நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.
இனி யாரும் நடிக்க அழைக்கமாட்டார்கள் என்று தெரிந்ததாலோ என்னவோ, முதன் முறையாக அவரே சொந்தமாக ‘பெளவ் வெளவ் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று திருவனந்தபுரம் அருகேயுள்ள மலைகிராமம் ஒன்றின் காட்டுப்பகுதியில் நடந்தது. அங்குள்ள ஒரு கிணற்றின் தனது நாயுடன் அமர்ந்திருக்கும்போது நமீதாவின் மொபைல் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிடுவதுபோலவும் மொபைல் விழுவதைக் கண்டு பதட்டத்தில் அதைப் பிடிக்க முயற்சி செய்த நமீதாவும் கிணற்றுக்குள் விழுந்து தத்தளிப்பதுபோலவும் படமாக்கியிருக்கிறார்கள்.
இதில் தைரியமாக நமீதா கிணற்றிலிருந்து தண்ணீரில் தொப்பென்று விழுந்து காட்டியிருக்கிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், நமீதாவின் நடிப்பைப் பார்த்து “ சூப்பர் நமீதா சேச்சி" என கை தட்டிப் பாராட்டினார்களாம். இந்தப் படத்தை மலையாளத் திரையுலகைச் சேர்ந்த இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா இயக்கி வருகிறார்களாம்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்