பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

ஐயோடா! எந்திரனுக்குப் பின்னால இவ்ளோ கதையா..?
Written by editor   
Monday, 21 December 2009 03:18
AddThis Social Bookmark Button

எல்லாமே எந்திரன்... !!!- சில சிறப்புத் தகவல்கள்.

காதலன் படம் முடிந்ததுமே இயக்குநர் ஷங்கர் இயக்க நினைத்த படம் ரோபோ. ஷங்கரின் கனவுப்படமான ரோபோவில் கமல் நடிப்பதாக இருந்தது. எழுத்தாளர் சுஜாதாவின் வானொலி நாடகமான இயந்திரனையும், முதலில் நாவலாகவும் பின்னர் தொலைக்காட்சித்தொடராகவும் வெளிவந்த என் இனிய இயந்திராவையும் தழுவியே ரோபோவுக்கான திரைக்கதையை எழுதித்தந்தார் சுஜாதா.

திரைக்கதையில் தனக்கு  நிறைய டெவலப் செய்ய வேண்டியிருக்கும் என்று கமல் சொல்ல தனது கதையின் ஒரிஜினாலிட்டியை இழக்க விரும்பாத சுஜாதா இழுத்தடிக்க, கமல்- ஷங்கர் டீம் அப்போது இந்தியனில் இறங்கினார்கள்.  அடுத்து பாய்ஸ், முதல்வன் என்று முடித்துவிட்டு மீண்டும் சுஜாதாவிடம்  போனால் கமல் கேட்ட மாற்றங்களில் சமாதானம் அடையவில்லையாம் அவர்.

இந்த நிலையில் ஷங்கரைக் கூப்பிட்டார் ஷாருக்கான். தனக்காக இந்தியில் ஒரு படம் பண்ணுங்க என்று சொல்ல ரோபோவை சொன்னார் ஷங்கர். கதையில் எந்த கரக்‌ஷனும் சொல்லாமல், தானே தயாரிக்கிறேன் என்று முன்வந்த ஷாருக், திரைக்கதையில் பாலிவுட்டுக்கான மசாலாக்களை சேர்த்துக்கொண்டு  வாருங்கள் என்று சொல்ல, இவருக்கு கமலே பரவாயில்லை என்று அலுத்துக்கொண்டே சுஜாதாவிடம் சொல்லாமலே  ஸ்கிரிப்ட் ஒர்க்கில் உட்கார்ந்த போதுதான் ரஜினி அழைத்து தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சாட்டையடி கொடுக்கிற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் பண்ண முடியுமா என்று கேட்டிருக்கிறார். ஏழு நாட்களில் ஷங்கர் செய்த கதைதான் சிவாஜி.

பிறகு ஷாருக்கு கோபமாகி ரோபோ ஸ்கிரிப்ட் என்ன ஆச்சு என்று கேட்க, ஷங்கர் செய்த கரக்‌ஷன்களை சொல்லியிருக்கிறார்.. இந்தமுறை கமலைப் போலவே கதையில் கரக்‌ஷன் சொன்னவர் ஷாருக். பார்த்தார்  இது சரிப்பட்டு வராது என்று வந்துவிட்டாராம் ஷங்கர்.

வந்தவர் ரோபோவை தமிழில் யாரை வைத்து பண்ணலாம் என்று யோசித்திருக்கிறார்.. அஜீத்துடனும் பேச்சுவார்த்தை நடந்தது.  இதற்குள் ரஜினியே முன்வந்து ரோபோ கதையின் மூலம்  நாம் மீண்டும் இணையலாமே என்று சொல்ல, இதை கேள்விப்பட்ட ஷாருக் கடுப்பாகி மவனே ரோபோ டைட்டிலேயே நீ நினைச்சுப்பார்க்கக்கூடாது என்று ரோபோ டைட்டிலை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் பதிவு செய்துவிட்டாராம்.. மவனே  யாருக்கிட்ட...?! தமிழன்னா உனக்கு தொக்காபோச்சா... அதுக்கு வேற எவனையாச்சும் பாரு என்றே  ~எந்திரன்| டைட்டிலை வைத்திருக்கிறார்கள்.

120 கோடி பட்ஜெட். ரஜினியின் கனவு நாயகி ஐஸ்வர்யாராயை சம்மதிக்க வைத்த்தில் பா. சிதம்பரத்தின் பங்கு உண்டு என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம். பெரு நாடு உட்பட பல வெளிநாடுகளில் எந்திரன் படமாக்கப்பட்டாலும் படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு தமிழ்நாட்டிலேயே படம் பிடித்திருக்கிறார்கள்.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பழைய மகாபலிபுரம், மாதவரம், மணலி, சிறுசேரி, மயிலாப்ப+ர் சிட்டிசெண்டர், கானாத்தூர், மாயாஜால், மதுரவாயில், வேலுர் என்று படப்புடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது.

ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கும் எந்திரன் படத்தில் வைரமுத்து இரண்டு பாடல்களையும் , வாலி இரண்டு பாடல்களையும் , பா.விஜய் ஒரு பாடலையும், வைரமுத்துவின் மகன் ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்கள். அப்படியானால் நா. முத்துக்குமார் பாடல் எதுவும் எழுதவில்லையா என்றால் , அங்கேதான் ஷங்கர் ஆள் பார்த்து வேலை வாங்குவதில் கில்லாடி என தங்களது குருவின் புகழைப் பாடுகிறார்கள் அவரின் உதவி இயக்குனர்கள்.

கதைப்படி  இரண்டு ரஜினிகளில் ஒருவர் சூப்பர் கம்பியூட்டரால் இயங்கும் எந்திரமனிதன். அதுவும் படுபுத்திசாலியான எந்திர மனிதன். அவர்... sorry...அது படத்தில் பல எடாகூடமான விஷயங்களை பண்ணுகிறது. குறிப்பாக ஹீரோ ரஜினிக்கு தெரியாமல் அவரது காதலி ஐஸ்வர்யா ராயுடன் டுயட் பாடிவிட்டு வருகிறது. தன்னுடன் டுயட் ஆடுவது ரோபோவா என்பது ராய்க்கும் தெரியாதாம். டூயட் பாடும்போது , மனித உருவமாக தன்னை மாற்றிக் கொள்ளும் ரோபோவின் புரோகிராமில் ஏற்படும் சின்னச் சின்ன குளறுபடிகளால் எந்திர மனிதன் உருவத்துக்கு திடீர் திடீரென்று மாற , புத்திசாலி ரோபொ இந்த உண்மை ஐஸ்வர்யா ராய்க்கு தெரிந்து விடாமல் இருக்க பண்ணும் அலப்பறைகள் அந்த டூயட்டில் செம ரொமாண்டிக் காமடியாக பதிவாகி இருக்கிறதாம். (இதையே பெரு நாட்டில் படம் பிடித்து வந்த்திருப்பதாகச் சொல்கிறார்கள்.)

இத்தனை புத்திசாலியான ரோபொவை உருவாக்கியவர் ரஜினியின் அப்பா. அவர் ஒரு ரோபாட்டிக் விஞ்ஞானி.  இவரே எதிர்பார்காத வண்ணம், தானே சிந்திக்கத் தொடங்கும் ரோபோ, ஒருநாள் தமிழில் புதுக்கவிதை சொல்கிறதாம். செமகாட்டமான பொலிட்டிகல் சட்டயரிக் நிறைந்த இந்தக் கவிதையை கவிஞர் நா. முத்துகுமாரிடம் எழுதி வாங்கி படமாக்கி இருக்கிறாராம் ஷங்கர். கவிதைக்கும் வெயிட்டான பெமண்டும் கொடுத்திருக்கிறார்களாம்.

ஆக  ரோபொ ரஜினி அரசியல் கவிதை சொல்லும் அழகை எந்திரனில் கட்டாயம் எதிர்பார்க்கலாம்.  எந்திரனில் பெரும்பாலன காட்சிகளுக்கு கார்க்கி வைரமுத்து வசனம் எழுதியிருக்கிறார்.  

எந்திரன் ரோபோவை எரித்து செயலிழக்கச் செய்யும் உச்சக்கட்ட காட்சியை வேலூர் விஜடி கல்லூரியின் ஆராய்ச்சி க்கூடத்தில் விரைவில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறது எந்திரன் படக்குழு. 2010 ஏப்ரலில் திரைக்கு வரவிருக்கிறாம் எந்திரன்.  ஹய்யா! நாங்களும் எந்திரன் நியூஸ் தேடிப்பிடிச்சு கொடுத்துட்டோம்ல!

 

உங்கள் கருத்துக்கள்

avatar KADKAT
+1
 
 
நன்றி நன்றி நன்றி
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Monday, 21 December 2009 03:46
 

கவனிக்க!

இந்தப் பகுதியில் வரும் செய்திகள் யாவும் 4 தமிழ் மீடியா இணையத்தளத்தினால்  பிரத்தியேகமாக சேகரிகப்பட்டு, பிரசுரிக்கப்டும், செய்திகளாகும். இச் செய்திகளைப் பிரதி பண்ணி, தங்கள் இணையத்தளங்களில், வலைப்பதிவுகளில் பிரசுரிப்போர், தயவு செய்து, செய்திகளை மீள் பிரசுரம் செய்யும் நடைமுறைகளுக்கு ஏற்ப 4தமிழ் மீடியாவிற்கான இணைப்புடன் பிரசுரிக்க வேண்டுகின்றோம் - 4Tamilmedia Team

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது