பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

முன்னே பிரியாமணியும், பின்னே அமீரும்..
Written by editor   
Friday, 18 December 2009 16:39
AddThis Social Bookmark Button

பாலாவின் நண்பர் என்ற முத்திரையோடு மவுனம் பேசியதே படத்தை அமீர் தந்தபோது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதன்பிறகு ராம் படத்தில் திரில்லர் எனும் எலிமெண்டை மிகச்சிறப்பாக திரைக்கதையில் கையாண்டார் என்ற பாராட்டு. அதற்கும் பிறகு பருத்திவீரன் வெளியான பிறகு அமீர் ஒரு உலகத்தரமான இயக்குனராக உயர்வார் என்ற நம்பிக்கையை அந்தப்படம் சம்பாத்தித்துக்கொடுத்தது.

இத்தனை நம்பிகையும் சுக்கு நூறாக யோகி முலம் தானே சிதைத்திருக்கிறார் அமீர்.
திருடா திருடி எனும் வசூல் ரீதியிலான ஒரு வெற்றியைக் கொடுத்த ஒரு சாராசரி இயக்குனரைக் கூப்பிட்டு ‘ஸோட்சி' (tsotsi) என்று ஒரு ஆங்கிலப் படம் இருக்கிறது அதை தமிழ்ப்படுத்தி படமெடுக்கலாம் என்று கூப்பிட்டதே அமீர்தானாம். ஆனால் இப்போது காமெடி என்னவென்றால் “அந்தப் படத்தை நான் பார்த்ததே இல்லை” என்று அமீர் மறுத்திருப்பதுதான் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

 

ஸோட்ஸி உலகசினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத படமென்றால் கூட அமீர் குழு தப்பித்துக் கொண்டிருக்கும். ஆனால் 2005 சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற படம் மட்டுமல்ல! அந்த ஆண்டு பல்வேறு உலகப்பட விழாக்களில் கலந்து கொண்டு 26 விருதுகளை அள்ளிய படம். அதிக டிவிடிக்கள் விற்ற இந்தப்படம் உலக அளவில் பல்வேறு சினிமா பயிற்சிக்கல்லூரிகளில் திரைக்கதைக்கு பாடமாகவும் நடத்தப்படும் படம். இந்தப்படத்தை ஈ அடிச்சான் காப்பியாக அதாவது அட்ட காப்பி என்பார்களே அப்படியோரு காப்பி.

ஸோட்சியில் இருக்கும் கதாபாத்திர காப்பியோடு, 50 காட்சிகளையும் அப்படியே வைத்து விட்டார்கள். ஸோட்சியை 1990-ல் முதலில் ஒரு நாவலாக எழுதியவர் அதோல் ஃபாகர்ட் (Athol Fugard <http://www.imdb.com/name/nm0297538/>). இவர் நாவலாசிரியர் மட்டுமல்ல. இருபது உலக சினிமாக்களுக்கு திரைக்கதை எழுதிய அவார் வின்னிங் ஸ்கிரிப்ட் ரைட்டர். பல உலகப்படங்களின் இயக்குனர். இவருக்கு யோகியை போட்டுக்காட்டும் பட்சத்தில் தியேட்டரில் போடாமல் ஒரு மருத்துவமணையின் ஆஃபரேஷன் தியேட்டரில் போட்டுக்காட்டுவது நல்லது! ஏனெனில் பாதி படத்துக்கு அப்புறம் தியேட்டரிலே அவருக்கு மாரடைப்பு ஏற்படலாம். காரணம் கதை சுப்பிரமணியம் சிவா என்று போடுவதுதான்.

நமக்குத் தெரிந்த வரை தற்போது யோகியை துபாய் சர்வதேசப்பட விழாவில் திரையிட்டு காட்ட சென்றிருக்கும் ( சுகாஸினி இந்தப் படத்தை அஃப்பீஸியல் செலக்ட் செய்தாராம்) அமீரும் அவரது நன்பர்களும் பயந்து கொண்டே சென்றிருக்கிறார்களாம். பயத்துக்குக் காரணம் ஸோட்சி படத்தின் இயக்குனர் கெவின் ஹூட்டுக்கு (Gavin Hood <http://www.imdb.com/name/nm0004303/>) “உங்கள் படைப்பை தழுவிய படம் துபாய் ஃபெஸ்டிவலுக்கு வருது. கையும் கழவுமாக இயக்குனரை பிடிகலாம்” என்ற அதிரடி ஈமெயிலை தட்டி விட்டதோடு அதே ஈமெயிலை அமீர், சுப்ரமணிய சிவா இருவருக்கும் அனுப்பி வைத்து விட்டார்களாம் கோடாம்பாக்கத்தில் ஃபிலிம் சொசைட்டி நடத்தும் ஒரு பிரபலம்  .

இந்த அக்கப்போர் ஒருபுறம் இருக்க யோகியில் குழந்தையின் மலத்தை துடைக்க தினத்தந்தி நாளிதழை படத்தின் நாயகன் அமீர் பயன்படுத்துவது போன்ற காட்சியைப் பார்த்து கோபாம் கொண்ட சம்பந்தப் பட்ட பத்திரிகையின் நிர்வாகம் “ எங்க பத்திரிகை பீ துடைக்கத்தான் லாயக்கு என்று காட்டுகிறீகளா?” என்று கேட்டு யோகி படத்தின் விளம்பரங்களை பிரசுரிக்க மறுத்து விட்டதாம். “ரவுடி வீட்டிலும் தினத்தந்தி இருக்கும் என்பதைத்தான் அப்படிக்காட்டினேன்” என்று அமீர் சாமாதானம் செய்தும், பத்திரிகைத் தரப்பு சமாதானம் ஆகவில்லை என்கிறார்கள்.

துபாயில் எதோஒரு விருதை வாங்கி  விடும் பட்சத்தில் ஸொட்சியின் இயக்குனரை அங்கே சந்திக்க நேர்ந்தால் அவருக்கு என்ன பதில் சொல்வார்கள்? அமெரிகாவின் கலிஃபோர்னியா ஃபிலிம் ஸ்கூலில் திரைக்கதை வகுப்பு எடுக்கும் கேவின் ஹூட்டுக்கு. இவர்கள் சொல்லிக் கொடுத்து விட்டு வந்தாலும் ஆச்சர்யப்பட எதுமில்லை.  ஆனால் நம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து செல்லுவர் என்று நம்ப வைத்த அமீர், ஒரு உலக தர சினிமாவை தமிழ் மசாலாவாக்கி தந்திருப்பதிலிருந்து அவர் கற்றுக் கொள்ளவேண்டிய சினிமா இன்னும் இருக்கிறது என்பதைதான் யோகி காட்டுகிறது என்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் நல்ல சினிமாக்களில் ஒன்றாகப் பேசப்பட்ட 'பருத்திவீரன்' திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்த பிரியாமணிக்கு அப்படம் விருதினையும் பாராட்டினையும் பெற்றுக் கொடுத்தது. ஆனாலும்  அப்படத்திற்குப் பின் பிரியாமணி மசாலாப் படங்களில் கவரசீநாயகியாகிப்போனார். அநதப்படத்தின் இயக்குனராக அமீரும், விருதும் பாராட்டும் பெற்றிருந்தார். ஆனால் அவரும் இப்போ  திசைமாறிப் பயணிப்பதாகவே தெரிகிறது. இதனால் அமீர் மீது நம்பிக்கையோடிருந்தவர்கள் எல்லாம் சொல்வது ஒன்றே. அது' அமீர் சார்! வேண்டாம் இந்த வீணான வேலை...'

உங்கள் கருத்துக்கள்

avatar ராம்
+1
 
 
கரெக்ட்டாச் சொல்லியிருக்கீக
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar சிவா
0
 
 
"துபாயில் எதோஒரு விருதை வாங்கி விடும் பட்சத்தில் ஸொட்சியின் இயக்குனரை அங்கே சந்திக்க நேர்ந்தால் அவருக்கு என்ன பதில் சொல்வார்கள்? "
ஒரு வேற்று மொழி படத்தை எவ்வித பயமும் நெருடலும் இல்லாமல் தமிழில் எடுப்பது எப்படி என்று சொல்லி கொடுப்பார்கள்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar a p muruganantham
+1
 
 
அமிர் ஒரு ச்ந்தரப்பவாதி
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar Puzhal D Irudayaraj
-1
 
 
இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை இராமாயணமே காப்பிதான்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 18 December 2009 17:11
 

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது