திரைச்செய்திகள்

கர்நாடகாவில் காலா ரிலீஸ் இல்லை.

இப்படி திட்டவட்டமாக அறிவித்துவிட்டது கர்நாடகா பிலிம் சேம்பர். பல கட்ட பேச்சு வார்த்தைகள்.

“அரசியலை சினிமாவுடன் முடிச்சுப் போடக் கூடாது. இதுவேற அது வேற...” என்றெல்லாம் பேசப்பட்டது. இந்த கூட்டங்களில் ரஜினி சார்பாக கலந்து கொண்டார் பிரகாஷ்ராஜ். வேடிக்கை என்னவென்றால் கர்நாடகாவிலிருக்கும் ரஜினி சொத்துக்களை பராமரித்து வரும் ராக்லைன் வெங்கடேஷ், கன்னட சினிமாவில் செல்வாக்கு மிகுந்தவர்.

அவர் சொன்னால் அந்த குரலுக்கு பெரும் மதிப்பிருக்கிறது. ஆனால் ராக்லைன் ஏன் ஆஃப் ஆன பொக்லைன் போல முதுகு வளைந்து படுத்துவிட்டது? என்கிற கேள்வியை எழுப்புகிறது ஆன்ட்டி ரஜினி குரூப். எப்படியோ? யார் யார் சிபாரிசையோ பிடித்து படத்தை வெளியிட்டுவிட்டார்கள்.

ஆங்காங்கே கல்வீச்சு, கலவரம் என்று தியேட்டர் பாதி நிரம்புவதற்குள் நாக்கு தள்ளுகிறதாம். போக போக சரியாகிடும்.