திரைச்செய்திகள்

தெய்வமகள் என்ற தொலைக்காட்சி நெடுந்தொடர் வழியாக தமிழ் மக்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் வாணி போஜன்.

இவர் 2010 வாக்கில் சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து, பின்னர் சின்னத் திரைக்கு சென்றாலும் மீண்டும் இவர் மீது திரையுலகின் பார்வை பட்டு ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் கதாநாயகியாக வெற்றிபெற்றிருக்கிறார். வைபவ் என்ற நடிகருடன் அடுத்தடுத்த இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து அவருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

தற்போது சியான் விக்ரம் நடிப்பில் அவர் நடிக்கும் 60-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். அதில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தைப் பற்றிய தற்போதைய செய்தி, படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜன் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது. இது வாணி போஜனுக்கு அடித்திருக்கும் மிகப்பெரிய ஜாக்பாட் என்றால் அது மிகையில்லை.

விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்திலொ ஆதித்த கரிகாலன் வேடத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார். அவர் நடித்துள்ள கோப்ரா படத்தின் பேச் ஒர்க் வேலைகள் மட்டுமே மிச்சமுள்ளன. இந்த இரண்டு படங்களும் முடிந்தபிறகு விக்ரம் - வாணிபோஜன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க இருக்கிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.