Top Stories

Grid List

பதவிக்காலம் நிறைவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தினை ஆளுநரிடம் முழுமையாக கையளிக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். 

‘தியாக தீபம்’ திலீபனின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல் யாழ். நல்லூரில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.48 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது. 

புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாகும் என்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். 

‘புதிய அரசியலமைப்பில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமை எமக்குக் கிடைத்த இறைவனின் கொடை. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றை தென்னிலங்கையிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்’ என்று மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஜெயராமை, நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்வையிட்டோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

இந்தியா கல்வியாளர்களை உருவாக்கி வரும் நிலையில், பாகிஸ்தானோ தீவிரவாதிகளை உருவாக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, “அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்னது பொய்” என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

“முதலமைச்சராக வர விரும்புகிறேன், 100 நாட்களில் தேர்தல் நடந்தால் போட்டியிடுவேன்.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தீவான பாலியில் அமைந்துள்ள அகுங் என்ற உயிர் எரிமலை உடனடியாக வெடித்துச் சிதறக் கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதால் அங்கிருந்து கிட்டத்தட்ட 50 000 பொது மக்கள் பாதுகாப்பாக தமது இல்லங்களில் இருந்து வெளியேற்றப் பட்டிருப்பதாக இந்தோனேசியாவின் அனர்த்த முகாமை அமைப்பு திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

தீவிரவாதிகள் உள்நுழைவதைத் தடுப்பது மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு என்ற போர்வையில் கடந்த சில மாதங்களாக சிரியா, ஈரான், சோமாலியா, யேமென், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து பொது  மக்கள் அமெரிக்காவுக்கு நுழைய விசா தடை உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்திருந்தார். தற்போது வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனைகளால் கொரியத் தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் வடகொரியா, வெனிசுலா மற்றும் சாத் ஆகிய நாடுகள் இணைக்கப் பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலின் முடிவுகளின் படி அந்நாட்டின் அதிபராக 4 ஆவது முறையும் ஏஞ்சலா மேர்கெல் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

சீனாவில் இருந்து திபேத்தினூடாக நேபாள எல்லைக்குச் செல்லும் அதிவேகப் பாதையை சீனா வெள்ளிக்கிழமை திறந்துள்ளது. இந்த அதிவேகப் பாதை பொது மக்களின் தேவைக்காகவும் பிராந்திய பாதுகாப்புத் தேவைக்காகவும் பயன்படும் விதத்தில் இரு நோக்கங்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

Most Read

Top Stories

Grid List

திருமணத்திற்கு முன்பே தேனிலவுக்கு கிளம்பி விடுகிறார்கள் நயன்தாராவும் விக்னேஷ்சிவனும்.

உசரத்திற்கேற்ற நிழல் விழுதோ இல்லையோ, ஒளிக்கேற்ற நிழல்தானே சாத்தியம்? 

அஜீத்தும் சிவாவும் மீண்டும் இணைவார்களா? இந்த கேள்விக்கு ஊர் உலகம் ஓராயிரம் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்க, நம்பினோர் கைவிடப்படார் என்ற சித்தாந்தத்தை சிறப்பித்துக் கொண்டிருக்கிறார் அஜீத்.

பிக்பாஸ் புகழ் ரைசாவுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. பிரபல நிறுவனம் ஒன்று ரைசாவுக்கு அட்வான்ஸ் கொடுத்து அமுக்கியிருக்கிறது.

லொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச்சிறுத்தை (Golden Leopard) விருதை சீன ஆவணத் திரைப்படமான «Mrs.Fang» தட்டிச் சென்றது. 

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின், சிறந்த தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 20 திரைப்படங்களில், «Beach Rats» திரைப்படத்தை பார்க்க கிடைத்தது. சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குனராக அடையாளம் காணப்பட்ட  Eliza Hittman இன் இரண்டாவது முழு நீளத் திரைப்படம் இது.

லொகார்னோ 70வது சர்வதேச திரைப்படவிழாவில்,  Open Door பிரிவில் Jamshed Mahmood நெறியாள்கையில் உருவான பாகிஸ்தானிய திரைப்படம் Moor பார்க்க கிடைத்தது. பாகிஸ்தானின் கைவிடப்படும் / திருடப்படும் புராதன புகையிரத நிலையங்களுக்கு என்ன நடைபெறுகிறதென்பதே கதை. Moor என்பதனை «தாய், «தாய் நிலம்» என பொருள் கொள்ளலாம்.

70வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Doors பிரிவில், Mata Nam Ahuna (While You Slept ) எனும் குறுந்திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இலங்கையில் சிவில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், சீன வர்த்தக, கைத்தொழில் முதலீடுகள் அதிகரித்திருந்தன. ஒப்பந்த பணியாளர்களின் வருகையும் அதிகரித்திருந்தது. அதனால் ஏற்பட்ட பல விளைவுகளில் ஒன்றை படம் அலசுகிறது.

கருப்புக்கண்ணாடி மிஷ்கினின் ‘கலர் மாறாத’ ஹீரோ! அவன் முக்கால் சைக்கோவா? முழு சைக்கோவா? என்று விளங்கிக் கொள்ள முடியாத பிரசன்ட்டேஷன்.

‘எரியுற வீட்டில் புடுங்குற வரைக்கும் லாபம்’ என்ற பழமொழியை இவ்வளவு பாசிட்டிவாக யாரும் அப்ரோச் பண்ணியிருப்பார்களா தெரியாது. எரிகிற ஏரியாவிலிருந்து ஒரு சினிமா கதையை ‘கேட்ச்’ பண்ணியிருக்கிறார் இயக்குனர் அசோக்குமார். குரங்கு வாலில் நெருப்பை பற்ற வைத்த மாதிரியே படம் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள். படமும் ஸ்பீட்தான்! (என்ன ஒன்று... தடுக்கி விழுந்தால் ஒரு ரவுடி மீதும், தப்பித்து எழுந்தால் ஒரு பேண்டேஜ் மீதும் எழ வேண்டியிருக்கிறது)

ஒரு சாதா நாயகன், சர்வ பலம் பொருந்திய தாதா நாயகன் ஆவதுதான் கதை. தொடை நடுங்கியான ஹீரோ திடீரென பொங்குவது ஏன்? அவன் போட்டுத் தாக்குகிற சுச்சுவேஷன் எது? இந்த கேள்விகளுக்குள் நாலு கிலோ காதல், ரெண்டு கிலோ சென்ட்டிமென்ட், மூணு கிலோ சிரிப்பு எல்லாவற்றையும் போட்டுக் குலுக்கினால், இரண்டு மணி நேரம் பத்து நிமிஷ சொச்சத்துடன் ஒரு சிரிப்புப்படம் தயார். (நடுநடுவே வரும் சோம்பல் முறிவுக்கு கம்பெனியே முழு பொறுப்பு)

தமிழ்சினிமாவில் குப்பைகள் சேரும்போதெல்லாம் ‘கூட்டிப் பெருக்கு’வதற்காகவே ஒரு படம் வரும்! ‘குரங்குபொம்மை’ அதில் ஒன்று! கடத்தல் கதையாய் துவங்கி, குடும்பக் கதையாய் நகர்ந்து, கொலையில் முடியும் இந்த பொம்மை, நிமிஷத்துக்கு நிமிஷம் நம்மை பதற வைக்கிறது. பரிதாபப்பட வைக்கிறது. சிரிக்க வைக்கிறது. முடிவில் சிந்திக்கவும் வைத்து அனுப்புகிறது.

“…மாற்றுத் தலைமை தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த இடத்தில் எமது தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவித பிரிவினைக்கும் இடமில்லை…” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று செவ்வாய்க்கிழமை (யூலை 11, 2017) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார். 

ஈழத் தமிழர்கள் ஆறாக் காயங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை எட்டாவது ஆண்டாக அனுஷ்டிக்கின்றார்கள். விடுதலைப் பயணத்திற்காக தொடர்ந்தும் தம்மை அர்ப்பணித்த சமூகமொன்றின் எதிர்காலத்துக்கான பொறுப்பும், கடமையும் எஞ்சியிருக்கும் தமிழ் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நேற்று வியாழக்கிழமை (மார்ச் 23, 2017) வழங்கியுள்ளது. 

வடக்கு மாகாணத்தில் தற்போது நான்கு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதி்ல், மூன்று போராட்டங்கள் காணி மீட்பினை அடிப்படையாகக் கொண்டவை. மற்றையது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நீதி கோரும் போராட்டம். அத்தோடு, இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு- கிழக்கிலும், வெளியிலும் பரவலான கவனயீர்ப்புப் போராட்டங்களும் கடந்த நாள்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

"என்னடா இப்பிடி வந்திருக்கிறாங்கள்?" 

கலவரமாகிப் போய்க் கேட்டான் ரதீபன்.
எல்லோரும் ஷர்ட் போட்டு இன் செய்திருந்தார்கள். பலர் சப்பாத்து வேறு அணிந்திருந்தார்கள். 

யாழ்ப்பாணத்தின் பள்ளி நாட்களில், விமானக்குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் எல்லாவற்றையும் தாண்டி அதிகம் அச்சுறுத்தியது ஆசிரியர்களின் வன்முறைதான்! இயல்பாக சிறுவர்களாக இருக்கவிடாமல் எப்போதும் மிகுந்த பதட்ட உணர்வையும், எச்சரிக்கையையும் ஒருங்கே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அடிக்கடி தோன்றும் விஷயம் இது. 

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவிடம் வி.டி.வி கணேஷ் அடிக்கடி கேட்பார் "உள்ள என்ன சொல்லுது? ஜெசி ஜெசின்னு சொல்லுதா?», சிம்புவும் அசடு வழிவார். உள்ளுணர்வை மதியுங்கள் என்பதற்கு இந்த வசனம் தமிழ் சினிமாவில் படுபிரபலம்.  ஆனால் என் கதை முழுக்க வேறோன்றை பற்றியது.

1983 கறுப்பு ஜூலை கலவரம் குறித்து இலங்கைத் தமிழர்கள்/சிங்களவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கறைபடிந்த ஞாபகம் இருக்கும்.

செப்டெம்பர் மாதத்திற்குரிய  பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.

பொது வாழ்வில் நாட்டம் கொண்ட மீன ராசி அன்பர்களே நீங்கள் தனகாரகன் என்று அழைக்கப்படும் குருவை ராசிநாதனாகக் கொண்டவர்கள். நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள். நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள்.

எந்த ஒரு வேலையையும் தானாக எடுத்து செய்யும் திறன் கொண்ட கும்ப ராசி அன்பர்களே நீங்கள் தொழில் காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடையவர்கள். எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்ய மாட்டீர்கள். நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள். அளவிற்கு அதிகமாக உழைப்பவர்கள்.

எந்த காரியத்திலும் ஒரே மனதாக ஈடுபடும் மகர ராசி அன்பர்களே நீங்கள் ஆயுள்காரகன் என்று அழைக்கப்படும் சனிபகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள். எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் அதே நேரத்தில் அதில் உள்ள லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். உங்களது தன்னம்பிக்கையால் வளர்ச்சி காண்பீர்கள்.

இந்தியா

20‌17-18‌ புதிய நிதியாண்டு இன்று தொடங்க உள்ள நிலையில் இன்றிலிருந்து
பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிஎஃப் மற்றும் சிறு சேமிப்பு கணக்குகளுக்கான வட்டித் தொகை இன்று முதல்
0.1% குறைக்கப்படுகிறது. புதிய வாகனங்களை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம்
என்ற நடைமுறையும் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. வாகனங்களுக்கான
காப்பீட்டு பிரிமியம் தொகையும் 41 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டரை முதல் ஐந்து லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு
வருமான வரி விகிதம் 10 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக
குறைக்கப்படும் என்ற‌ ‌பட்ஜெட் அறிவிப்பு நடப்பு நிதியாண்டில் அமலுக்கு
வருகிறது.

முன் பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ரயில்
புறப்படும் போதும் இருக்கை உறுதியாகாவிட்டால் அடுத்து வரும் ரயிலில்
பயணிக்க அனுமதிக்கும் விகல்ப் என்ற திட்டமும் இன்று முதல் அமலுக்கு
வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 20 நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகள் உட்பட நாடெங்கும் 394
சுங்கச் சாவடிகளில் நுழைவுக் கட்டணம் 10 சதவிகிதம் அளவுக்கு
உயர்ந்துள்ளது. இது தவிர BS 4 தர விதிமுறைகள் கொண்ட வாகனங்கள் மட்டுமே
விற்பனை மற்றும் பதிவு செய்யப்படும் என்ற விதியும் இன்று முதல் அமலுக்கு
வந்துள்ளது.

பாரத ‌ஸ்டேட் வங்கியின் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் கணக்கில்
குறைந்த பட்சத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கும்
நடைமுறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் படி மாநகர கிளைகளில்
ஒரு மாதத்தில் சராசரியாக 5 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் கணக்கில் இருந்தால்
அபராதம் விதிக்கப்படும். நகரப்பகுதி கிளைகளில் 3 ஆயிரம் ரூபாய்க்கு
கீழும் சிறு நகரக் கிளைகளில் 2 ஆயிரம் ரூபாய்க்கு கீழும் கிராமப்புறக்
கிளைகளில் ஆயிரம் ரூபாய்க்கு கீழும் கணக்கில் இருப்பு
வைத்துள்ளவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

சேமிப்புக்கணக்கில் மாதத்திற்கு 3 முறை மட்டுமே ரொக்கப்பணத்தை டெபாசிட்
செய்ய அனுமதிக்கப்படும் என்றும் இதற்கு மேல் டெபாசிட் செய்ய ஒவ்வொரு
முறையும் 50 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல்
பணம் எடுத்தால் 10 ரூபாய் கட்டணமும் மற்ற ஏடிஎம்களில‌ 3 முறைக்கு மேல்
பணம் எடுத்தால், 20 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.