திரைச்செய்திகள்

கொரோனா அலை முடிந்தபிறகுதான் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித் தரப்பில் முதல் கூறப்பட்டது.

ஆனால், தற்போது ஹைதராபாத்தில் நடைபெறும் வலிமை ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில். அஜித் அங்கே தன்னை சந்தித்த ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. படமெடுத்துக்கொண்ட ரசிகர்களின் படங்களைக் கத்தரித்து எடுத்துவிட்டு அஜித் மட்டும் இருக்கும் படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். வலிமை படத்தின் அப்டேட் செய்திகளுக்காக ஏங்கி கிடக்கும் அஜித் ரசிகர்களுக்கு அவரது புகைப்படங்களில் ஆறுதல் அளித்துள்ளது.

'முத்து’படத்துக்காக வசனம் எழுதிய ரஜினி!

அந்தப் படங்களில்அஜித்தின் இடதுகையில் தெரியும் மிகப்பெரிய தழும்பு வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தால் உண்டானது என்றும் கூறப்படுகிறது. இதனைக் குறிப்பிட்டு பதிவிட்டு வரும் ரசிகர்கள் 'படத்திற்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம் தல' என அஜித்துக்கு அன்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கல் ஜல்லிக்கட்டில் மோதும் கார்த்தியும் சிம்புவும் !

இதற்கிடையே #வலிமை என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.