விளம்பரம்
பாவித்த கார்களை விற்க அல்லது வாங்குவதற்கு !14 நாட்கள் முன்பே விமான டிக்கெட் புக் செய்தால் 30% விலைக்கழிவு!
இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய !
அப்பார்ட்மெண்ட், வீடுகள் , வாகனம், வாங்க விற்க, இலவச விளம்பரம் செய்ய !
இரட்டிப்பு நன்மையை அனுபவியுங்கள்! ஹெல்த் இன்சுரன்ஸ் + டாக்ஸ் சேமிப்பு!
இலவச நியூஸ்லெட்டர்..
வாக்கெடுப்பு
சோசல் நெட்வேர்க்..
வந்தவங்க சொன்னாங்க
செய்மதிப்படங்களை ஆதாரமாக கொண்டு - சிறிலங்கா அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல்!!!..all tamilans in the world should keep their strength in one same track of world court;if not ; all tamilans are zero 0000000000000000000000000000 zero 0000000'....
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு ?!!..MARUFADIYUM PERIYA THAWERILATHTHUWITTARKAL IWARKAL AATHARIPPATHU ORU NONDY KUTHIRAIYAI
...
4தமிழ் மீடியாவிற்கு இணைப்பு தர!!!..இஅஇஅப்பம்மதிஇரமிதமிஉக
...
லைவ் ஸ்கோர் காட்
| சச்சினின் புதிய சாதனையும், அதிரடி ஆட்டமும் கைகொடுக்க போராடித்தோற்றது இந்தியா! |
| Written by Sara |
| Friday, 06 November 2009 00:08 |
|
அடுத்து களமிறங்கிய ரிக்கி பொண்டிங் (45) , வைட் (57) சிறப்பான துடுப்பாட்டத்தினை வழங்கி அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர். அதிரடியாகவே ஆட்டத்தை தொடர்ந்த அவுஸ்த்திரேலிய அணி, இறுதி 7 ஓவர்களில் மட்டும் 80 ரன்களை குவித்தது! 351 என்ற இலக்குடன், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ஷேவாக், டெண்டுல்கர் ஜோடி களமிறங்கினர். பதிலடியினை அதிரடியாகவே ஆரம்பித்த போதும், 38 ஓட்டங்களுடன் ஷேவாக் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய கம்பீர், யுவராஜ் சிங், தோனி அனைவரும் வரிசையாக குறைவான ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர். மறு பக்கம் சச்சின் டெண்டுல்கர் மட்டும் நிதனாமாகவும் அதே நேரம் ஒன் மான் ஷோவாக அதிரடியாக விளையாடி தனது சதத்தினை பூர்த்தி செய்தார். அப்போது அவருடன் ஜோடி சேர்ந்தர் ரைனா! இருவரும் இந்திய ஆட்டத்தினை மீண்டும் தூக்கி நிறுத்தினர். எனினும் 42.3 ஓவரில் 299 ரன்களை பெற்றிருக்கும் போது ரைனா ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து சச்சினுடன் ஜோடி சேர்ந்த ஜடேயா தனது பங்கிற்கு நிதானமாக விளையாடி, சச்சினுக்கே வாய்ப்பினை அதிகமாக கொடுத்தார். 19 பவுன்றிகள், 6 சிக்ஸர்கள் அடங்களாக 175 ரன்கள் பெற்றுக்கொண்ட சச்சின், இறுதி வரை நின்று ஆட்டத்தினை வெற்றி பெறச்செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், 47.1 ஓவரில் 332 ரன்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். டேஜாவும், சச்சினை தொடந்து ரன் அவுட்டில் ஆட்டமிழக்க, இறுதி 11 பந்துகளில் 16 ரன்களை பெறவேண்டியிருந்தது இந்தியா.அந்த நேரம் சிக்ஸர் அடித்த குமார், ஆட்டத்தினை திசைதிருப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒன்பது விக்கெட்டுக்களையும் இந்தியா இழந்திருந்தது. நிலமை இவ்வாறிருக்க 49 வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 3 ஓட்டங்களை எடுத்த போதும்,4 வது பந்தில் ஒரு ரன் எடுத்து, அடுத்த ரன் எடுக்க முயற்சித்த குமார் ஆட்டமிழக்க, ஆல் அவுட் ஆனது இந்தியா.இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை தழுவ நேரிட்டது எனினும் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக 175 ரன்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரே தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 3-2 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது அவுஸ்த்திரேலியா! இன்றைய போட்டியில் சச்சின் செண்டுல்கர் பெற்ற 175 ஓட்டமே, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், பதிலெடுத்து ஆடும் ஆணியின் தனிநபருக்கான மூன்றாவது அதிகபட்ச ஓட்டமாகும். அத்துடன் இந்தியா பெற்றுக்கொண்ட 347 ரன்களே, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், பதிலெடுத்து ஆடும் அணி பெற்றுக்கொண்ட மூன்றாவது அதியுயர் ஓட்ட எண்ணிக்கை ஆகும். |
| Last Updated on Friday, 06 November 2009 10:56 |
- லாஸ் வெகாஸ் கோர்ட் வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி
- அமெரிக்க விமான நிலையங்களில் கடும் பாதுகாப்பு கெடுபிடிகள் அறிமுகம்!
- வங்க தேசத்தில் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் ஐந்து பேருக்கு தூக்கு - சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு!
- 'தமிழீழம்' வெறும் கனவு - தங்கபாலு, பிரபாகரன் வருவார் என்பது ஏமாற்று - இளங்கோவன்
- ஆந்திராவில் 88 ரயில் சேவைகள் திடீர் இரத்து - தெலுங்கானா போராட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு!
- இந்திய அழுத்தங்களையும் மீறி, போரில் உறுதியாக இருந்தார் மஹிந்த - கோத்தபாய ராஜபக்ஷ
- சம்பந்தனிடம் சரத் பொன்சேகா கைச்சாத்திட்டுக் கொடுத்த திட்ட வரைவு!


.jpg)




இந்திய அவுஸ்த்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியில், கடும் போராட்டத்தின் பின் அவுஸ்த்திரேலியாவிடம் தோற்றது இந்தியா. எனினும் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 17,000 ரன்களை கடந்து படைத்த புதிய உலக சாதனை, இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
உங்கள் கருத்துக்கள்
வெல்லாம் கிடைக்குமுன்னா....கொண்டாடலாம்.உலக முதலாளிகளின்
விளம்பர போர்டின்[சச்சின்]சாதனையில் மகிழ்வதர்க்கு ஒன்றுமில்லை.