பக்கத்தை சேமிக்க! & பகிர!

இன்றைய செய்திகள்

சினிமா கேலரி

இலவச நியூஸ்லெட்டர்..

4தமிழ்மீடியாவின் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

தெலுங்கானா – தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்
Written by editor   
Tuesday, 29 December 2009 10:52
AddThis Social Bookmark Button

தெலுங்கானா! அன்மைக்காலத்தில் இந்திய மத்திய அரசை அதிர வைத்திருக்கும் சொல்.   அரசியல் சித்து விளையாட்டில் பலியாகும் மாநிலங்களின் தனித்துவம், மக்களின் உரிமைகள் மரித்துப் போகின்றன. உண்மையில் இந்தப் பிரச்சனையின் ஆழம் என்ன?  இந்தப் பிரச்சனையின் தொடக்கத்திலிருந்து  ஆராய்ந்து பார்க்கும் வகையில்  இக் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது.  அந்த முக்கியத்துவம் கருதி,  அதனை வெளியிட்டுள்ள 'இனியொரு..' இணையத் தளத்திற்கும், கட்டுரையாளருக்கும், நன்றி தெரிவித்து  இங்கே மீள் பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team.

தெலுங்கானா பற்றி எரிகிறது. கடந்த இருபது நாட்களாக தெலுங்கானா முடங்கிக் கிடக்கிறது. ஏராளமான இராணுவப் படைகளைக் கொண்டு தெலுங்கனாவில் குவிக்கிறது இந்திய மத்திய அரசு. மாவோயிஸ்டுகள் ஊடுறுவியிருக்கிறார்கள் என்ற பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு தெலுங்கானா மக்கள் உணர்வுகளை நசுக்கி நாசமாக்க மத்திய இந்திய அரசு துணிந்து விட்டதையே இது வெளிக்காட்டுகிறது.

இராணுவப் படைகள் தவிற தமிழக  அரசும் தன் பங்கிற்கு தமிழகப் போலீசையும் கிளர்ச்சியை அடக்க அனுப்பி வைத்திருக்கிறது. ஈழப் போராட்டத்தை நசுக்கி நாசமாக்கிய கருணாநிதி தமிழகத்தில் பெற்றுக் கொண்ட படிப்பினையை தெலுங்கானா விஷயத்தில் இந்திய மத்திய அரசுக்கு வழங்கி உதவி செய்கிறார்.

தெலுங்கானாவிற்கு நீண்ட கால வரலாறு உண்டு. 1946-ல் ஜூலை 14-ஆம் நாள் கிளர்ந்த உழவர் கெரில்லா ஆயுதப் போராட்டத்தை நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியின் ஆந்திர மாநிலக் கமிட்டி நடத்திய அந்த போராட்டத்தை அன்றைக்கு காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்டுகளின் வன்முறை என்று சித்தரித்தது.  ஐந்தாண்டுகாலம் நீடித்த அந்த ஆயுதப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகளின் மத்தியக் கமிட்டியின் நிர்ப்பந்தத்தின் பேரிலும், அடக்குமுறைகளை எதிர்கொள்ள முடியாமலும் நிறுத்திக் கொண்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

பல்லாயிரம் தோழர்களின் உயிர்த்தியங்கள் தெலுங்கானாவின் ரத்த சாட்சியாய் இன்றும் உயர்ந்து நிற்கிறது. ஆனால் வீரம் செறிந்த உழவர் புரட்சியை சந்தர்ப்பவாதிகளிடம் இழந்த முற்போக்கு சக்திகள் ஒரு பக்கம் என்கிற நிலையில் சுரண்டல் சமூக நடைமுறைகளை எதிர்த்து உருவான புரட்சி வடிவம் ஐம்பதுகளில் தனி மாநிலக் கோரிக்கையாக உருவாகி, உருமாறி வந்திருக்கிறது.அல்லது கைவிடப் பட்ட கிராம மீட்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக தனி மாநிலக் கோரிக்கை எழுந்தது. உழவர் இயக்கத்தின் ஆயுதக் கிளர்ச்சி அரைகுறையான வெற்றிகளோடு முடிந்து போனது ஒரு சோக வரலாறு.

இன்றைய தெலுங்கானா கிளர்ச்சியை முற்று முழுதாக நிராகரிக்கோ, முழுக்க முழுக்க ஒடுக்கப்படும் மக்களின் பெருந்திரள் கிளர்ச்சியின் வெளிப்பாடு என்றோ நாம் எடுத்துக் கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சியின் முதல் பிரதமரான மாமா நேரு எல்லா உழைக்கும் மக்களுக்கும் தேசீய இனங்களுக்கும் எப்படி எதிரியாக இருந்தாரோ அப்படித்தான் தெலுங்கானா மக்களுக்கும் எதிரியாக இருந்தார்.

உழவர் புரட்சியை அடக்க அவர் அனுப்பிய ஐம்பாதாயிரம் படைகள் தெலுங்கானாவில் நடத்திய கோரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, சோஷலிச சிந்தனை கொண்டவர் என்று முற்போக்கு சக்திகளால் போற்றப்பட்ட நேருவின் இரத்தக் கொலை வரலாற்றிற்கு தெலுங்கானா ஒரு சாட்சி. டில்லி மேலாதிக்கத்தின் கீழ் பிரித்தானியரின் பொம்மை ஆட்சியை நிறுவ நினைத்த நேரு பரந்து பட இந்தியாவின் விரிவாக்கத் தேவைகளுக்காக சமாஸ்தானங்களை கட்டாயமாக இந்தியாவோடு இணைத்தார். இணைய மறுத்த சமஸ்தானங்களை படைகளை அனுப்பி வழிக்குக் கொண்டு வந்தார்.

கொடூரமான நிலப்புரபுத்துவ வடிவமாக திகழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானமும், இது போன்ற நிலபிரபுத்துவ வடிவமாகத் திகழ்ந்த ஹைதராபாத் நிஜாமும் இந்தியாவோடு இணைய முரண்டு பிடித்தன. ஒரு பக்கம் நம்பூதிரி , நாயர்களின் சாதி, சுரண்டல் அடக்குமுறைக்குள்ளான  தெற்கு மக்கள், இன்னொரு பக்கம் முஸ்லீம் அரசர்களின் கொடூரமான அடக்குமுறைக்குள்ளான தெலுங்கானா மக்கள். தெலுங்கனாவின் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களும் முஸ்லீம் அரசர்களை எதிரிகளாகப் பார்த்தார்கள். ஆனால் நேரு முஸ்லீம் மன்னர்களுக்கு எதிரான இந்துக்களின் கோபம் அல்லது கிளர்ச்சி என்று அதை திரித்தார்.

ஹைதராபாத் சமஸ்தானத்திற்கு எதிராக மதவாத நச்சு விதையை ஊட்டியவர் சோசலிச எண்ணம் கொண்டவராக சித்தரிக்கப்பட்ட நேருவே….. ஆரிய சமாஜம், போன்ற பார்ப்பன சைவ எண்ணம் கொண்ட கலாசார அமைப்புகள் கூட ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக போராடின. ஆனால் அவர்களின் போராட்டம் என்பது அரசர்கள், உயர் ஜாதி பண்ணைகளுக்கு மக்களின் நிலங்களை வழங்கியதையோ, கொடூரமான சாதி, சுரண்டல் முறைக்கு எதிரானதோ அல்ல, அடிபணிய மறுக்கும் ஒரு முஸ்லீம் மன்னனை இந்திய பேராதிக்க எல்லையோடு சேர்த்துக் கொள்வதிலேயே இருந்தது.

ஹைதராபாத் நிஜாமில் முஸ்லீம் மன்னனுக்கு எதிராக கிளர்ந்த வர்க்க கிளர்ச்சியை இந்துக்களின் கோபம் என்று எப்படி நேரு மாற்றினாரோ அது போல காஷ்மீர் மக்களின் தன்னாட்சிக் கோரிக்கையை இந்து மன்னனுக்கு எதிரான முஸ்லீமகளின் கிளர்ச்சி என்று சித்தரித்தார் நேரு. அதனால்தான் சமஸ்தானங்கள் குறித்த தனது எண்னவோட்டத்தை இப்படிப் பதிவு செய்கிறார் நேரு ” காஷ்மீரில் பெரும்பாலானவர்களாக இருக்கிறார்கள் அங்கே ஒரு இந்து மன்னன் ஆளுகிறார். ஹைதராபாத்தில் இந்துக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் அங்கே ஒரு முஸ்லீம் மன்னன் ஆளுகிறார்”என்று மதவாதக் கண்ணோட்டத்தோடு தனது விஸ்தரிப்புக் கனவுக்களுக்காக பிரச்சனையை மடை மாற்றினார் நேரு.

தெலுங்கானாவின் கெரில்லா போராளிகள் நவாப்களிடம் இருந்து கைப்பற்றி வைத்திருந்த கிராமங்களையும் சொத்துக்களையும் எங்கிருந்து யாரிடம் இருந்து எடுத்தார்களோ அந்த விவாசிகளுக்கே வழங்கியது .ஆனால்  நேரு அனுப்பிய ஐம்பதாயிரம் படைகளோ சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைத்துவிட்டு கெரில்லா போராளிகளை வேட்டையாடியது. ஐந்து ஆண்டுகாலம் நீடித்த தெலுங்கனா போரில் நான்காயிரம் போராளிகள் வரை கொல்லப்பட்டனர்.  கடைசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநிலக் குழு தங்களின் போர் நடவடிக்கையை கைவிட்டது.

மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது தெலுங்கனா தனி மாநிலமாக இருந்தது. விசாலாந்திரமும் மக்கள் உரிமையும்  கேட்டு அதாவது ஆந்திரத்தோடு தெலுங்கனாப் பகுதியை இணைத்து ஒரு மாநிலமாக உருவாக்கக் கோரி தெலுங்கானா மக்கள் போராடினார்கள். தெலுங்கனா ஆந்திரமாக உருவானது. ஆனால் 53-ல் உருவான ஒன்று பட்ட ஆந்திர உணர்வு எழுபதுகள் வரை இல்லை.காரணம் முன்னர் நிஜாம்களின் கொடுங்கோலாட்சியில் சுரண்டப்பட்ட தெலுங்கனா மக்கள் இப்போது மீண்டும் தேஷ்முக்குகளாலும் உயர்சாதி

பண்ணைகளாலும் சுரண்டப்பட்டனர். எந்த மக்கள் ஒன்று பட்ட ஆந்திரத்துக்காகப் போராடி இணைந்தார்களோ அவர்களே இப்போது தனி மாநில கேட்டும் போராடுகிறார்கள்.

70, 80, 90 – கள் என தெலுங்கானா என்கிற கோரிக்கையின் அடிப்படையில் இந்திய மத்திய அரசுக்கு எதிராகவும்  சுரண்டல் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடினார்கள். வருகிறார்கள். இன்று தெலுங்கானா என்னும் தனி மாநிலக் கோரிக்கையை கையிலெடுத்து தனது சந்தர்ப்பவாத பதவி அரசியலுக்காக நாடகம் ஆடும் சந்திரசேகரராவை தெலுங்கானா மக்கள் நம்புகிறார்கள். அல்லது நம்பித்தான் ஆக வேண்டும் என்று மக்களை நிர்பந்திக்கிறார்  ராவ். ஆனால் ராவின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பலியாகாமல் போராட்டத்தை முன்னெடுக்கும் வேட்கையோடு களமிரங்கியிருக்கிறார்கள் ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள்.

சாகும்வரை உண்ணாவிரதத்தைத் துவங்கிய ராவ் மறு நாளே உண்ணாவிரதத்தை கைவிடும் முடிவை அறிவிக்க ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் ராவின் கொடும்பாவியை கொளுத்தி எதிர்ப்பைக் காட்ட வேறு வழியில்லாமல் ராவ் உண்ணாவிரத்தைத் தொடர்ந்தார். ஆனால் அதற்குள் போராட்டம் பெரும் நெருப்பாக வெளியே மாணவர்களிடம் பற்றிப் படந்திருக்கிறது.தெலுங்கானாவில் எழுந்துள்ள இந்த எழுச்சி ராவே எதிர்பாராராது. இந்த எழுச்சிக்குப் பின்னால் பன்னெடுங்கலாமாய் புரட்சிகர சக்திகள் விதைத்த விதையும் இந்த எழுச்சிக்கு ஒரு காரணமாக அமைகிறது. மிகப் பரந்த அளவிலான ஹைதராபாத முற்றுகைக்கு மாணவர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

அன்றைக்கு தெலுங்கனாவின் உழவர் புரட்சியை இந்து முஸ்லீம் பிரச்சனையாகத் திரித்த நேருவின் பாணியையே அண்டானியோ மேனியா என்னும் இயர்பெயரைக் கொண்ட சோனியா வழிநடத்தும் இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சரும் வேட்டி கட்டிய தமிழருமான பழனியப்பன் சிதம்பரமும் கையாளாகிறார்கள்.இன்றைய தெலுங்கனா கிளர்ச்சியை ஆந்திராவுக்கும் தெலுங்கனாவுக்குமான மோதலாக உருமாற்றுவதும் இவர்கள்தான். உண்மையில் தெலுங்கானா மக்களின் உணர்வு என்பது ஆந்திர மக்களுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசுக்கு எதிரான உணர்வு.

அந்தவகையில் ஒடுக்கும் சக்திகளின் நண்பனாக இருக்கும் இந்திய அரசுக்கு எதிரான உணர்வு என்கிற ரீதியில் தமிழ் மக்கள் தெலுங்கனா மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அதே வேளையில் உலகெங்கிலும் எதிர்ப்பியங்கள் தோல்வியடைந்து ஜனநாயகப் பாதைகள் தகரும் போது வன்முறை வழி போராட்டங்களே சிறந்த வழி என்பதை தெலுங்கனாவும் நமக்கு உணர்த்தி நிற்கிறது. ஆயுதப் போராட்டங்களோ மக்கள் வன்முறைகளோ நிண்ட காலப் போராட்டங்களாக மாறும் போது அது ஒடுக்கப்படும் மக்களின் எதிர்ப்பியங்களுக்கு புதிய வடிவங்களையும் அரசியல் சிந்தனையையும் கொடுக்கிறது. அந்த வகையில் மிகப் பெரிய இன அழிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழ் மக்களாகிய நாம் வன்முறைப் போராட்டத்தை  தொடர்ந்தும் இந்திய, இலங்கை அரசுகளுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளவர்களாக இருக்கிறோம்.

இந்தியா எங்கள் நட்புச் சக்தி என்று இந்தியாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தமிழக, ஈழ தலைமைகள் இன்னமும் இந்தியா போன்ற பிராந்திய விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட வல்லரசுகளிடம் இருந்து எதுவிதமான பாடங்களையும் கற்றுக் கொண்ட மாதிரி தெரியவில்லை.

சிலர் இந்தியாவின் வெளிவிவாகரக் கொள்கையை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்ற வேண்டும், அது மாறும் என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்திய மக்களை பண்டப் பொருட்களாக மாற்றி அமெரிக்க ஏகாதிபத்திய சந்தை முதலாளிகளிடம் விற்று அதை வைத்து இந்திய முதளாளிகள் வயிறு வளர்ப்பதையோ, கருணாநிதி போன்ற துரோகக் குமபல் தமிழ் மக்களை டில்லியில் காட்டிக் கொடுத்து தன் குடும்ப அரசியல், அதிகார சொத்து உருவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்வதையோ பார்க்கத் தவறுகிறார்கள்.

ஈழப் போரை ஒட்டி தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலைகளை பாசிசத் தனமாக ஒடுக்கி போராட்டக்காரார்களின் மண்டைகளை உடைத்து சிறைக்கு அனுப்பிய கருணாநிதி இன்று அதே பாணியை தெலுங்கனா போராட்டங்களை ஒடுக்க கற்றுக் கொடுக்கிறார். எப்படி உயர்நீதிமன்றத்திற்குள் புகுந்து போருக்கு எதிராகப் போராடிய வழக்கறிஞர்களின் மண்டையை கருணாநிதி ஏவிய போலீஸ் உடைத்ததோ அது போல போராடும் ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் ஆந்திர, தமிழக, மத்திய இராணுவக் கூட்டுப் படை உள்ளே நுழைந்து மண்டையை உடைக்கிறது.

முத்துக்குமாரின் தியாகத்தை ஒட்டி எழுந்த எழுச்சியை கருணாநிதி அடக்கிய போது ஈழ ஆதரவாளகளில் ஒரு சில அமைப்புகளைத் தவிற ஏராளமான தமிழ் அமைப்புகள் பயந்து போய் அஞ்சி நடுங்கி தங்களின் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட்டன. அதே நேரத்தில் அஞ்சாமல் போராடிய பல அமைப்புகளின் தோழர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டங்களை கைவிட்ட பல தமிழ் அமைப்புகள் செம்மொழி மாநாட்டின் பெயரால் கருணாநிதியோடு மறைமுகமாகவும் நேரடியாகவும் இன்று கைகோர்த்திருக்கிறார்கள்.

தமிழக மக்களின் விரோதிகளான ஜெ, கருணாவை அப்புறப்படுத்தி எதிர்ப்பியங்களை வன்முறை வழியில் முன்னெடுப்பதே தற்காலத்தில் நாம் ஒடுக்கும் சக்திகளுக்கு விடும் சவாலாகும். அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே மக்களை எதிர்ப்பியங்களில்  இணையச் செய்ய முடியும். இன்றைய நவ காலனியச் சூழலில் ஊழல் மயமானது அரசியல்வாதிகளும், அரசும் மட்டுமல்ல, மக்களும்தான்.

பெரும் பண்ணைகளும் தொழிலதிபர்களும் கோலோச்சும் தேர்தல் நடைமுறையில் மக்களுமே இத்தகைய கோடீஸ்வரர்கள் போட்டியிட்டால் மட்டுமே தமக்கும் ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். ஊழல் என்பது மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை விரவிக் கிடப்பதோடு. மக்களையும் தங்களின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் கைகோர்க்க அறைகூவல் இட்டு எதுகை மோனை திராவிடத் தமிழில் அழைக்கிறது ஆளும் வர்க்கம்.

மக்களை நக்கிப் பிழைக்கும் நாய்களாக மாற்றும் போக்கை ஊட்டி வளர்த்ததும் இந்த கருணாநிதிதான். தந்தை பெரியாருக்குப் பிறகு திராவிட இயக்கத்தைக் கைப்பற்றிய அண்ணாதுரை அதை கவர்ச்சி அரசியலில் ஆரம்ப புள்ளியாக மாற்றினார். திராவிட இயக்கத்தின் கடைசி சீரழிவு சக்தியாக இருக்கும் கருணாநிதியின் முன்னால் தோற்றுப் போன ஒரு உணர்வை தமிழ் மக்கள் இன்று பெற்றிருக்கிறார்கள்.

கையாலாக தமிழார்வலர்கள் ஒரு பக்கம், அடக்கும் போலீஸ் ஒரு பக்கம், என்று நம்பிக்கைகள் தகர்ந்து கொண்டிருக்கும் போது நேபாளத்திலும், தெலுங்கானாவிலும், வடகிழக்கிலும் எதிர்ப்பியங்கங்கள் உற்சாகமளிக்கின்றன. சமகாலத்தில் இப்பிராந்தியத்தில் எழும் மக்கள் எதிர்ப்பியங்களை தமிழ் மக்கள் காணாமல் விட்டால் இழப்பு தமிழர்களுக்கன்றி போராடுகிறவர்களுக்கு இல்லை.

இந்தக் கால ஓட்டத்தினூடாக நாம் இன்னொன்றையும் புரிந்து கொள்ள முடியும் காந்தீய சிந்தனைகள் இன்று மறு சிந்தனைக்குள்ளாக்கப்பட்டு அஹிம்சா என்னும் கருத்து பயங்கரவாத அரசுகளுக்கு எதிரான ஆயுதமாக அறிவு மட்டங்களில் முன் வைக்கப்படுகிறது. வடகிழக்கிலும், மத்திய கிழக்கிலும், ஈழத்திலும் அஹிம்சைப் போராட்டங்கள் தோல்வியுற்றுள்ளதை நாம் காண முடிகிறது. உண்மையில் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்து விட்டதாக நான் நம்பவில்லை. இன்றும் உண்ணாவிரதம் இருப்பவர்களையும், மனுக்கொடுப்பவர்களையும், பார்க்கும் போது கோமாளிகளைப் போல அவர்கள் தென் படுகிறார்கள்.

ஆமாம் அதுதான் உண்மை…இரத்தத்தை மட்டுமே பரிசளிக்கும் அரசுகளிடம் அஹிம்சை என்பது மக்களை மடையர்களாக மாற்றும் வேலை.அதைப் புரிந்து கொண்ட மத்தியகிழக்கு மக்களும், வடகிழக்கு மக்களும் ஆயுதக் கிளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இன்றைய தெலுங்கானா கோரிக்கைகள் நாளை ஆயுத வடிவத்தை எடுக்கும் என்பதில் ஐய்யமில்லை.ஆனால் தத்துவார்த்த ரீதியாக நாம் நாம் வரலாற்றிலிருந்து எதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதும் கற்றுக் கொண்டபடிப்பினையில் இருந்து பூகோள ரீதியாக வன்முறை போராட்டத்திற்கு தமிழர்கள் எப்படி அணியமாகவேண்டும் என்பதிலும், அரசியல் தத்துவம் என்கிற நிலையில் எந்தப் பாதையை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதிலுமே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

நம்பிக்கையளிக்கும் மாவோயிஸ்டுகளோடு கைகோர்ப்பதன் மூலமும் வலிமையான இடது சாரிப் புரட்சியின் மூலமே நாம் தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுத்து, பௌத்த சிங்கள பேரினவாத அரசு பயங்கரவாதிகளை தண்டிக்கவும் முடியும்.ஆமாம் எதிர்ப்பியக்கம் சாத்தியம்தான். அதுவும் ஆயுதப் போராட்டம்….

(இக்கட்டுரை  எழுதி முடித்த பின்பு தெலுங்கனா தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது ஒரு தோழர் சொன்னார். தெலுங்கனா என்று சொல்வது தவறு தெலிங்கானா என்றுதான் சொல்லவேண்டுமாம். மூன்று சிவலிங்க கோவில்கள் அங்கு இருப்பதால் தெலிங்கானா என்று பெயர் வந்ததாகச் சொன்னார் அந்தத் தோழர். )

கட்டுரையாளர்: தொம்பன்

உங்கள் கருத்துக்கள்

avatar prasath.k
0
 
 
நல்லது அப்படி நடந்தால் தமிழன் தலை நிமிர்வான்
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar உண்மை தமிழன்
0
 
 
தெலுங்கானா தெலுங்கானா என்று பாடி ஹைதராபாதை தீவைத்து கொளுத்தியதால் இப்போது எல்லா நிறுவனங்களும் சென்னைக்கு வந்துக்கொண்டு இருக்கின்றன. சென்னையிலும் சாலையை மறித்தால் பெங்களூருக்கு சென்றுவிடும். பின்னர் 6 கோடி தமிழ்நாட்டுத் தமிழனும் திருவோட்டை ஏந்திக்கொண்டு பிச்சை எடுக்க வேண்டியது தான்.
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar raj
0
 
 
நேரு ஒரு சந்தர்ப்பவாதி
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar MURUGANANTHAM A.P.
0
 
 
இது ஒரு இன மொலி பொரட்ட்ம் இதை தமிலன் செய்தால் வ்ன்முரை
பய்ஙரவதம்,திவிரவதம்,வால்க என் இந்தியா,இந்தியா இப்படியெ பொனால் கன்டிப்பாக பிரிவினைதன் எர்படும்.......
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel
avatar ukkirapandian
0
 
 
எங்கள் ஊருக்கு தனி மானில அந்தஸத்து கிடைக்குமா ? !
Name *
Email (For verification & Replies)
Code   
ChronoComments by Joomla Professional Solutions
Submit Comment
Cancel

தங்கிலிஷ் Tamil Typewritter Tamil 99
ஒன்லைன் Keymap உதவி
(ஆங்கிலத்தில் கருத்துரைக்க F12 விசையை அழுத்துங்கள்.
Use F12 to toggle between English & Unicode Tamil)
பெயர் *
Email (உங்களின் தொடர்புக்கு)
இக்குறிச் சொல்லை எழுதுங்கள்   
Submit Comment
Last Updated on Tuesday, 29 December 2009 11:26
 

இன்றைய செய்திகள்

வந்தவங்க சொன்னாங்க

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..thank god...........castro come back...................
...

இட, போக்குவரத்து நெருக்கடியால் ரசிகர்களை மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை - ரஜினிகாந்த்!!..sownthariya happy married life
i like rajni
...

திருச்சி, நெல்லையில் பெரியார் சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைப்பு!!!..வேரு வேலை இல்லையா
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..முடியும் என்ற தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு பிடல் காஸ்ட்ரோ;
...

ஜனாதிபதி மஹிந்த, நிரூபாமா ராவ் சந்திப்பு - மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் திருப்தி ?!!..இந்தியருக்கு எலும்புத் துண்டங்கள் வீசப்பட்டிருக்கலாம். உண்மைக
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..இது எப்படி இருக்கு?
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? அழகிரி, மாறன் குடும்பத்தார் ொன்ற
...

என்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் போராடி, மரணத்திலிருந்து மீண்டேன் - பிடல் காஸ்ட்ரோ!!..The success of great leaders are due to three factors; Determination, determination and

determination. Leader Castro's this "Rebirth" is a true example to all
...

எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?!!..உள் குத்து மொதல் இது.
...

அன்னை தெரேசாவுக்கு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா!!!..தமிழகம் சார்பாக நான் வாழ்த்து கூறுகிேறன்
...

Untitled Document
செய்திகள் | செய்திப்பார்வை | உலகம் | இந்தியா | இலங்கை | பதிவுகள் | english | news | articles | விளையாட்டு | கிரிக்கெட் | உதைபந்தாட்டம் | ஏனையவை | சினிமா | விமர்சனம் | குறும்படம் | செவ்விகள் | சினிசெய்திகள் | கலைகள் | கவிதை | சிறுகதை | ஒவியம் | புகைப்படம் | இசை | இலக்கியம் | ஆன்மீகம் | இராசி பலன் | வருட பலன் | ஆன்மீகம் | மனமே வசப்படு | வாரமொரு ஆலயம் | வலைப்பதிவு | வாரமொரு வலைப்பூ | வலைப் பார்வை | அறிவியல் | நுட்பத்தகவல்கள் | தமிழ்க்கல்வி | பயனுறு இணைப்புக்கள் | கட்டுரைகள் | வாழ்வியல் | உலகம் சுற்றி | இவர் யாரோ? | சமையற் குறிப்பு | பாட்டுக் கேட்கலாம் | நாகரீகக் குறிப்பு | சுகாதாரம் | பொழுதுபோக்கு | வணிகம் | வணிகச் செய்திகள் | e-அங்காடி | பங்குவணிகம் | தொடர்பு | விளம்பரத் தொடர்பு | எம்மைப்பற்றி | சிறுவர்பகுதி | சிறுவர் கதைகள் | சிறுவர் பாடல்கள் | you tube corner | இலகு முகப்பு| இணைப்புத்தர| 4தமிழ்மீடியாவின் சிறப்பான இணைய அனுபவத்திற்கு பயர்பொக்ஸ் உலாவியை பரிந்துரைக்கிறது