திரைச்செய்திகள்

பல வெற்றி பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி.

பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டு பல ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர். தற்போது பெம்பூ ட்ரீஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக T.ஜீவதா கிஷோர் தயாரிக்க அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கும் “3.33” எனப்பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடன இயக்குனர் சாண்டி கதாநாயகனாக நடிக்கின்றார். திகிலூட்டும் ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் ஆமானுஷ்ய ஆய்வாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘இயக்குனர் கௌதம் மேனன் அவர்களின் வரவு எங்கள் “3.33” படத்தின் தரத்தை மேலும் அதிகரித்துள்ளது. அவருடன் பணியாற்றியது மறக்கமுடியாத நிகழ்வு. சென்ற மாதம் இப்படத்தின் நாயகன் சாண்டி இருக்கும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டோம், தற்போது இயக்குனர் கௌதம் மேனன் அவர்களின் பிறந்த நாளன்று அவர் இருக்கும் இரண்டாம் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளோம்.’ என்று இயக்குனர் நம்பிக்கை சந்துரு கூறினார். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.