சினிமா கேலரி

விளம்பரம்

வெறும் $ 100 டாலரை இன்வெஸ்ட் செய்து உங்கள் வருமானத்தை பல மடங்காக்குங்கள்!

உங்களை 3டி உருவமாக மாற்றுங்கள்!

இந்தியாவிற்கு 600 நிமிடங்கள் பேசுவதற்கு $10 டாலர்கள் மட்டுமே!

ஆன்லைன் ரேடிங்க் - புரோக்ரேஜ் 10 பைசா

உங்கள் அன்புப் பிள்ளையின் எதிர்காலம் எம்கையில்!

அதிரடி மலிவான விமான கட்டணங்கள் குறைந்தது Rs1750 இல் இருந்து!

சிறந்த மொபைல் சர்வீஸை இலகுவாக தேர்வு செய்யுங்கள்!

இந்தியன் ரயில்வே ! இலகுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!

உங்கள் பகுதியில் நிகழ்வொன்றுக்கு அனுமதி இலவசம்!

வீடு, காணி, வாகனங்களின் விரைவான விற்பனைக்கு இலவச விளம்பரம் செய்க!

டிஜிட்டல் கமெரா, ஐபொட், மொபைல்ஸ், ஜீவலெரி, ஆன்லைன் சாப்பிங்!.

சிறந்த இன்சூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வது எப்படி?

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தீர்க்க சுமங்கலிகளும் காரடையான் நோன்பும்
Written by Harini   
Sunday, 14 March 2010 06:50
AddThis Social Bookmark Button

  திருமணமான பெண்கள் இந்த காரடையான் நோன்பு விரதத்தை பங்குணி மாதப்பிறப்பில் தொடக்கநாளில் தமது கணவருக்காக அனுட்டிப்பர். மாசி மாத இறுதி நாளும், பங்குனி மாததின் முதல் நாளும்பிறக்கின்ற வேளை பின்இரவு கடந்த பின், தூய நீராடி, சுத்தாமான ஆடை அணிந்து, மகாலஷ்மியைமனதில் நிணைந்த வண்ணமாக பூரணகும்பம் வைப்பர். பின் திருவிளக்கேற்றி மகாலஷ்மி படத்துக்கோ அல்லது, மகாலஷ்மியின் திரு உருவச்சிலைக்கோ பட்டுச் சாத்தி பொட்டிட்டு, பூமாலை அணிவித்து அலங்காரம் செய்வர்.

  பின்பு வெண்ணெய், பால், கற்கண்டு இவற்றோடு காரமணி பயறும், அரிசியும் கலந்து அரைத்து செய்த அடையையும்,பாயசத்தையும் நிவேதனம் செய்வர். அதன்பின் அவளின் காயத்திரி வேத ஸ்லோகங்களை பராயணம் செய்து கண்போன்ற கணவன் நீண்ட ஆயுளோடு நோயின்றி வாழவும்,
செல்வம் நிறைந்து, குறையில்லாது இல்லறம் செழிக்கவும் வேண்டி, அருள் தரும் அம்பிகைக்கு பூஜை ஆராதனை செய்து வழிபடுவர்.

   அர்ச்சனை செய்யும் போது அரச இலைகளால் வழிபாடாற்றுவர். அத்தகைய அரச இலை மிக சக்தி வாய்ந்தது. எமது சமய சம்பிரதாயங்களில் திருமணமாகாத கன்னிப் பெண்கள் அரச மரத்தை சுற்றிவந்தால் திருமணம் கைகூடி நல்ல கணவன் கிடைப்பான் என்று கூறப்படும் ஒரு வழக்கு. அதனால் அரச இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பதனால் ஆயுள் அதிகரிக்கும். தீர்க்க சுமங்கலிகளாக வாழவேண்டி
திருமாங்கல்யப் பெண்களும், நல்ல கணவன் கிடைக்க கன்னிப் பெண்களும் அம்பிகையைத் துதிக்க அருள் என்றும் கிடைக்கும்.

  இல்லங்கலில் பூஜை அறையில் இவ்விரதத்தை அநுட்டிக்கலாம். "உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் நோற்றேன், மறவாது எனக்கு வரம் தந்தருள்வாய்" என்று தேவியைத் துதித்தால் அவள் எமக்கு உற்றதுணையாக இருப்பாள். இவ் விரதத்தை சாவித்திரி விரதம் என்று கூறுவர். சாவித்திரியின் கணவன் சத்தியவானின் உயிர், இளவயதில் விதி முடிந்து காலனின் பாசக்க கயிறால் பிரித்து எடுத்துச்செல்லும் வேளை, சாவித்திரி கணவன் உயிர் காக்க எமனுடன் போராடி இவ்விரதத்தை மேற்கோண்டு சக்தியின் அருளால் எமனிடம் இரு வரத்தைப் பெற்றாள்.

  'கணவனின் உயிரைத் தவிர வேறு எதுவானாலும் கேள்' என எமதர்மன் கூறியதும், அவள் முதல் கேட்டது 'என் மானும் மாமியும் கொஞ்சி விளையாட பேரர்களைக் கொடுக்க வேண்டும். இரண்டாவது நான் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும்" எனவேண்டி நமஸ்கரித்தாள். "தந்தேன் வரம் சுமங்கலியாக இருப்பாயக எனக்கூறிய" எமன் "உனது உறுதியான பதிபக்திக்கு உனது கணவன் உயிரை விட்டு செல்கிறேன்" என நலமுடன் வாழ்த்திச் சென்றார். இதுவே நோன்பின் மகத்துவம் ஆகும்.


Read 2 Comments... >>
Last Updated on Sunday, 14 March 2010 07:37
 
கனவு நனவாக
Written by Sara   
Saturday, 13 March 2010 10:51
AddThis Social Bookmark Button

Read 0 Comments... >>
Last Updated on Saturday, 13 March 2010 10:52
 
நின் தரிசனம் நாடி
Written by editor   
Friday, 12 March 2010 10:57
AddThis Social Bookmark Button

மாணிக்க கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணிற்ற மன்னுள் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப் பொற்கூத்தனை யார் உரைப் பாரே
-என்கிறது திருமந்திரம்.


Read 1 Comments... >>
Last Updated on Friday, 12 March 2010 11:31
Read more...
 
2010 மார்ச் மாத ராசி பலன்கள்!
Written by Amsha   
Thursday, 11 March 2010 11:24
AddThis Social Bookmark Button

கணித்தவர்-பேராசிரியர். ஸ்ரீதரன், மதுரை- மேஷம் (அச்சுவினி, பரணி, கார்த்திகை-1ம் கால்) மேஷராசி அன்பர்களே! இது வரை செவ்வாய் கிரகத்தால் ஏற்பட்டு வந்த தடைகள், தடங்கல்கள், தாமதங்கள் மாறும். வியாழன் சுபவலிமை பெறுவதால் தொழில் , வியாபாரம் மற்றும் விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.


Read 1 Comments... >>
Last Updated on Thursday, 11 March 2010 11:34
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 27
Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது