பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மார்கழி மாதம் மகோன்னத மாதம்
Written by Harini   
Saturday, 26 December 2009 13:08
AddThis Social Bookmark Button
மார்கழி மாதம் பிறந்துவிட்டாலே பனியும் சில்லென்ற குளிர் காற்றும் மக்களின் மனதையும், உடலையும் வருடிச்செல்லும். "மாதங்களில் நான் மார்கழி" என்று கண்ணன் கீதையில் கூறியிருக்கிறான். ஆமாம் சில்லென்ற இதமான காற்றும்,வெண்முகில் கூட்டமும் பணியில் உறைந்து பூமியெங்கும் வெண்பட்டு விரித்தால் போல் தோன்றும். இயற்கை அழகே இரம்மியமாக இருக்கும். இந்த மாதத்தில் 25திகதி கன்னி மரியாளுக்கு ஏசுநாதர் பிறந்தார்.

மக்களுக்கு ஞானஒளி தந்தார். "சமத்துவம்மிக்க சாந்தமான அன்பு கொண்டு வாழுங்கள்" எனக் கூறினார். "தட்டுங்கள் திறக்கப்படும்,கேளுங்கள் கொடுக்கப்படும்" என்றார். நல் மனதைத் திறந்து நியாயமான கோரிக்கையாக எதைக் கேட்டாலும் அது இறைவனால் எமக்கு வழங்கப்படும். இதை கிறிஸ்தவ மதம் கூறுகிறது. அதனால் இன்றும் ஏசு பிறந்த நாளை கிறிஸ்மஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்வர். அடுத்ததாக, பகவான் கண்ணன், கீதை வழி கூறுகிறார்:

"எதை இழந்தாய் அது வீணாகுவதற்கு, எதை கொண்டு வந்தாய் அதை கொண்டு செல்வதற்கு, எல்லாம் இங்கிருந்தே பெறப்பட்டது, ஆக எதுவும் உன் கையில் இல்லை, பலனை எதிர் பாராது கடமையைச் செய் நன்மையில் முடியும்" என்கிறார்.

மார்கழி மாதம் மதிநிறைந்த நன்னாள் என்பர். மார்கழி மாத அதிகாலைப் பொழுது தேவர்களுக்கும் மூவர்களுக்கும் விடியற்காலம் ஆகும். அதை உத்தராயணம், தெட்சணாயணம் என்பர் அதாவது இரு காலங்களாக எமது வருடத்தின் முதல் ஆறு மாதங்களையும், தை முதல் ஆனி வரை உத்தாராயணம் என்றும், பின் உள்ள ஆறு மாதங்களையும் ஆடி முதல் மார்கழி வரை தெட்சணாயணம் என்றும் கூறுவார்கள்.இறை வழிபாட்டுக்கு ஏற்ற தெட்சணாயணம் காலத்தில் மார்கழி மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் அதி சிறந்த நாட்கள். கார்த்திகை மாத பெளர்ணமி, திருக்கார்த்திகை தீபம், முடிந்த பின் விநாயகர் நோன்பு ஆரம்பமாகிறது. அத்தோடு கார்த்திகை மாதத்தில் ஜயப்ப பக்தர்கள் மாலை அணிந்து நாற்பத்தைந்து நாட்கள் அதாவது தை, முதல்நாள் மகர ஜோதி தரிசனம் காணும்வரை விரதம் அனுஷ்டித்து சபரிமலை யாத்திரை செல்வார்கள்.

விநாயகர் நோன்பு 21 நாட்களுக்கு அனுஷ்டித்து மார்கழி மாத சஷ்டி திதி அதாவது திருவெம்பாவை தொடங்கும் அன்று நிறைவு பெறுகிறது. அதன் பின் வரும் ஏகாதசி திதி வைஷ்ணவர்களுக்கு ஒரு பொன்னாள். அன்றைய தினத்தை சொர்க்கவாயில் ஏகாதசி என்று குறிப்பிடுவர். அன்று சொர்க்கத்தின் கதவுகள் திறந்திருக்கும் என்பது ஜதீகம்.ஸ்ரீவைகுந்த ஏகாதசி என அழைக்கப்படும் இந்நாளில் அன்று இரவு முழுவதும் கண்விழித்திருந்து நாராயணனின் நாமத்தை பாராயணம் செய்வர். இம்முறை(28/12/09) திங்கட்கிழமை அன்று சொர்க்கவாயில் ஏகாதசி கொண்டாடப்படுகிறது. ஆகவே மகாவிஷ்ணுவுக்கு பிரியமான மாதம் இம்மாதம் ஆகும்.

அதிகாலை வேளை எழுந்து நீராடி தூய ஆடை அணிந்து. மகளிர் வீட்டு வாசலில் அழகாக கோலம் வரைவர். பின் ஆலயம் சென்று வைஷ்ணவ கோவில்களில் ஸ்ரீமந்நாரயணனை துயில் எழுபுவதற்காக ஆண்டாள் அருளிய திருப்பள்ளி எழுச்சியும், பின் திருப்பாவையும் பாடி விஷ்ணுவை நினைந்து வழிபடுவார்கள். சிவன் அம்மன் போன்ற சைவ ஆலயங்களில் மாணிக்கவாசகர் அருளிய  திருப்பள்ளி எழுச்சியுடன், திருவெம்பாவை பாடி சிவனை நினைந்து 30 நாட்களும் அதிகாலை வழிபாடு செய்வர். அதில் திருவெம்பாவை பத்து நாட்களில் இறுதி நாளான திருவாதிரை நன்னாளில் நடராஜனைப் பெருமானின் தரிசனம் கண்டு வழிபடுவதும், இறைவனை காலையில் துலில் எழுப்பி அவர் தரிசனம் கிடைத்திட வழிபடாற்றுதலும் இந்துக்களுக்கு சிறப்பான மாதம் ஆகும். அடுத்தாக இஸ்லாமியர்களும் இம்மாதத்தில் முஹாராம் பெருநாளை கொண்டாடுவர்.இப்படி எல்லா மதத்தவருக்கும் ஏற்ற மாதாமாக இம் மார்கழி மாதம் மகோன்னத மாதமாக திகழ்கிறது.

மதங்கள் எல்லாம் ஒரே விதமான கருத்தையே கூறுகின்றன. மனிதர்கள் எல்லோரும் ஒன்றுமையுடனும், அமைதியுடனும் ஒருவர் கருத்தை ஒருவர் நேசிப்பதுடன் எல்லோர் மீதும் அன்பு காட்டி வாழவேண்டும். மதங்கள் பலவேறு இருந்தாலும் மனித மனங்கள் ஒன்றுபட்டு ஒருமனதாய் இம் மண்ணில் வாழவேண்டும். இனிவரும் புதிய ஆண்டில் புனிதர்களாய் வாழ்வோம்.

உங்கள் கருத்துக்கள்


தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Sunday, 27 December 2009 09:23
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது