திரைச்செய்திகள்

இயக்குநர் ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணியில் உருவாகி கடந்த 2013-ல் வெளியான மலையாளப் படம்‘திரிஷ்யம்’.

மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம், ஒரியா உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் வெற்றிபெற்றது. தற்போட்து மீண்டும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது ‘த்ரிஷ்யம் 2’. இந்தப் படமும் ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதையடித்து இரண்டாம் பாகத்தையும் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளன. முதலாவதாக தெலுங்கு ரீமேக் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கும் இப்படத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மார்ச் 5-ல் தொடங்க உள்ளது.இதை ராஜ்குமார் சேதுபதி - ஸ்ரீப்ரியா, ஆன்டனி பெரும்பாவூர் தயாரிக்க உள்ளனர்.

2-ம் பாகத்திலும் கமலை நடிக்கவைக்க பேச்சு நடக்கிறது. இதன் இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ், இந்தி ரீமேக்குகளும் உடனடியாகத் தொடங்கப்பட உள்ளன. மற்ற மொழிகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ஜித்து ஜோசப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தெலுங்கு சினிமாவின் மூலம் தமிழ்சினிமாவுக்கு வந்த பஞ்சாபிப் பெண் ரகுல் பிரீத் சிங்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.