திரைச்செய்திகள்

நகைச்சுவை படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குநர் எம். ராஜேஷ்.

அவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இந்தப் படத்துக்கு 'வணக்கம்டா மாப்ள' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதில் அம்ரிதா ஐயர், ஆனந்த்ராஜ், டேனியல், ரேஷ்மா உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்து வருகிறார்கள்.

தற்போது 'வணக்கம்டா மாப்ள' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சன் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. அதற்கு முன்னதாகத் திரையரங்குகளிலும் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட பாடல்களிலிருந்து ஒரு பாடலை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. டிக் டாக் செயலியில் தேனியைச் சேர்ந்த நெட்டிசன் ஒருவர் பயன்படுத்தும் ‘வணக்கம்டா மாப்ள’ என்ற வார்த்தை இணையத்தில் பிரபலமானது. தற்போது அதையே தனது படத்தின் தலைப்பாக இயக்குநர் ராஜேஷ் பயன்படுத்தியிருக்கிறார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.