திரைச்செய்திகள்

தனது அப்பா மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தீவிர அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார் உதயநிதி.

அதேநேரம் ஒப்பந்தமாகியுள்ள படங்களிலும் நடித்து வருகிறார். 'சைக்கோ' படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. மாதத்தில் 15 நாட்கள் தீவிர பிரச்சாரம், 15 நாட்கள் படப்பிடிப்பு என்கிற பாணியில் பணிபுரிந்து வருகிறார். மகிழ் திருமேனி படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். மேலும் ஆரவ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது உறுதியாகியுள்ளது.

இதில் உதயநிதிக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நாயகனாக மட்டுமே நடித்து வந்தார் ஆரவ். இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே, வில்லனாக நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 45 விழுக்காடு படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது.

தற்போது திருச்சியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. இதற்குப் பிறகு தேர்தல் முடிந்தவுடன் தான் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. இதற்கிடையிடையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிட இருக்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.