திரைச்செய்திகள்

அட்டக்கத்தி தொடங்கி கபாலி வரை அட்டகாசமான மண்ணின் கதைகளைப் படமாகத் தந்தவர் பா.இரஞ்சித்.

தற்போது ஆர்யாவை வைத்து குத்துச் சண்டைப் போட்டிகளுக்குப் பெயர்பெற்ற வடசென்னைப் பகுதியில் வாழ்ந்த ‘சார்ப்பட்டா’ ஆறுமுகம் என்பவரது வாழ்க்கை வரலாற்றை கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறார். ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றம் சற்றுமுன் வெளியானது.

மிஷ்கினின் முதல் திரையரங்க மீள் வருகையின் நினைவுகள்!

வடசென்னையில் இன்றைக்கும் இயங்கிவரும் குத்துச் சாண்டை குழுக்கள். நிழலுலகம், அரசியல் ஆகியவற்றுடன் கலந்து தலைமறைவு இயக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இன்றைக்கும் பலர் இந்தப் போட்டிகளில் பணத்துக்காக கலந்துகொண்டு உயிரை விட்டு வருகிறார்கள். வடசென்னையில் குத்துச்சண்டை மேடையை ஆக்ரோஷமாக ஆக்கிரமித்து வெற்றிக்கொடி நாட்டிய எண்ணற்ற வீரர்களை உருவாக்கிய களமாக வடசென்னை முத்திரை பதித்திருந்தாலும் அந்தப் பாரம்பரியத்தை அரசாங்கம் வளர்க்க விரும்பாமல் விட்டதற்குக் காரணம இந்த நிழலுககத் தொடர்புதான்.

ஆனால் தமிழ் சினிமாவில் வன்முறையும் குற்றங்களும் மலிந்த பூமியாக காட்டப்படும் வடசென்னை வீரம் விளைந்த மண் என நம்மை இடித்து கூறுவார்கள் வடசென்னை வாசிகள். இந்தப் பகுதியில்தான் இடியப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை என்ற பெயர்களில் அமைந்த இரண்டு குழுக்களிலிருந்து புறப்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மோதியிருக்கிறார்கள். பின்னர், எம்.ஜி.ஆர், சிவாஜி என தமிழர்கள் கொண்டாடிய மாபெரும் மனிதர்களே ரசிகர்கள் போல உட்கார்ந்து இந்தக் குத்துச்சண்டையை ரசித்திருக்கிறார்கள்.

சுதா கொங்கரா, வெற்றிமாறன், கௌதம் மேனன் இயக்கிய பாவகதைகள் வெளியீட்டுக்குத் தயார்!

ஆனால் அதன்பின்னர் இதற்குள் அரசியலும் நிழலுலகமும் நுழைந்து ரத்த விளையாட்டாக மாறியதால் இந்தக் குத்துச் சண்டை போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் போட்டிகள் இன்று போலீஸுக்கு மாமுல் கட்டி மறைமுகமாக நடத்தப்படுகின்றன. இதை பல தமிழ் சினிமாக்கள் கட்டிவிட்டன. ஆனால், உண்மையான கள வீரர்களின் கதையை யாரும் திரைப்படமாக எடுக்க வில்லை. அதைத்தான் பா.இரஞ்சித் செய்திருக்கிறார். இரண்டு பாரம்பரைகளில் சார்பட்டா பரம்பரையின் கடைசி சாம்பியனாக இருந்து, ‘நாக்அவுட் கிங்’ என்று பெயர் எடுத்த காசிமேடு ஆறுமுகம் என்பவரின் கதையைத்தான் பா.இரஞ்சித் படமாக எடுத்துள்ளார். இவர் 1977 வரை பிரபலமாக இருந்து எம்.ஜி.ஆரிடம் பாராட்டுப் பெற்றவர்.


இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.