ஓம் எனும் பிரணவப் பொருள் ஆன ஜங்கரன்,ஆனைமுகன், விக்கினஸ்வரன் என் போற்றப்படும், விநாயகப் பெருமானின் விநாயக் சஷ்டி அதாவது விநாயகர் பெருங்கதை படிப்பு உற்சவம் எனும் விழா 22.12.09 அன்று விக்கினேஷ்வரப்பெருமான் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மூலப்பரம் பொருளும் அனைத்து ஜீவன்களுக்கும் ஆதாரமாக விளங்குபவரும் விநாயகரே.
சகல தெய்வங்களுக்கும் முதல்வனுமாகிய விக்கின விநாயகனின் அருள் வேண்டி, இந்நாளில் அவருக்குப் பிரியமான மோதகம், அவல், கடலை போன்ற தின்பண்டங்களை படைப்போம்.
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவைநாலும் கலந்துணக்கு நான் தருவேன் கோலம் செய் தூங்கக் கரிமுகத்து தூம்ணியே நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா"
என்று பாடி ஐங்கரனைத் துதி செய்ய வேண்டும். கார்த்திகை மாத பௌர்ணமிக்கு அடுத்த நாளில் இருந்து 21நாள் நொன்பிருந்து (விரதம்) 21 இழைகள் கொண்ட நூல், கையில் அணிவது வழக்கம். ப்ரதமை திதி முதல்(தேய்பிறை) அமாவாசை கழிந்து சஷ்டி திதி(வளர் பிறை) வரையிலான இருபத்தொரு நாட்களும் விநாயகரின் புராணத்தை (கதையை) அவர் சிறுவராக இருந்த போது நிகழ்த்திய அற்புதங்களை கதையாக படிப்பர். ஆலயங்களில் விக்கினம் தீர்க்கும் விநாயகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து, அருகம் புல் மாலை சாற்றி திண்பண்டங்கள் 21பதார்த்தங்கள் படைத்து பூஜை, ஆராதனை செய்வர். அதன் பின் நூலைக் கையில் அணிந்து அகவல் பாடியும், கவசம் பாடியும், கதை படித்தும் கேட்டும் அவர் அருள் பெற வழிபடுவர்.
தோன்றாததும், மறையாததுமாகிய பொருளைத், தோன்றி வந்ததாக கருதுவது மாந்தரின் போக்கு. பிறப்பையும், இறப்பையும் அறிகிற நாம், கடவுளையும் பிறக்கும் படி செய்து அதில் திருப்தி அடைகிறோம். கணபதியின் தோற்றம், அவர் வடிவம் எடுத்ததன் காரணம் எமக்குப் புராணங்கள் வாயிலாக அரிய பெரிய தத்தூவங்களை புகட்டுகின்றன. ஈரேழு பதினான்கு உலகங்களையும் காத்தருள்பவர் கணபதி. எல்லாம் அவருள் அடக்கம் ஆதி,அந்தம் இல்லாத முழுமுதற் கடவுள் பிள்ளையார். விநாயகப் பெருமான் பிரணவஸ்சோரூபீ.
ஏழுகோடி மந்திரங்களை தண்ணகத்தே கொண்ட சித்திர மண்டபம் ஒன்று திருக்கைலாய மலையில் இருந்தது. பார்வதி தேவியும், முக்கண்ணுடைய பரமசிவனுடன் அம்மந்திர மண்டபத்திற்கு விஜயம் செய்தனர். அங்கு ஏழுகோடி மந்திரங்களுக்கு நடுவே இரண்டு ஒளிப் பிழம்புகள் தெரிந்தன. அவற்றுள் ஒன்று சமஷ்டிப் பிரணவம் மற்றது வியஷ்டிப் பிரணவம். சிவமும் சக்தியும் அப் பிரணவங்களின் பால் தம்முடைய அருட் பார்வையைச் செலுத்தினார்கள். இரு பிரணவங்களும் ஒன்றாக மருவ, அவைகளிருந்து பிள்ளையார் அவதரித்தார். அம்மையப்பனின் திருவடிகளைத் தொழுத பிள்ளை உலகையே அவர்களிடம் கண்டது. அடக்கம், பணிவு என்பதற்கு அடையாளமாக ஆனைமுகன் அப்போதே உணர்த்தியிருக்கிறார்.அடக்கத்துடன் வணங்கி வாழ்தல் எவ்வளவு மேன்மை தரும். அடங்காவிடில் அழிவுதான்.
உயிர்களின் வளர்ச்சிக்கு இப்பிரபஞ்சம் உதவுகிறது. அதுபோல் மூவுலகங்களிலும் அதாவது பூலோகம்,புவர்லோகம்,மகர்லோகம் என்ற லோகங்களில் தேவார்களும், அசுரர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் அதிக வல்லமை பொருந்தியவர்கள். அதிலும் அசுரர்கள் அதிக வலிமை பெற்றவர்களாக விளங்குகின்றனர். அவர்கள் நல்லதையும் தீவிரமாகச் செய்யமுடியும், கெட்ட செயலையும் செய்யமுடியும். மற்றவர்கள் செய்யும் நல்லதிற்கும் இடைஞ்சல் செய்யவும் அசுரர்களால் இயலும். ஆகவே இவ்வாறு இயற்கையின் போக்கு அமைந்து விட்டால் உயிர்களின் வளர்ச்சிக்கு இப்பிரபஞ்சம் பயன் படாது பாழ்பட்டு விடும். நல்லவர் முன்னேற்றம் அடைய முடியாது. தீமையே யாண்டு தலைதூக்கி எங்கும் அழிவும், இழப்பும் அதிகமாகி விடும். இதனைக் கருத்திற் கொண்டே குறைபாடில்லாத விக்கினங்கள் ஏதுமின்றி தடையற்ற வாழ்வு வாழ விக்கினராஜா ஒருவன் தோன்றவேண்டும்.
நல்லியக்கங்களுக்கு விக்கினங்கள் எத்தனை வந்தாலும் இறுதியில் அத் தடைகளெல்லாம் தட்டழிந்து போய்விடும். தீயமுயற்சிகள், எவ்வளவுதான் ஆற்றல் படைத்திருந்தாலும் முடிவில் அம்முயற்சிகளில் முட்டுக்கட்டைகளும் தீமைகளும் வந்து மாட்டிக்கொள்ள நேரிடும். பொல்லாததை தள்லுவதும், நல்லததை மீட்டிக் கொடுப்பதும் ஒரு தெய்வத்தின் தனிச்செயல் ஆகும். ஆகவே இயற்கையின் ஒழுங்குப்பாட்டை நிலையாக வைத்திருக்க ஒரு நாயகன் தேவை. அதன் பொருட்டு தனக்கு நிகரில்லாத தலைவனாக விநாயகர், ஆனைமுகனாக உருவெடுத்தார். புதிதாகத் தொடங்கும் ஒவ்வொரு காரியத்திற்கும், கணபதி அருள்துணை வேண்டும். அவர் அருளுக்கு இலக்காகிற செயல்கள் யாவும் வெற்றிகரமாக அமையும். நாமும் இந்நாளில் ஜங்கரனை வழிபட்டு இஷ்ட சித்திகளைபெறுவோம்.
உங்கள் கருத்துக்கள்