திரைச்செய்திகள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதன்பிறகு ரஜினியின் பரிந்துரையுடன் அமிதாப் பச்சனுடன் இணைந்து, தமிழரான பால்கி இயக்கிய ‘சமிதாப்’ படத்தில் நடித்தார். அந்தப் படமும் பிளாப். இந்நிலையில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் 'அத்ரங்கி ரே' படத்தில் அக்‌ஷய் குமாருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகி சாரா அலிகான். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது மும்பை பிலிம் சிட்டியில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தங்கியுள்ளார். தனுஷ் செல்வதற்காக ‘கோ ஏர்’ விமான சேவையில் ‘ வி.ஜ.பி. ரெண்டல்’ சேவையை பயன்படுத்தியுள்ளார். பத்துபேர் மட்டுமே பயணம் செய்யும் சொகுசு விமானம் இது.

இந்தப் படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகிவரும் 'கர்ணன்', கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறார் தனுஷ். ‘கர்ணன்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மட்டுமே தற்போது முடிந்துள்ளது. இதற்கிடையில் 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' ஆகிய படங்களின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தனுஷ் - ராம்குமார் கூட்டணி படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.