பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

உலக கிண்ண போட்டிகளில் இந்தியாவை சந்திக்க கூடாது!- முத்தையா முரளிதரன்
Written by Sara   
Saturday, 02 January 2010 09:47
AddThis Social Bookmark Button

இந்தியாவுடன் மோதுவதென்பது மிக கடினமான விடயம்! அதுவும் அவர்களது சொந்த நாட்டில் வைத்து அவர்கள் இன்னும் சக்தி வாய்ந்தவர்கள் என சிறிலங்கா நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்!

இறுதியாக, இந்தியாவில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த பின்னர், சிறிலங்கா அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து முத்தையா முரளிதரன் வழங்கிய செவ்வியிலேயே இதனை கூறியுள்ளார். இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இறுதியாக நடைபெற்ற இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி பற்றி?

2-0 என இந்தியாவுடனான இறுதி டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றோம்! அவர்கள் எங்களை விட மிக நன்றாகவே விளையாடினர்! துரதிஷ்ட்டவசமாக நானும் நன்றாக விளையாடவில்லை! எனது சக பந்து வீச்சாளர்களும் அவ்வாறே! இந்திய அணியில் ஹர்பஜன் சிங் மிக நன்றாகவே விளையாடி மூன்று போட்டிகளிலும் 13 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்! இந்தியாவுடன் மோதுவதென்பது மிக கடினமான விடயம்! அதுவும் அவர்களது சொந்த நாட்டில் வைத்து அவர்கள் இன்னும் சக்தி வாய்ந்தவர்கள்

2007 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் சிறிலங்கா அணியின் பாதை சரிந்துகொண்டு போவதாக நீங்கள் கருதுகிறீர்களா?

இது, எமது விளையாட்டு வீரர்கள் மாறுவரும் காலம்! 2003 உலக கிண்ண போட்டிகளின் பின்னர் எமது மூத்த வீரர்கள் பலர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.! சனத் ஜெயசூரிய, சமிந்த வாஸ் ஆகியோர் அவ்வாறே! நானும் இளமையானவன் இல்லை!

என்னால் 2009 ல் சிறப்பாக விளையாட முடியவில்லை! பலமுறை காயமடைந்தேன்!

நாம் அணியை விட்டு ஓய்வடைந்தாலும், எமது காற்தடங்களை நிரப்புவதற்கு புதிய அணி வீரர்கள் உருவாகுவார்கள்! சங்ககார, மஹெல ஜெயவர்த்தன போன்று 2007 உலக கிண்ண போட்டிகளில் சிறப்பாக விளையாடிய 5 பேர் அவ்வாறு இருந்தனர்! எனினும் அவர்கள் எமது வெற்றிடத்தை நிரப்புவதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது! பிரச்சினை என்னவென்றால் அக்காலம் வரைக்கும் பொறுத்திருக்க எமது நிர்வாக சபைக்கு பொறுமை இல்லை!

சங்ககாரவின் தலைமைத்துவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


எமது அணியின் தலைமைத்துவம் பற்றி காரணமே தெரியாத குளறுபடிகள் இடம்பெற்று வருகின்றது!

மெஹல ஜெயவர்த்தன தலைமையில், எமது அணி இரண்டு வருடங்கள் மிக நன்றாகவே விளையாடி வந்தது. அதிக போட்டிகளில் வெற்றியீட்டி வந்தது! எனினும், இறுதியாக மேற்கிந்தியாவுடனான தொடரில் தோல்வி அடைந்ததும், அவர் குறைவான ஓட்டங்களை எடுத்ததுமே, தலைமைத்துவத்தில் இருந்து அவர் நீக்கப்பட காரணமாகியது!

இது ஒரு துர்பாக்கிய நிலைமை! அவர் பெற்றுக்கொடுத்த வெற்றிகள் பற்றி யாரும் பேசவில்லை!

இதேதான் தற்போது சங்ககாரவுக்கும் நடக்கிறது! இந்தியாவுடனான தொடரில் தோல்வியுற்றதும், அவரது தலைமைத்துவம் சரியில்லை என அழுத்தங்களை மேற்கொள்கிறார்கள்!

மெஹல தலைமைத்துவத்தில் இருந்து விலகியதும், அந்த இடத்தை நிரப்புவதற்கு நல்ல வேளை சங்ககார இருந்தார்! தற்போது அவரையும் நீக்கிவிட்டால் யாரை நியமிக்க போகிறார்கள்!?

உங்கள் கிரிக்கெட் எதிர்காலம் பற்றியும், உலக கிண்ண எதிர்பார்ப்புக்கள் பற்றியும்?


ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பல்வேறு உலக சாதனைகள் செய்துள்ளேன் என நீங்கள் கூறலாம்! ஆனால்
எனது கரங்கள், ஒரு 5 சதவீதம் பழுதடைந்து விட்டது என்றே கூறலாம்!

நான் சாதனைகள் பற்றி யோசிப்பதில்லை! எனக்கு கடவுள் கொடுத்த பரிசு இந்த கிரிக்கெட்! இதனை வைத்து எனது வாழ்வை எப்படி கட்டியெழுப்புவதென்றே நான் யோசிக்கிறேன்!

உலக கிண்ண போட்டிகளில் யார் யார் விளையாடப்போகிறார்கள் என யாருக்கும் தெரியாது! என்னால் அணிக்கு பயன் இருக்கிறது என கருதி அவர்கள் விளையாட அழைத்தால் செல்வேன்! இல்லையெனில் ஓய்வையும் பெருமிதத்துடன் வரவேற்பேன்!

உலக கிண்ண போட்டிகளில், தகுதி சுற்றுக்களில் வெற்றி பெறுவது தான் எமக்கு முக்கியம்! காலிறுதி, அரையிறுதி, என அடுத்த சுற்றுப்போட்டிகளில் எமது வீரர்கள் நன்றாகவே விளையாடுவார்கள்!

என்னை பொறுத்தவரை, தகுதி சுற்றுக்களில் இந்தியா எம்மை எதிர்த்து விளையாட கூடாது! அதுதான் எமக்கு பலம்!



உங்கள் கருத்துக்கள்

avatar ukkirapandian
0
 
 
அண்ணா, எங்க மேல ரெம்ப நம்பிக்கை வச்சிருக்கீங்க, ஆனா நாங்க அப்படி இல்லை 3/355 ம் எடுப்போம் 10/73 ம் எடுப்போம்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Saturday, 02 January 2010 11:30
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது