹோட்டல்களில் இவரே நேரடியாக ரெய்டு நடத்தி அதிரடியாக சிலிண்டர்களைக் கைப்பற்றிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அப்போது , இது போன்ற மோசடி செயல்களால் எண்ணை நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 4000 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது என்று தெரிவித்ததோடு, . அது குறித்து அரசுக்கும் விரிவான அறிக்கை அனுப்பி வைத்து அரசின் பாராட்டை பெற்றார்.

தமிழகத்தின் தலைநகரத்தில் சகாயம் வருவாய் அதிகாரியாக பணியாற்றிய போது, தமிழகத்தில் அதிகார பலம் மிக்க பிரபல ஹோட்டலான சரவண பவன் அண்ணாச்சி ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ 200 கோடி மதிப்புள்ள நிலத்தை நாட்டிற்கு மீட்டுக் கொடுத்தார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் பேசியபோது

ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தங்களது சொத்துக்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது பொதுவான விதி. நான் அதையும் தாண்டி, எனது சொத்து விவரத்தை மக்களுக்கும் சேர்த்து தெரியப்படுத்தியுள்ளேன்.

எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை ஏழை, எளிய மக்கள் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவேன். அதுவே எனது லட்சியம் .

நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல்தான மிகப் பெரும் தடைக்கல் என்பது எனது கருத்து. நான் ஊழல் கரையோடு இருக்க மாட்டேன் என்பதை வெளி்ப்படுத்தும் வகையில்தான் இந்த சொத்துக் கணக்கு விவர வெளியீட்டுள்ளேன். நான் ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்றார் மிக தன்னடக்கமாக.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசு அலுவகங்களில் உள்ள அரதிகாரிகள் இன்றைக்கு கிடைத்த லஞ்சம் எவ்வளவு என கணக்கு பார்க்கும் இந்த காலத்தில் லஞ்சம் தவிர். நெஞ்சம் நிமிர் என தனது அறையின் கதவில் வாசகத்தை அற்புதமாக பதிய வைத்ததோடு அதை பின்பற்றியும் வாழ்ந்து வருகின்றார்.

அன்று ஒரு அப்துல் காலம். இன்று ஒரு சகாயம். இவர்களை பின்பற்றினால் நாடு லஞ்சம் வஞ்சம் இல்லா வல்லரசு ஆவது உறுதி.

 

4 தமிழ்மீடியாவிற்காக நாமக்கல்லிருந்து ரேவதிவேலு
படங்கள் - எம். ஆனந்தகுமார்.

உங்கள் கருத்துக்கள்

avatar shiva
0
 
 
உன்னைப்போல் ஒருவன் வேண்டும்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar maanashaa
0
 
 
தன் மகன் சான்றோன்ன் என கேட்ட தாயின் உள்ளம்ச சந்தோசம் அடைவது போல்...உன் பெயரால் தமிழகமே பெருமை கொள்கிறது..

மைதிலி.மானசா.கருர்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar Karthikesan
0
 
 
பாராட்டுகள்.......கார்த்திக் & பாலா துபாய்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar ukkirapandian
0
 
 
இவரால் பதவிக்கு பெருமை . வாழ்த்துக்கள்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Wednesday, 23 December 2009 01:03
 
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது