பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

சச்சினின் புதிய சாதனையும், அதிரடி ஆட்டமும் கைகொடுக்க போராடித்தோற்றது இந்தியா!
Written by Sara   
Friday, 06 November 2009 00:08
AddThis Social Bookmark Button

இந்திய அவுஸ்த்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியில், கடும் போராட்டத்தின் பின் அவுஸ்த்திரேலியாவிடம் தோற்றது இந்தியா. எனினும் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 17,000 ரன்களை கடந்து படைத்த புதிய உலக சாதனை, இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

ஹைதராபாத்தில் ஆரம்பமான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 350 ஓட்டங்களை குவித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஷேன் வட்சன்(93 ஓட்டங்களையும்) - மார்ஷ் 145 (ஓட்டங்களையும்) எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய ரிக்கி பொண்டிங் (45) , வைட் (57) சிறப்பான துடுப்பாட்டத்தினை வழங்கி அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர். அதிரடியாகவே ஆட்டத்தை தொடர்ந்த அவுஸ்த்திரேலிய அணி,  இறுதி 7 ஓவர்களில் மட்டும் 80 ரன்களை குவித்தது!

351 என்ற இலக்குடன், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஷேவாக், டெண்டுல்கர் ஜோடி களமிறங்கினர். பதிலடியினை அதிரடியாகவே ஆரம்பித்த போதும், 38 ஓட்டங்களுடன் ஷேவாக் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய கம்பீர், யுவராஜ் சிங், தோனி அனைவரும் வரிசையாக குறைவான ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர்.

மறு பக்கம் சச்சின் டெண்டுல்கர் மட்டும் நிதனாமாகவும் அதே நேரம் ஒன் மான் ஷோவாக அதிரடியாக விளையாடி தனது சதத்தினை பூர்த்தி செய்தார். அப்போது அவருடன் ஜோடி சேர்ந்தர் ரைனா! இருவரும் இந்திய ஆட்டத்தினை மீண்டும் தூக்கி நிறுத்தினர். எனினும் 42.3 ஓவரில் 299 ரன்களை பெற்றிருக்கும் போது ரைனா ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து சச்சினுடன் ஜோடி சேர்ந்த ஜடேயா தனது பங்கிற்கு நிதானமாக விளையாடி, சச்சினுக்கே வாய்ப்பினை அதிகமாக கொடுத்தார். 19 பவுன்றிகள், 6 சிக்ஸர்கள் அடங்களாக 175 ரன்கள் பெற்றுக்கொண்ட சச்சின், இறுதி வரை நின்று ஆட்டத்தினை வெற்றி பெறச்செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், 47.1 ஓவரில் 332 ரன்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.

டேஜாவும், சச்சினை தொடந்து ரன் அவுட்டில் ஆட்டமிழக்க, இறுதி 11 பந்துகளில் 16 ரன்களை பெறவேண்டியிருந்தது இந்தியா.அந்த நேரம் சிக்ஸர் அடித்த குமார், ஆட்டத்தினை திசைதிருப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒன்பது விக்கெட்டுக்களையும் இந்தியா இழந்திருந்தது.

நிலமை இவ்வாறிருக்க 49 வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 3 ஓட்டங்களை எடுத்த போதும்,4 வது பந்தில் ஒரு ரன் எடுத்து, அடுத்த ரன் எடுக்க முயற்சித்த குமார் ஆட்டமிழக்க, ஆல் அவுட் ஆனது இந்தியா.இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவ நேரிட்டது

எனினும் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக 175 ரன்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரே தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது அவுஸ்த்திரேலியா!

இன்றைய போட்டியில் சச்சின் செண்டுல்கர் பெற்ற 175 ஓட்டமே, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், பதிலெடுத்து ஆடும் ஆணியின் தனிநபருக்கான மூன்றாவது அதிகபட்ச ஓட்டமாகும்.

அத்துடன் இந்தியா பெற்றுக்கொண்ட 347 ரன்களே, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், பதிலெடுத்து ஆடும் அணி பெற்றுக்கொண்ட மூன்றாவது அதியுயர் ஓட்ட எண்ணிக்கை ஆகும்.




உங்கள் கருத்துக்கள்

avatar nagarasan
0
 
 
இந்த சாதனையால் இந்நாட்டு மக்களுக்கு மூனுவேலை கஞ்சி,முழு சுகாதாரவசதி,தான் விரும்பிய இலவச கல்வி,,ஒண்டகுடிசை இன்ன பிற‌
வெல்லாம் கிடைக்குமுன்னா....கொண்டாடலாம்.உலக முதலாளிகளின்
விளம்பர போர்டின்[சச்சின்]சாதனையில் மகிழ்வதர்க்கு ஒன்றுமில்லை.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 06 November 2009 10:56
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது