விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' ஹாலிவுட் திரைப்பட முன்னோட்டம்
Written by navan   
Friday, 11 December 2009 12:09
AddThis Social Bookmark Button

சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்த 2012 திரைப்படத்திற்குப் பிறகு ரசிகர்களால் அதிகம் உச்சரிக்கப்படும் மந்திர வார்த்தை அவதார். டிசம்பர் 18ம் திகதி வெளிவர இருக்கும் இந்த முப்பரிமாண விஞ்ஞானப் புனைவு கதை தான் பலரின் ஆர்வத்தைக் கிளறி விட்டிருக்கிறது.

300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் உலகின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் நான்காவது இடத்தை இப்போது பிடித்திருக்கிறது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களான ஸ்டீபன் ஸ்பில்பேர்க், மைக்கல் பே,ரோலண்ட் எம்ரிச் வரிசையில் டைட்டானிக்,ஏலியன்ஸ், டேர்மினேட்டர் ஆகிய படங்களை இயக்கிய கனடியன் இயக்குநரான ஜேம்ஸ் கமரூனின் திரைக்கதையிலும் இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட  படமே இந்த 'அவதார். 'இப்படத்தில் முப்பரிமாண தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களைக் கவரும் நோக்குடன் எடுக்கப்பட்டிருப்பதுடன் படத்தின் கதையும் மிகுந்த சுவாரசியமாக இருப்பது இன்னொரு ப்ளஸ் பொயிண்ட்.

22ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பூமியிலுள்ள எரிபொருள் உட்பட கணிய வளங்கள் யாவும் தீர்ந்து விடுவதன் காரணமாக விண்வெளியில் இருக்கும் பண்டோரா எனும் கிரகத்தை முற்றுகையிட வேண்டிய தேவைக்கு மனிதர்கள் தள்ளப்படுகிறார்கள். ஆனால் அங்கு வாழும் நவி எனும் மனித இனத்திலிருந்து திரிபு பட்ட ஆனால் புத்திசாலித்தனமும் நீண்ட வாலும் மிகுந்த போர்த்திறனும் மிக்க நீல நிற  மனிதர்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு ஏற்படுகின்றது. கதையின் நாயகனாக வரும் ஜேக் ஒரு கடற்படை வீரர். போரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழே உடல் செயல் இழந்த நிலையில் இருக்கிறார். அவர் மீண்டும் எழும்பி நடந்து பண்டோராவுக்குப் போகும் வாய்ப்பு வருகிறது. ஆனால் பண்டோரா கிரகத்தில் மனிதனால் சுவாசிக்க முடியாது என்பதால் அந்தக் கிரகத்துக்குப் போக நவிகளைப் போல ஆய்வுக் கூடத்தில் மனிதர்களை உருவாக்க வேண்டும்.

அப்படி மனிதர்களின் டி.என்.ஏயைக் கொண்டு உருவாக்கப்படும் நவி போன்ற நீல நிற மனிதர்கள் தான் அவதார் என அழைக்கப் படுபவர்கள். ஊனமுற்ற ஜேக் தனது அவதார் உருவத்தின் மூலமாக பண்டோராவுக்குள் நுழைகிறார். கிரகத்தின் அழகில் மெய் மறக்கிறார். கூடவே அங்குள்ள ஒரு நவி பெண்ணுடன் காதலிலும் சிக்கிக் கொள்கிறார். பண்டோராவில் மனிதர்களின் தலையிடலை நவிகள் விரும்பவில்லை. இதனால் ஜேக் தன் இனமான மனிதர்களுக்கும், தன் காதலியின் இனமான நவிகளுக்கும் இடையே சிக்கிக் கொள்கிறார். அவர் எந்தப் பக்கம் சாய்கிறார், அதன் விளைவுகள் என்னென்ன என்பதே படத்தின் கதைக் கருவாகும்.

நவீன முப்பரிமாண தொழிநுட்ப உத்திகளைப் பயன்படுத்தி வெளி வந்திருக்கும் அவதார் திரைப்படத்தில் பண்டோரா கிரகத்தில் மனிதர்களுக்கும் நவிகளுக்கும் இடையே நடைபெறும் சண்டையை காணத் தவறாதீர்கள்!

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Friday, 11 December 2009 12:28
 

Subscribe to RSS headline updates from:
Powered by FeedBurner

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது